Skip to main content

Posts

Showing posts with the label எஸ் வைதீஸ்வரன்

ஒன்ஸ் மோர்

அவனுக்கு மட்டும் எப்படி தபால்பெட்டியில் கார்டு மாதிரி தன் உடம்பைக் கிணற்றுக்குள் போட்டுவிட முடிகிறது? தன் வாழ்வைக் குப்பைக் கடுதாசி போல் எட்டாம் மாடியிலிருந்து விட்டெறிந்து விட முடிகிறது? தற்கொலை செய்து கொள்வது, தண்ணீரில் குளிப்பதைப் போல் மனசில் ஒட்டாத விஷயமா? உயிர் வெறும் எச்சிலா 'பச்' சென்று துப்பிவிட? பிறவியில் உயிரை உடம்புக்கு வெளியில் ஒட்டிக்கொண்டு வந்தானா ஆறாவது விரலாக? வேண்டியபோது வெட்டி விட। பட்டப் பகலில், முன் கூட்டியே பாலை எதிர்த்த வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்து விட்டு, பின்கதவை பூனை வராமல் இழுத்து மூடி, அடுப்பில் கொதிக்கும் கிழங்குகளை இறக்கி வைத்து மூடிவிட்டு ''எதற்கும் கவலைப் படாதே, குழந்தையைப் பார்த்துக்கொள் போகிறேன்,''என்று முத்தமுடன் காகிதம் எழுதிப் பார்வைக்குத் தப்பாத இடத்தில் பத்திரப் படுத்திவிட்டு, வாசலில் சோறு வைத்துவிட்டு பொருத்தமான கறுப்பு உடுப்புகளை இறுக்கமாகப் போட்டுக்கொண்டு, தூளிக் கயிறு, காலைவாரி விடாதவாறு ஒருமுறைக்கு இருமுறை இழுத்துப் பார்த்துவிட்டு, உத்தரக் கம்பியின் உயரத்தை அளந்து கட்டி கழுத்து முடிச்சுகளை கச்சிதமாகப் போ...