Skip to main content

Posts

Showing posts with the label இரா. வசந்த குமார்

மாமா எங்க?

சிறுகதை "மாப்ளை.. கதவத் தெறடி..யேய்.." வரும்போதே கடைக்குச் சென்று விட்டு வருகிறார் என்பது குரலிலிருந்தே தெரிந்தது. மாமாவுக்கு எப்போதும் இதே வேலையாகி விட்டது. கடைக்குப் போய் தண்ணியடித்து விட்டு நேராக எங்கள் வீட்டுக்குத் தான் வருவார். அவர் வீட்டுக்குப் போகவே மாட்டார். காலையில், சேவல் கூவி, நாங்கயெல்லாம் ஸ்கூலுக்குப் போன பின்னாடிதான் போவார். சொக்கலிங்கம் மாமா எங்களுக்கு கொஞ்சம் பக்கத்து மாமா. எங்க ஊருக்குப் பக்கத்து ஊருக்கு கிட்டக்க தான் அவருக்கு பொண்ணு எடுத்திருக்காப்ல. அதனால, ஆ.. ஊ..னா மாமியார் வீட்டுக்குப் போயாறேன்னு கெளம்பிடுவாக. ஆனா அங்க போகாம, எங்க வீட்டுக்கு தான் வருவாங்க. அப்பாகிட்ட பணம் வாங்கிட்டு போய் கடைக்குப் போய் தண்ணியடிச்சுட்டு எங்கயாவது போய்ட்டு, காலையில வீட்டுக்குப் போயிடுவாங்க. சிலசமயம் எங்க வீட்டுக்கும் வந்து படுத்துக்குவாங்க. அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுனாலும், ஒண்ணும் சொல்ல மாட்டார். வழக்கமா அமைதியா வருவாரு. மெதுவா கதவத் தட்டி, அம்மாவைக் கூப்பிடுவாரு. அம்மா வந்து அழும். 'ஏண்ணே, இப்படியெல்லாம் குடிச்சு ஒடம்ப கெடுத்துக்கறேனு' அழும். அங்க ஒரு பாச...