Skip to main content

Posts

Showing posts from November, 2019

துளி - 76 - நாளை பங்களூர் செல்கிறேன்

அழகியசிங்கர் நாளை காலையில் டபுள் டக்கரில் பங்களூர் செல்கிறேன்.  மூன்றாம் தேதி திரும்பி வந்துவிடுவேன்.   ஒன்றாம் தேதி என் பிறந்தநாள்.  பங்களூரில் இருப்பேன்.  ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகிறேன். படித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.  உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்குப் போகிறேன். அது ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.   பிளாசம்ஸ் என்ற புத்தகக் கடைக்குப் போகிறேன்.  புத்தகம் எதாவது வாங்குவேன். பங்களூரில் சில நண்பர்களைத்தான் சந்திக்க முடியுமென்று நினைக்கிறேன்.  அதுவும் திங்கட் கிழமை ஒருநாள்தான் பார்க்க முடியும்.   போன முறை பங்களூர் போய் வாங்கிவந்த புத்தகங்களை இன்னும் படிக்கவில்லை.  இந்த முறை பங்களூரிலிருந்து திரும்பி வரும்போது வாங்கிக் கொண்டு வரும் புத்தகங்களை சிறிதளவாவது படிக்க வேண்டும்.  பராசக்தி அருள் புரியவேண்டும். 

அம்பையின் சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

அழகியசிங்கர் இன்றுதான் முடித்தேன். ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டேன்? இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நானும் சில புத்தகங்களைக் கொண்டு வர வேண்டியிருந்தது.  நாவலை முடிக்க வேண்டியிருந்தது. படிப்பதில் கவனம் இல்லை.  ஆனால் ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு நாளும் எடுத்து வாசித்துவிடுவேன்.   நான் புத்தகக் காட்சி போது அம்பையின் எந்தப் புத்தகம் வந்தாலும் வாங்கி விடுவேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வாங்கியது ஒரு சிறுகதைத் தொகுப்பு  'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை.' 168 பக்கங்களில் 13கதைகள் கொண்ட தொகுப்பு.  உள்ளிருந்து புற உலகைப் பார்பதற்கான சன்னல் எனும் திறப்பு தொடர்ந்து தன் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகக் கருதுவதாக அம்பை குறிப்பிடுகிறார்.  அதேபோல் இவருக்குப் பயணம் செய்வதில் அலுப்பே ஏற்பட்டதில்லை போல் தோன்றுகிறது.  இத் தொகுப்பில் பயணம் 21, பயணம் 22, பயணம் 23 என்று பெயரிட்ட கதைகள் இருக்கின்றன.   நான் முதலில் இத்தொகுப்பில்  'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை,' என்ற சிறுகதையைத்தான் படித்தேன்.  அந்தக் கத...

துளி - 75 - நாவல் எழுதியது எப்படி - 2

அழகியசிங்கர் சரி, நாவல் அவ்வளவு சுலபமாய் எழுதி விட முடியுமா?  முடியும். ஆனால் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப எளிது.  அதன்பின் சிறுகதை கவிதை எழுதுவதை விடச் சற்று சிரமம்.  கட்டுரையும் அப்படித்தான்.  ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதாக இருந்தால் பல புத்தகங்களைப் படிக்க வேண்டும். படித்துக் கோர்க்க வேண்டும். நான் இப்போது எழுதி உள்ள 'தனி இதழ் நன்கொடை ரூ.20'. உண்மையில் என் முதல் நாவல்.  இரண்டாவதாக வந்து விட்டது. எப்போதோ ஆரம்பித்தேன்.   'ஞாயிற்றுக் கிழமை தோறும் தோன்றும் மனிதன்.'  என் முதல் நாவலாக மாறிவிட்டது. ஒரு நாள் பகல் நேரத்தில் வெகு நேரம் தூங்கி எழுந்தவுடன், யாரோ சொன்னதுபோல் (ஷ்ரடி சாய் என்று நினைக்கிறேன்) தோன்றியது 'உன் நாவல் கணினியிலேயே இருக்கிறது' என்று.  உடனே கணினியைத் தட்டினேன்.  5 ஆண்டுகளுக்கு முன் நான் அம்ருதா பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் கிடைத்தன. அவற்றை எல்லாம் தொகுத்து 'எதையாவது சொல்லட்டுமா' என்ற கட்டுரைத் தொகுதி கொண்டு வந்தேன்.  பின் முதல் நாவலைத் தேதி வாரியாக நான் குறித்து வைத்திருந்தேன்.  அது புது வி...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 127

அழகியசிங்கர்    பாம்புகளற்ற மகுடிகள் சௌந்தர மகாதேவன் அவன் விதவிதமாய்  மகுடிகளோடு மண்டியிட்டு அமர்ந்திருக்கிறான்.  படமெடுக்கும் பாம்புகளை ஆசையாய் அடக்க அவன் முன்னால்  அழகழகாய் மகுடிகள். மொழியாய் ஒரு மகுடி  வண்ணமயமான மாயாஜால ஜிகினாவாய் ஒரு மகுடி  விவாதக்கூச்சல்களோடு  ஒலிவாங்கியாய் ஒரு மகுடி  விசும்பல் ஒலியோடு ஒரு மகுடி ஒவ்வொரு மகுடியையும்  அவன் எடுத்தெடுத்து ஊதினான்  பிடாரனின் ஓசை காற்றில் கிளம்பியதைக்  கேட்டன செவியில்லாப் பாம்புகள் அனைத்தும் மகுடி மயக்கம் மரணத்தொடக்கமென  ஆடுதல் விடுத்து அப்பால் நகன்றன பாம்புகள் இல்லாப் பிடாரன் அன்றிலிருந்து வாசித்தலை  நிறுத்தினான் யோசித்தலுடன் நன்றி : தண்ணீர் ஊசிகள் - சௌந்தர மகாதேவன் - மேலும் வெளியீட்டகம், 9 இரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை 627002 - பக்கங்கள் : 118 - விலை : ரூ.120

எழுத்தாளர் சா.கந்தசாமியின் உரை - ஒளிப்பதிவு 1, 2

எழுத்தாளர் சா.கந்தசாமியின் உரை - ஒளிப்பதிவு 1, 2 அழகியசிங்கர் யுவால் நொவா ஹராரியின் 'சேப்பியன்ஸ்' பற்றி எழுத்தாளர் சா கந்தசாமி 16.11.2019 அன்று உரை நிகழ்த்தினார். அந்த உரையின் ஒளிப்பதிவை இங்கு பகிர்கிறேன்.

கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்கவில்லை

அழகியசிங்கர் இன்று காலையில் தினமணி நாளிதழை பார்த்தவுடன் நான் புதிதாகக் கொண்டு வந்த 'காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேசங்கள்' என்ற ஸ்ரீதர்-சாமா புத்தகம் மதிப்புரை நூல் அரங்கம் பகுதியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தொலைபேசி எண் 044-24710610. இது நவீன விருட்சம் பெயரில் உள்ள தொலைபேசி எண்.   நான் அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்தவுடன் இந்தப் புத்தகம் குறித்து விசாரணை இருக்குமென்று நினைத்தேன்.  எதுவுமில்லை.  ஏன்எனில் கடந்த 10 நாட்களாக என் வீட்டிலுள்ள போன் சரியில்லை இதற்குப் புகாரும் கொடுத்திருந்தேன்.  ஏன் பிஎஸ்என்னில் உள்ள முகநூல் நண்பர் மந்திரமூர்த்தியும் எனக்காக புகார் கொடுத்திருந்தார். ஆனால் ஒரு பிரயோஜனுமில்லை. சற்றுமுன் அதாவது மதியம் 2 மணிக்கு மேல் வந்திருந்து போன் மாத்திரம் சரிசெய்துவிட்டு அவசரம் அவசரமாக போய்விட்டார்கள்.  ஆனால் நெட் சரியில்லை.  பிஎஸ்என்லின் சேவை வருத்தமளிக்கிறது.  சீக்கிரமாக எல்லோரும் பிஎஸ்என்லைவிட்டு விருப்ப ஓய்வு போகப் போவதால் இந்தத் தொய்வா என்பது தெரியவில்லை. ஆனால் தினமணியில் வந்த மதிப்புரைக்க...

துளி - 74 - நாவல் எழுதியது எப்படி - 1

துளி - 74 - நாவல் எழுதியது எப்படி - 1 அழகியசிங்கர் பல ஆண்டுகளாக ஒரு கவிதை எழுதுபவர் என்னுடன் நண்பராக இருந்தார்.  அவருடன் பழகும்போது எனக்கு அவரைப் பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது.  அவர் ஒரு கவிஞர். கவிதை மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர் விமர்சகர்.  ஆனால் அவர் நாவல் எழுத வேண்டுமென்ற முயற்சியில் தோல்வி அடைந்து விட்டார்.  அவருடைய வாழ்க்கை முறை எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒருவர் எப்படி அதுமாதிரி வாழ்க்கை நடத்த முடியுமென்று தோன்றியது. ஆனால் அவர் வாழ்ந்து காட்டினார்.  தனக்கு தோன்றியபடி வாழ்ந்தார். திறமை உள்ள ஒருவர்.  புத்தகம் படிப்பார். எழுதுவார் அவ்வளவுதான் அவர் வாழ்க்கை. வறுமையில் அவர் ரொம்பவும் சிரமப்பட்டார்.  மற்ற எழுத்தாளர்களை அவர் மதித்ததே இல்லை.  இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி  நாவல் எழுதினால் என்ன? இந்தக் கேள்விதான் இந்த நாவல்;.  என் நாவல் இப்படித்தான் ஆரம்பித்தது.  ஆனால் அதைத் தொடர்ந்து எழுதி முடிக்க முடியவில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக நினைத்தபோது எழுதிக் கொண்டிருப்பேன். முடிப்பேன் என்று கூட நினைத்துப் பார்க்கவி...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 126

அழகியசிங்கர்     படித்துறை காரிகைக் குட்டி மாலை நேரங்களில் படித்துறை மிக அழகு நடுவே நிற்கும் குளக்கோபுரம் மீது படரும் வெயில் மோதிக் கோபுர நிழல் நீரில் விழுகிற போது மீன்கள் நீரினுள் சலசலத்து நீந்திச் சென்று படர்ந்த படித்துறைப் பாசிகளைத் திண்ண செதில்களை அசைத்து அசைத்து என் முகம் காண வந்தது போல ஒரு பாவனை. குளித்துக் கரையேறிய ஒருவர் வழுக்கி மீண்டும் குளத்தில் விழுந்த போது அடிவயிற்றில் குபீரென்றச் சிரிப்பு வெடித்துக் கொண்டு எழும் மதிலின் மீது வளரத் தொடங்கும் அரசமரச் செடி உச்சி கோபுரத்தில் வந்தமரும் ' குனுகுனு”க்கும் மயில்நிறப் புறா மெல்லப் படரும் இருள், குளிரும் காற்று சிலுசிலுக்க வைக்கும் ஒரு நொடி நன்றி : யாரோ ஒருவன் - காரிகைக் குட்டி - பக்கம் : 120 - விலை ரு: 100 - வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், 17 பாயக்காரத்தெரு, உறையூர், திருச்சி - 620 003 - தொ. பேசி : 9443284823

இன்றைய கூட்டம்

அழகியசிங்கர் சில தினங்களுக்கு முன்னால் எழுத்தாளர் வையவன் கூப்பிட்டு காசியபனின் அசடு பற்றிப் பேச முடியுமா என்று கேட்டார்.  சரி என்றேன். அந்த சிலநாட்கள் வந்து முடிந்து விட்டன.  கூப்பிட மறந்து விட்டார் என்று நிம்மதியாக இருந்தேன். ஒரு நாள் அவரிடமிருந்து தொலைப்பேசி.  உங்கள் சிறுகதைகள், கவிதைகள் குறித்து கூட்டம் நடத்துவதாக உத்தேசம் என்றார்.  எனக்கு ஆச்சரியம்.  ஒருவரை ஒருவர் பார்த்தால் கூட முகத்தைத் திருப்பிக் கொண்டு போகும் உலகம் இது.   என்னை விட முத்த எழுத்தாளர் என்னைக் கௌரவப்படுத்த நினைத்தபோது ஆச்சரியம் பொங்கியது.  நானும் கிட்டத்தட்ட அவர் மாதிரிதான்.  கூட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறேன். என் நண்பர்கள் சிலபேர்களைக் கூப்பிட்டேன்.  மனைவியை அழைத்தேன். வருகிறேன் என்றாள்.  பொதுவாகப் புத்தகங்களைப் படிப்பதில்லை. எழுத்தாளர்களின் உன்னதம் தெரிவதில்லை என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் அங்கங்கே சில கூட்டங்கள் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

துளி - 72 தீபாவளி மலரும் நானும்...4

அழகியசிங்கர் கடந்த சில தினங்களாக ஒரு தீபாவளி மலரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.  அது ஆனந்தவிகடன் தீபாவளி மலர்.  அதில் நகுலன் சிறுகதை இருந்தது.  காவ்யா ஷண்முகசுந்தரத்திற்குக்கூட அந்தக் கதையைப் பிரதி எடுத்து நகுலன் சிறுகதைகளுடன் சேர்க்க அனுப்பியிருந்தேன்.  அந்தத் தீபாவளி மலரை என் நண்பர் கொடுத்திருந்தார்.  அது இப்போது காணும்.   நகுலன் சிறுகதையை வாங்கிப் பிரசுரம் செய்திருக்கிறார்களே என்று நினைத்தேன்.  ஒவ்வொரு தீபாவளி மலரிலும் நான் முதலில் விரும்பிப் படிப்பது தலையங்கள். 2019ல் வெளிவந்த அமுதசுரபி தீபாவளி மலரில் எனக்குப் பிடித்த தலையங்கத்தின் ஒரு பகுதி : 'உயர்ந்த ஆன்மிகவாதியின் மனத்தில் பிறமத விரோதம் கடுகளவும் இராது.  அப்படிப்பட்ட மிக உயர்ந்த ஆன்மிகவாதியாய்த் திகழ்ந்ததால் தான் நம் தேசப்பிதாவால் üரகுபதி-ராகவ ராஜாராம்' என்று சொன்னதோடு ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று சேர்த்துச் சொல்ல முடிந்தது.' லேடீஸ் ஸ்ஷெல் தீபாவளி மலரில் அதன் ஆசிரியர் இப்படி எழுதியிருக்கிறார்.  'லேடீஸ் ஸபெஷல் தீபாவளி மலர் என்னைப் பொறுத்தவரை ஒரு ல...

துளி - 71 இந்த விலையில் நிச்சயமாகக் கிடைக்கவே கிடைக்காது

அழகியசிங்கர் நானும் நண்பரும் ஏ கே கோபாலன் பப்ளிஷர் குடும்பத்தாரைப் போய்ப் பார்த்தோம்.  இப்போது ஏ கே கோபாலன் இல்லை. அவர் புதல்வர் ஜி கிருஷ்ணமூர்த்தியும் இல்லை.  அவர்கள் பதிப்பித்த புத்தகங்கள் இருக்கின்றன.  நாங்கள் தற்செயலாக மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் புத்தகத்திற்காகப் போனோம். அங்கு இன்னும் சில புத்தகங்கள் வருடக் கணக்கில் யார் கண்ணிலும் வெளிச்சம் படாமல் இருக்கின்றன.  அதில் ஒன்றுதான் பாரதியார் புத்தகம். 849 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  பாரதியார் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எல்லாமே இருக்கின்றன.  இப்படி ஒரு புத்தகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.  இரண்டாயிரத்து ஒன்றில் வந்த புத்தகத்தைக் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல் தோன்றுகிறது.  எல்லாம் பொடி எழுத்தில் எப்படி அச்சடித்தார்கள் என்பதே தெரியவில்லை.  கைக்கு அடக்கமாக இருக்கிறது.  பாரதி முழுவதும் கைக்கு வந்துவிட்ட உணர்வு எனக்குள் ஏற்படுகிறது.  இந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு இங்கும் அங்கும் நடக்கிறேன்.   இதன் விலை ரூ.125தான்...

துளி - 70 - தயங்காமல் வாங்குங்கள்...

அழகியசிங்கர் சில தினங்களுக்குமுன் வாசிப்போம் வாசிப்போம் பகுதியில் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தேன். அதைப் படித்தவுடன் என் இலக்கிய நண்பர் ஒருவர் தீவிரமாகி விட்டார். அவர் முயற்சியில் நான் குறிப்பிட்டப் புத்தகத்தின் விற்காத பிரதிகளை எடுத்து வந்தோம். இது ஒரு ரேடியோ நாடகம். காந்தி இறந்தபின் உடனடியாக எழுதப்பட்ட ரேடியோ நாடகம். ஜெர்மன் மொழியிலிருந்து நேரிடையாக தமிழில் மொழி பெயர்த்தவர் ஜி கிருஷ்ணமூர்த்தி. இந்தப் புத்தகத்தை ஏ கே கோபாலன் என்பவர் பதிப்பித்துள்ளார்.   இந்தப் புத்தகம் எல்லோருக்கும் போகவேண்டும் என்ற உயரிய நோக்கமே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. புத்தகத்தின் பெயர் 'மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்.' கெட்டி அட்டைப் போட்டு இந்தப் புத்தகத்தை அருமையாக தயாரித்துள்ளார்கள்.  இந்தப் புத்தகத்தின் விலை ரூ.25தான். பணத்தை என் கணக்கில் அனுப்பி வைத்தால் உடனடியா புத்தகத்தை அனுப்பி வைப்பேன். இந்தப் புத்தகத்தை நண்பர்கள் யாருக்காவது அன்பளிப்பாக நீங்கள் தரலாம். அல்லது திரும்ணம் போன்ற ஒருவைபவத்தில் நன்கொடையாகக் கொடுக்கலாம். பணத்தை அனுப்பிவிட்டு முகவரி...