Skip to main content

Posts

Showing posts from March, 2019

நீங்களும் படிக்கலாம் - 49

அழகியசிங்கர் படிக்க வேண்டிய கதைகள் சென்னையிலிருந்து அமெரிக்கா வரும்போது 4 தமிழ்ப் புத்தகங்களும் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வந்தேன்.   கிட்டத்தட்ட 30 புத்தகங்களுக்கு மேல் எடுத்துவர தீர்மானித்திருந்தேன்.  இங்கே பொழுது போவது கடினமாக இருக்குமென்று தோன்றியது.  ஆனால் கடைசி நிமிடத்தில் என் மனைவியின் அதைரியத்தால் புத்தகங்களை எடுத்துவரும் பெரிய பையைத் தூக்கிக்கொண்டு வரவில்லை.  முக்கியமாக ஜோல்னாப் பையையும் எடுத்து வரவில்லை. ஆனால் அதற்குப்பதில் 2011ல் வாங்கிய கின்டல்  இருந்தது.  இதில் ஏகப்பட்ட புத்தகங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  அதைப் படிக்கலாம் என்று  தோன்றியது. மேலும் பிடிஎப் ஆக சில புத்தகங்களை டௌன் லோட் செய்து லாப்டாப்பில்.  ஆனால் இங்கே வந்தபிறகு அமெரிக்கன் நூலகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எடுத்து வரலாமென்று தெரிந்தத.  அதிலிருந்து 10 புத்தகங்களை எடுத்து வந்திருப்பேன்.   புத்தகம் படிப்பதும் அது குறித்து எதாவது எழுத முடியுமா என்று பார்ப்பதும்தான் என் பொழுதுபோக...

தெருவில் ஒளிரும் குழல் விளக்கு

அழகியசிங்கர் நீண்ட குழல் விளக்கொன்று ஒளிர்ந்து கம்பீரமாக நின்றது குறுகிய வட்டத்தில் ஒளியைச் சிந்திய வண்ணம் வெளியே தலையைக் காட்டி போகலாமாவென்று யோசித்தேன் வேண்டாம் என்றது ஒளிர் விளக்கு வாழ்க்கை வித்தியாசமாக இருக்கிறது எண்ணங்கள் எங்கங்கோ சென்றவண்ணம் உள்ளன

துளி : 40 - அவர்கள் நாகரீகமானவர்கள்

துளி : 40 - அவர்கள் நாகரீகமானவர்கள் அழகியசிங்கர் ஆரம்பத்தில் நான் அமெரிக்காவைப் பற்றி நினைக்கும்போது, அமெரிக்கா ஒரு பணக்கார நாடு.  பிச்சைக்காரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.  பிச்சைக்காரர்கள் இல்லாத உலகமே இல்லை.  என் கற்பனை முட்டாள்தனமானது.  ஏன் அப்படி நினைத்தேன் என்றால் செல்வ செழிப்புள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பதால்.   2011 ல் நான் வந்தபோது நியூயார்க் என்ற இடத்தில்தான் ஒன்றிரண்டு பிச்சைக்காரர்களைப் பார்த்தேன்.  அப்போது நான் ப்ளோரிடாவில் இருந்தேன்.  இப்போது பினீக்ஸ்.  சில தினங்களுக்கு முன்னால் நான் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் தட்டியை வைத்துக்கொண்டு இருந்தாள்.  தட்டியின் வாசகம் இப்படி எழுதியிருந்தது.  எதாவது உதவி செய்ய முடியுமா என்று.   எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  பிச்சை எடுப்பவர்கள் கூட நாகரீகமான முறையில் ஒரு தட்டியில் வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக் கிறார்களே என்று. சென்னையில் காலையில் சரவணபவன் அருகில் வந்தால் குறைந்...

துளி : 39 - வாரிசுகள் வேண்டுமா?

அழகியசிங்கர் இன்றைய அரசியல் கட்சிகளை ஒருவர் கூர்ந்து பார்த்தால் வாரிசு இல்லாத கட்சி எதாவது இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.   அந்தக் காலத்தில் அரசர்கள் ஆட்சியைப் பார்க்கும்போது ஒருவர் ஆட்சி முடியும்போது அந்த அரசரின் வாரிசுதான் ஆட்சி செய்வார்.  வாரிசு இல்லையென்றால் யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து அரசரைத் தேர்ந்தெடுப்பார்கள்.  முகலாயர்கள் ஆட்சி செய்யும்போது இது இன்னும் தெளிவாகவே தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சியில் இது வாரிசு ஆட்சி இல்லை என்று மறுத்தாலும் வாரிசு ஆட்சிதான் மறைமுகமாகவோ நேரிடையாகவே நடைபெறாமலில்லை. நேருக்குப் பிறகு இந்திரா காந்தி, இந்திரா காந்திக்குப் பிறகு ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, இவர்களுக்குப் பிறகு ராகூல் காந்தி என்று இது தொடரத்தான் செய்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் தலைவர் பதவியை வகுத்துள்ளார்.  இதற்குத் தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.  இன்னும் தேர்தலில் கலந்துகொள்ளும் பல அரசியல்வாதிகளின் வாரிசுகளின் புதல்வர்கள் அல்லது புதல்விகள் தேர்தலில் போட்டி இடுகிற...

துளி : 38 - அசோகமித்திரனின் நினைவுகள்

அழகியசிங்கர் 2017ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் தேதி அப்பா இறந்து விட்டார்.  அசோகமித்திரன் துக்கம் விஜாரிக்க ரவியுடன் வந்திருந்தார்.  எனக்கு ஆச்சரியம்.  அந்தத் தள்ளாத வயதில் துக்கம் விஜாரிக்க வந்திருக்கிறார் என்று தோன்றியது.  சில நிமிடங்கள் இருந்துவிட்டுக் கிளம்பி விட்டார்.  ஆனால் அசோகமித்திரனால் மாடி ஏறுவது சிரமம்.  அதனாலேயே அவர் டிஸ்கவரி புக் பேலஸில் கூட்டம் என்றால் மாடி ஏறி வர விரும்ப மாட்டார். என் வீட்டிற்கு மாடி ஏறி துக்கம் விஜாரித்ததை மறக்க முடியாத அனுபவமாக நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.   சிலசமயம் அசோகமித்திரன் போன் செய்யும்போது நான் வீட்டில் இல்லாதத் தருணத்தில் அப்பாதான் போனை எடுப்பார்.  ஹோமியோபதி மருந்துகளை அவருக்குச் சிபாரிசு செய்வார்.  கான்சரே ஹோமியோ மருந்துகளால் தீர்க்க முடியும் என்ற அளவிற்கு நம்பக் கூடியவர்.    என் டேபிளில் அசோகமித்திரனின் மொத்தக்  கதைகளையும் உள்ள புத்தகத்தை (கவிதா பதிப்பகம்) வைத்திருந்தேன். அப்பா எடுத்துப் படித்துவிட்டார்.  கூட்டம் நடத்தும் நான் கூட வயதானவர்களின் அவதியை ...

துளி : 37 - கடையா விளையாட்டு மைதானமா?

அழகியசிங்கர் இரண்டு நாட்களுக்கு முன் அமேசான் கின்டல் வாங்கவேண்டுமென்றேன் புதல்வனிடம்.  அமெரிக்காவில் இருந்துகொண்டு அதிகமாகப் பணம் செலவு வைக்கக் கூடாது என்ற எண்ணம் இருந்துகொண்டிருந்தது.  என்னமோ எனக்கு சில எலக்டிரானிக் பொருள்கள் குறைவான விலைக்கு இங்குக் கிடைப்பதாகத் தோன்றுகிறது.  அதனால்தான் கின்டல் வாங்க முயற்சி செய்தேன்.  போன முறை (2011) சோனி காமரா கூட அமெரிக்காவில்தான் வாங்கினேன்.  அதை விட இன்னும் சிறப்பாக உள்ள காமரா வாங்கலாம் என்று கூடத் தோன்றுகிறது.  புதல்வன் அதெல்லாம் வேண்டாம் ஸ்டாப் என்று சொன்னால் நிறுத்திவிடுவேன்.   வ்ரைஸ் என்ற கடைக்கு புதல்வன் அழைத்துக்கொண்டு போனான். பிரமித்து விட்டேன்.  இப்படி ஒரு கடையைக் கற்பனை செய்ய முடியவிலலை. சென்னையில் ஒரு தெரு முழுவதையும் கடையாக மாற்றினால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது கடை.   கடை உள்ளே செயற்கையாக மரங்கள் நட்டு வைத்திருந்தார்கள்.  பின் கடைக்குள்ளேயே ஒரு ரெஸ்டாரன்ட் இருந்தது.   என்னடா இது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.  ஆனால் கடையில் கூட்டமே இ...

தடம் என்ற தமிழ்ப் படம் பார்த்தேன்..

அழகியசிங்கர் 2011ஆம் ஆண்டு இதே அமெரிக்காவிற்கு வந்திருந்தோம்.  ப்ளோரிடா என்ற இடத்தில் தங்கியிருந்தோம்.  ஒரு ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றான்.   இதே ஒரு பெரிய கட்டடத்தில் ஏகப்பட்ட திரை அரங்குகள்.  ஒரு ஆங்கிலப்படம் பார்த்தோம்.  இரவு நேரத்தில்.  வழக்கம்போல் அந்தப் படம் பார்க்க நாலைந்து பேர்கள்தான் தென்பட்டார்கள்.  படம் என்னவென்று புரியவில்லை.  படம் பார்க்காமல் தூங்கி வழிந்தேன்.   8 ஆண்டுகள் கழித்து இப்போது பீனிக்ஸ் என்ற இடத்திற்கு வந்திருக்கிறேன்.  போனவாரம்  ஹார்க்கின்ஸ் திரையரங்கத்தில் தடம் என்ற தமிழ்ப் படம் பார்த்தேன். அது குறித்து எழுத உள்ளேன்.  திரை அரங்கத்தில் முதியவர்களுக்கு டிக்கட் விலை 8 டாலர்கள்.  மற்றவர்களுக்கு  எட்டரை டாலர்கள்.   தடம் தமிழ்ப் படத்தைப் பற்றி எழுத விரும்புகிறேன்  மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம்.  பொதுவாக திரை அரங்கில் தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது  சிறிது நேரத்தில் நெளியாமல் இருக்க மாட்டேன்.  ரொம்ப தாங்க முடியாவிட்டால் எழுந்து போ...

துளி : 36 - குளிர் போய்விட்டது..

அழகியசிங்கர் இன்று குளிர் போய்விட்டது.  வெயில் தொடங்கிவிட்டது.  பீனிக்ஸ்ஸில் வெயில் தாங்க முடியாது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  வெளியே தலை காட்ட முடிôதாம். இதன் உக்கிரம் மே மாதத்தில்தான் இருக்குமென்று நம்புகிறேன்.  பேர்ன்ஸ் அன்ட் நோபல் என்ற புத்தகக் கடையைப் பார்த்து அசந்து விட்டேன்.  நாம் விருப்பப்படி தேடும் புத்தகம் கிடைக்கவில்லை.  ஆனால் ஒரு புத்தகம் கிடைத்து விட்டது.  நான் ரொம்ப நாட்கள் தேடிக்கொண்டிருக்கும் புத்தகம்.  எர்னஸ்ட் ஹெமிங் வேவின் முழு சிறுகதைத் தொகுதி. இப் புத்தகத்தைப் பற்றி அடிக்கடி என்னிடம் படிக்கும்படி கூறுபவர் என் நண்பர் ஆர் ராஜகோபாலன் (ஆங்கிலப் பேராசிரியர்).  அவர் சொன்ன நாளிலிருந்து எங்காவது கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.  இப் புத்தகம் இன்றுதான் இங்குக் கிடைத்திருக்கிறது.  650 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை 22 டாலர்கள்.  நான் இங்கே வந்தபோது ஒவ்வொரு டாலரையும் இந்தியன் பணமாகக் கணக்குப் போடுகிறேன்.  இது ஆபத்தானது.  அப்படியெல்லாம் நாம் யோசிக்கக் க...

துளி : 35 - கணபதி கோயிலும், மலையும்

அழகியசிங்கர் நேற்று வேகமாகக் காற்று அடித்ததால் வெளியே தலை காட்ட முடியவில்லை.  என்னடா இது என்று தோன்றியது.  ஆனால் இன்று பொழுது ஆதரவு தரும்படி இருந்தது.  மேரி கோப்பா கௌன்டி என்ற இடத்தில் உள்ள மகா கணபதி கோவிலுக்குச் சென்றோம்.  பொதுவாக இங்கே உள்ள கோயில் எல்லாம் சதுர வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  குருக்களிலிருந்து எல்லோரும் தமிழில் உரையாடினார்கள்.  அன்னலட்சுமி உணவு கூடத்தில் வந்திருந்தவர்கள் எல்லோருக்கும்  இலவசமாக உணவு வழங்கினார்கள்.  தயிர்ச்சாதம் சிறப்பாக இருந்தது.  உணவு கூடத்தில் தென்றல் பத்திரிகை இருந்தது.  இலவசமாக வினியோகம் செய்ய மேஜையில் வைத்திருந்தார்கள். ஒரு பத்திரிகையை எடுத்துவைத்துக் கொண்டேன்.  அங்கிருந்து சௌத் மௌன்டன் என்ற இடத்திற்குச் சென்றோம். திருப்பதி, ஊட்டி மலைகளுக்குச் சென்ற ஞாபகம் வந்தது. அங்கிருந்து பீனிக்ஸ் என்ற இடத்தைப் பார்த்தது நல்ல அனுபவம். பலர் வந்திருந்தார்கள். குறிப்பாக வயதானவர்கள் வந்திருந்தார்கள்.  குழந்தைகள் எல்லாம் கும்மாளமிட்டிருந்தன.  அங்கேயும் பாசி மணி விற்க சில...

துளி : 34 - பீனிக்ஸில் பார்த்த தமிழ் படம்

அழகியசிங்கர் நேற்று மதியம் 3.30 மணிக்கு பீனிக்ஸில் ஹார்க்கின்ஸ் தியேட்டரில் தடம் என்ற தமிழ் படம் பார்த்தேன்.  ஹார்கின்ஸ்  என்ற பெயர் உள்ள கட்டடத்தில் 16 திரையரங்குகள் உள்ளன. ஹார்க்கின்ஸ் என்ற பெயரில் 30 இடங்களில் பீனிக்ஸ் முழுவதும் கட்டடங்கள் உள்ளன.  ஒவ்வொரு கட்டடத்திலும் 16 க்கும் மேலே திரை அரங்குகள் உள்ளன.   நேற்று நாங்கள் 3.30 மணிக்கு தியேட்டரில் நுழைந்தபோது படம் ஆரம்பித்து விட்டது.  படம் பார்க்க மொத்தமே 9 பேர்கள்தான்.  இத்தனைப் பேர்கள் உதயம் தியோட்டரில் பார்க்க வந்தால் படமே ஓட்ட மாட்டார்கள்.  வெளியே தாங்கமுடியாத குளிர்.  தியேட்டரில் வெதுவெதுப்பாக இருந்தது.  இந்தப் படம் எப்படி என்பதைப் பற்றி எழுதுகிறேன். 

நீங்களும் படிக்கலாம் - 47 - நாபிக் கமலம் - 3

அழகியசிங்கர் பிப்ரவரி மாதம் வண்ணதாசனின் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டு நான் குறிப்புகள் எழுதினாலும் திரும்பவும் கதைகள் எல்லாவற்றையும் இப்போதும் படித்தேன்.   நீங்களும் படிக்கலாம் தொகுதி 1 புத்தகத்தை அசோகமித்திரனிடம் கொடுத்தபோது அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. üஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  சிலசமயம் என்ன எழுத வேண்டுமென்று தோன்றாமல் போய்விடும்.ý  அவர் சொன்னது உண்மை என்பதை வண்ணதாசனின் சில கதைகளைப் படிக்கும்போது என்னால் உணர முடிந்தது.  அவர் கதைகள் சொல்லாமல் ஏதோ சொல்ல வருகிறார்.  வாசகன்தான் கவனமாகப் படிக்க வேண்டும். கதைகள் மூலம் மறைமுகமான அனுபவத்தைத்தான் உணர முடியும்.      7. அகஸ்தியம்  மனித உறவுகளுக்குள் நடப்பதெல்லாம் புரியாத புதிராக உள்ளது.  நடேச கம்பர் மகன் தனுஷ்கோடிக்கும் அகஸ்தியர் அத்தைக்கும் இடையில் நடந்தது என்ன?   8.  மகா மாயீ உணர்வு முழுவதையும் வெளிப்படையாகக் கூறாமல் எதிரொலிக்கும் கதை.  குடும்பத்திற்கு எதிராக திலகா தனக்குப் பிடித்த ஆணை திருமண...

நீங்களும் படிக்கலாம் - 47 - நாபிக் கமலம் - 2

அழகியசிங்கர் சி சு செல்லப்பா 'ராமையாவின் சிறுகதை பாணி' என்ற  ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.  அப் புத்தகத்தில் ராமையாவின் 200க்கும்  மேற்பட்ட சிறுகதைகளைப் படித்து விமர்சனம் செய்துள்ளார்.  ஒவ்வொரு கதையையும் படித்து அக் கதையை சுருக்கமாக எழுதி பின் அக் கதையைப் பற்றி ஒற்றை வரியில் விமர்சனம் செய்திருப்பார்.  உண்மையில் ராமையாவின் மொத்த கதைகளும் புத்தகமாக வரவில்லை.  ஆனால் சி சு செல்லப்பாவின்  புத்தகத்தைப் படித்தால் ராமையா எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தெரிந்துவிடும்.  கதைகளைப் படிக்கும் எண்ணமும் போயிருக்கும்.  கதைச் சுருக்கம் போதும் என்று விட்டுவிட்டிருக்கலாம்.  நானோ  வண்ணதாசன் 13 கதைகளின் முன் கதைச் சுருக்கத்தைத் தராமல் கதையின் தன்மையை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்.  என் குறிப்புகளைப் படிக்கும் ஒருவர், வண்ணதாசனின் கதைகளைப் படிக்கும் எண்ணம் வராமல் இருக்காது.  1. சற்றே விலகி - இந்தக் கதையில் கபாலியா பிள்ளை பகவதி என்ற பெயரை உச்சரிப்பது ஏன்?  பகவதி போய் விட்டாளா என்கிறார். எல்லோருடைய ...

நீங்களும் படிக்கலாம் - 47 - 'நாபிக் கமலம்'

அழகியசிங்கர் வண்ணதாசனின் பல சிறுகதைத் தொகுப்புகளைப் பத்திரம் பண்ணி வைத்திருக்கிறேன்.  'நாபிக் கமலம்' புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்துக்கொண்டு வந்தேன். சரி எப்போது படிப்பது? நான் அந்தப் புத்தகத்தை படிக்க நினைத்தபோது மயிலாடுதுறைக்குச் செல்ல நேர்ந்தது.  அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக எனக்குப் பட்டது.  ரயிலில் பகல் வண்டியில் பயணம் செய்ய ரிசர்வ் செய்திருந்தேன்.  மூன்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றேன்.  அதில் ஒரு புத்தகம் நாபிக் கமலம்.  முதலில் அதைத்தான் படிக்க எடுத்தேன்.  படித்தும் முடித்து விட்டேன்.  நான் படித்து முடித்த தேதி 07.02.2019.  இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் இக் கதைகளைப் படித்து முடித்து ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது.   இந்தத் தருணத்தில் நான் அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  முன்பே அங்கே இரண்டு மாதங்கள் இருப்பதற்கான திட்டம்.  இதோ நானும் மனைவியுடன்  அமெரிக்கா.   வழக்கம்போல் என் புதல்வர் வசிக்கும் வீட்டில் நான், மோகினி, ஜெகன் சந்தித்துக் கொண்டோம். நாங்கள் பேசியத...

துளி : 33 - திரும்பவும் எழுந்து கொள்கிறேன்

அழகியசிங்கர் நான் அமெரிக்கா வந்து 7 நாட்கள் முடிந்து விட்டது.  நான் வைத்திருக்கும் ஒரு ஓட்டை லாப்டாப் மூலம் இதை அடித்துக்கொண்டிருக்கிறேன்.  அடிப்பதில் ஓரளவு வெற்றி என்று சொல்லலாம்.  அமெரிக்காவிலேயே குளிரை அதிகமாகக் காட்டாத இடம் பீனிக்ஸ்தான்.  ஆனால் அங்கயே என்னால் குளிரைத் தாங்க முடியவில்லை.  9 மணிக்குமேல்தான் நான் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு வாக் செய்ய முடிகிறது.  அற்புதமான இடம். பெரும்பாலும் நான் நடக்கும் இடத்தில் யாருமே என் கண்ணில் தட்டுப்படுவதில்லை.  யாரையாவது தப்பித் தவறிச் சந்தித்ததால் குட்மார்னிங் என்று சொல்கிறார்கள்.  இந்த நாகரிகம் எனக்குப் பிடித்திருக்கிறது.   வெப்பமும் நெரிசலுமிக்க சென்னை நகரத்தை விட்டு இங்கு தனிமையும் குளிரும் உள்ள இடத்திற்கு வந்திருக்கிறேன்.  என் பொழுதுபோக்கு பெரும்பாலும் புத்தகங்கள் படிப்பதுதான்.  இங்குள்ள அமெரிக்க நூலகத்திலிருந்து நான் 6 புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.  அவற்றைப் படிப்பதில் தீவிரமாக இருக்கிறேன். என் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் காலையில் 8 மணிக்குக் கு...