Skip to main content

Posts

Showing posts from April, 2018

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 86

அழகியசிங்கர்   வீடும் நண்பனும் அப்பாஸ் காலை வந்தது குளித்து, சாப்பிட்டு, அலுவலகம் புறப்பட்டேன். என் கையெழுத்து பதிவுடன் உனக்கான கோப்புகள் நகர்த்தப்பட்டன மாலை வந்தது தேநீரும், நண்பர்களும், சமூகமும் இரவு வந்தது புஸ்தகங்களும் குழந்தையும் தூக்கமும். காலை வந்தது மாலை வந்தது இரவு வந்தது கோப்புகள் நகர்த்தப்படுகிறது தேநீரும் புஸ்தகங்களும் பிரயாணமும். காலை வந்தது மாலை வந்தது இரவு வந்தது ஒரே அலையில் யாவும் மூழ்கும் அதிசயத்தில் எனது அலுவலகம், புஸ்தகம் வீடும், நண்பனும், நன்றி : வரை படம் மீறி - கவிதைகள் - அப்பாஸ் - சமி வெளியீடு 21/7 எ அசோக் நகர் 2வது தெரு, கதிரேசன் கோவில் ரோடு, கோவில்பட்டி 627702 - பக்கங்கள் : 64 - விலை : 6 - ஆண்டு : 1990

பிரமிளின் மீறல் பேட்டி...

அழகியசிங்கர் 20 ஆண்டுகளுக்கு முன்னால் பிரமிள் ஒரு ஜனவரி மாதம் ஆறாம் தேதி இறந்து விட்டார்.  அதை நினைவுப்படுத்தும் நிகழ்ச்சியாக இலக்கியவீதி இனியவன் üகருத்தில் வாழும் கவிஞர்கள்,ý என்ற தலைப்பில் பிரமிளை ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.  இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.  பிரமிள் படைப்புகளைப் பற்றி பேச கால சுப்பிரமணியன். üஅன்னம் விருது பெற்றவர் கவிஞர் ஸ்ரீநேசன். நான் திரும்பவும் என் நூலகத்திலிருந்து பிரமிளை தோண்டி எடுக்க ஆரம்பித்தேன்.  பிரமிள் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் நான் தவித்த தவிப்பைப் பற்றி நினைத்துக்கொண்டேன். வேலூர் பக்கத்தில் உள்ள கரடிக்குடி என்ற கிராமத்தில் உள்ள மருத்துவ மனையில் அவருடைய பூத உடலைப் பார்க்கும் வரை  என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது.  அவர் பூத உடலைப் பார்த்தவுடன்  என் படபடப்பு அடங்கிப்போய் சாதாரண நிலைக்கு மாறிவிட்டேன்.  இந்த மாற்றம் எனக்கு இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. மீறல் குழுவினர் பிரமிளுக்கு ஒரு சிறப்பு மலர் கொண...

நிழலும் காற்றும்....

அழகியசிங்கர் புத்தகம் விற்கிறதோ இல்லையோ அற்புதமான காற்றும், மரங்களின் நிழலும் என்னைப் பரவசப்படுத்தாமல் இல்லை.  எதிரில் ஒரு மரம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாய் காட்சி அளித்தது.  அந்த மரத்தை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்துவிடலாம்.  அவ்வளவு அற்புதம் அந்த மரம். நூல் நிலையம் இருந்தத் தெருவில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் ஒவ்வொருவர் புத்தகம் வாங்கியிருந்தால், நான் கொண்டு சென்ற புத்தகங்கள் எல்லாம் விற்றிருக்கும்.  ஆனால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வந்த மாதிரி தெரியவில்லை.  அதுதான் உலகம்.

'புறாப்பித்து' என்கிற எஸ் ராமகிருஷ்ணன் கதை

'புறாப்பித்து' என்கிற எஸ் ராமகிருஷ்ணன் கதை அழகியசிங்கர் என் கையில் 18.04.2018 ஆம் தேதியிட்ட ஆனந்தவிகடன் கிடைத்தது.  உடனே அதில் வெளிவந்த கதையைப் பார்த்தேன்.  எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய 'புறாப்பித்து' என்ற கதை.  உடனே படிக்க ஆரம்பித்தேன்.  எனக்கு என்ன தோன்றியது என்றால் ராமகிருஷ்ணனின் இந்தக் கதையை எப்படி ஆனந்தவிகடனில் பிரசுரம் செய்தார்கள் என்றுதான். இது ஒரு சிறுபத்திரிகையில் வர வேண்டிய கதை.  இக் கதையை ஆனந்தவிகடன் பிரசுரம் செய்ததன் மூலம் ஆனந்தவிகடன் தன் தரத்தை உயர்த்திக்கொண்டதாகத்தான் நான் சொல்ல விரும்புகிறேன்.   ராமகிருஷ்ணன் கதைகளை வாசிக்கும் வாசகர்கள் இக் கதையை எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.  ஆனால் சாதாரண ஆனந்தவிகடன் வாசகனுக்கு இக் கதை புரியுமா என்ற கேள்வி என்னுள் எழாமல் இல்லை. ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் இதுமாதிரியான கதைகளைப் பிரசுரம் செய்து சிறுபத்திரிகை (ஒன்றிரண்டு) என்று வரும் பத்திரிகைகளின் இடத்தை வெற்றிடமாக மாற்றி விடுகிறார்கள் என்றும் தோன்றுகிறது. அதனால் இனிமேல் சிறுபத்திரிகைகள், முன்பு பெரும் பத்திரிகைகளில் வெளிவந...

உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி கவிதைகள்

அழகியசிங்கர் ஒன்று கட்டிலில் கிடந்த புத்தகங்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன 'எப்போது எங்களைத் தொடப் போகிறாய்\ என்றன ஒவ்வொன்றும் முறைப்பாக. நாற்காலியில் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நான், 'இருங்கள் சற்று நேரம் சும்மா, யோசிக்கிறேன்,' என்றேன்.  'போதும் நீ யோசித்தது...அல்லயன்ஸ் போட்ட குபரா புத்தகத்தையே இப்போதுதான் தொடுகிறாய்.' 'உனக்குத் தெரியுமா? சிறிது வெளிச்சம் என்ற வாசகர் வட்டம் நூலை எப்போதோ படித்துவிட்டேன்,' 'இருக்கட்டும்..இன்று உலகப் புத்தகத் தினம்.. உன்னைச் சுற்றிலும் அமைதி இழந்த உலகம்.. எங்களிடம் வந்தால் நாங்கள் அளிப்போம் ஆறுதல் உனக்கு..' இரண்டு பக்கத்து வீட்டு மல்லிகாவிடம் காட்டினேன் என் முழுச் சிறுகதைத் தொகுதியை ஒன்றும் சொல்லாமல் முகத்தைச் சுழித்தாள் எதிர் வீட்டு ராமனிடம் நீட்டினேன் 'நான் இந்தத் தெருவில் நடக்க வேண்டாமா?' என்றார் எக்காளமாய் கோடி வீட்டு கோவிந்தனிடம் சொன்னேன் 'இன்னும் கதை எழுதுவதை நிறுத்தவில்லையாய்,' என்றான் படுபாவி மூன்று அந்தத் தெருவ...

இரு நிகழ்வுகள்

அழகியசிங்கர் சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளைக் குறித்து சொல்வதுதான் என் நோக்கம்.  படிப்பவருக்கு இரு நிகழ்வுகளும் சாதாரணமாகத் தோன்றக் கூடும்.   ஒவ்வொரு மாதம் மூன்றாவது சனிக்கிழமை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்துகிறேன்.  ஒரு படைப்பாளியின் மேன்மையைப் பற்றி இன்னொரு படைப்பாளி அல்லது வாசகர் பேசுவதுபோல். இந்த முறை கு ப ராஜகோபலன் என்ற படைப்பாளியைப் பற்றி சாருநிவேதிதா உரை நிகழ்த்தியதை நீங்கள் அறிவீர்கள்.  தி ஜானகிராமனை வைத்து ஆரம்பித்த இந்தக்கூட்டங்களில் எல்லோரும் சிறப்பாகவே உரை நிகழ்த்துகிறார்கள்.   இன்னொரு கண்ணோட்த்துடனும் இக் கூட்டங்களை அணுக வேண்டும்.  நாம் இந்தக் கூட்டங்களில் பேசுவதைக் கேட்டபிறகு அந்தப் படைப்பாளிகளின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.  இது முக்கியம் என்று எனக்குப் படுகிறது. சாருநிவேதிதா கு ப ரா என்ற எழுத்தாளர் பற்றி பேசியதைக் கேட்டபோது, கு ப ரா என்ற படைப்பாளியின் படைப்புகளை உடனே எடுத்துப் படிக்க வேண்டுமென்ற ஆவேசம் என்னுள் உண்டாகியது. இது பேசுபவரின் வெற்றியாக நான் கருதுகிறேன்.  இக் கூ...

உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு

அழகியசிங்கர் ஞாயிறு, திங்கள் (22, 23) இரண்டு நாட்களிலும் உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு விருட்சம் புத்தகங்களை 40% தள்ளுபடியில் ராகவன் காலனி அரசாங்க கிளை நூலகத்தில், ஜாபர்கான்பேட்டையில் புத்தகங்களை விற்க உள்ளேன். புத்தகங்களை வாங்க வரவும்.

விருட்சம் சந்திப்பு கூட்டம் 35

அழகியசிங்கர் வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் கு ப ராஜகோபாலனும் நானும் என்ற தலைப்பில் சாரு நிவேதிதா பேச உள்ளார். அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். அழகியசிங்கர் 9444113205

அடடா என்று சொல்லிக்கொண்டேன்....

. அழகியசிங்கர். ஓராண்டுக்கு முன்னால் மா அரங்கநாதன் என்ற படைப்பாளி இறந்து விட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. சிலரைப் பார்க்கும்போது நோயின் உபாதையில் நெளிந்துகொண்டிருப்பவராகத் தோற்றம் தருவார்கள்.  பேசும்போது உடல் உபாதையைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள்.  ஆனால் மா அரங்கநாதன் வித்தியாசமானவர். பலமுறை அவர் என்னுடன் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருப்பார்.  ஒருமுறை கூட உடல்நிலை சரியில்லை என்று சொன்னதில்லை.  முதுமையில் அவர் கம்பீரமாக நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்.  மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறி நான் பீச் ரயில்வே ஸ்டேஷனலில் இறங்கி எதிரில் உள்ள தேசிய வங்கிக்குச் செல்வேன்.  மின்சார வண்டியில் பயணம் செய்யும்போது மா அரங்கநாதனும் மின்சார வண்டியில் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.  அதுமாதிரியான தருணங்களில் நானும் அவரும் உரையாடிக்கொண்டிருப்போம்.  அவர் முன்றில் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தார்.  நான் விருட்சம் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தேன்.  கிட்டத்தட்ட முன்றிலும் விருட்சமும் ஒரே ...

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

அழகியசிங்கர்   எம். கோவிந்தன் நானும் சைத்தானும் தேவனுக்குரியதை தேவனுக்கும்  தேசத்திற்குரியதை அதற்கும் தர நான் முன் வந்த போது யாரோ என் முன் வந்து சொன்னான் 'எனக்குரியதை கொடு' 'யார் நீ' என்றேன்  'தெரியாதோ சைத்தானை' என்றான்  'கேட்டுக் கொள் என்னுடையவை எல்லாமே எனக்குத்தான் என்பதே இன்றுமுதல் என்வேதம்' என்றேன் சைத்தான் உரக்க சிரித்தான் என்னை சிக்கென்று கட்டிப் பிடித்தான் செவியில் மெல்ல சொன்னான் 'எனக்கு வேண்டியதைத்தான் தந்தாய் நன்றி' (சமீபத்தில் காலமான மலையாள அறிஞர், கவிஞர் எம். என். ராயின் பிரதான மாணவராக அறிவுத்துறை யிலும் மலையாள மொழியின் திராவிட மயமாக்குதலை தொடங்கி வைத்தவர் என்ற நிலையில் இலக்கியத்திலும் முன்னோடியாக திகழ்ந்தவர்) மொழிபெயர்ப்பு : ஜெயமோகன் (நவீன விருட்சம் ஜøலை - செப்டம்பர் 1989)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 85

அழகியசிங்கர்  நண்பனுக்கு கு ப ராஜகோபாலன் ஓயாமல் எண்ணியும் பேசியும்,  சளைத்துப் போய்விட்டோம் அல்லவா?  வார்த்தையை வைத்து வாதாடி  வீண்வித்தியாசம் கொண்டோம், போதும்! மாயையும் தத்துவமும் என்ன  என்று தெரியவே வேண்டாம் ;  கண்கண்ட சுகத்தைக் கடைந்து உண்போம், இனிமேல், வா!  இல்வாழ்க்கை நதி வரண்டு மணலாகும் மரணம் வரை  அதன் கரை புரளும் வெற்றியை  ஒப்புக் கொள்வோம், அதனாலென்ன? உயிரின் இன்ப ஊழியத்தில் அடிமைகளாவோம், பாதகமில்லை! ஆத்மா, பரமாத்மா - இந்தப் பேச்சு -  யுகம் யுகமாக, காது துளைத்துப்போச்சு! அது வேண்டாம் நமக்கு ! மதுக் கிண்ணத்தைப் பற்றி பேசினானே -  அவன் யார் ? - உமர்கயாம் -  அவனைத் தொடர்வோம், அப்பா!   நன்றி : சிறிது வெளிச்சம் - கு ப ராஜகோபாலன் - வாசகர் வட்டம் - 14 தணிகாசலம் செட்டி ரோடு, தியாகராய நகர், சென்னை 17 -வெளிவந்த ஆண்டு : 1969 - விலை : ரூ.7

உளம் எனும் குமிழி என்ற கவிதைத் தொகுதியைப் பற்றி

அழகியசிங்கர் üநீங்களும் படிக்கலாம்,ý என்ற தலைப்பில் நான் ஒரு புத்தகம் கொண்டு வந்தேன்.  21 புத்தகங்களைப் படித்து என் மனதில் என்ன தோன்றியதோ அதை எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் படித்திருந்தேன்.  இந்தப் புத்தகத்தை அசோகமித்திரனிடம் கொடுத்தேன்.  இதைப் படித்து அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. 'ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு என்ன எழுதுவது என்பது சாதாரண விஷயமாக எனக்குத் தோன்றவில்லை.  சிலசமயம் என்ன எழுதுவது என்றுகூடத் தோன்றாது.  நீங்கள் சுலபமாக எழுதி விடுகிறீர்கள்,' என்று அவர் குறிப்பிட்டார்.  உண்மையில் என்னாலும் சுலபமாக எழுத முடிவதில்லை.  ஒருசில புத்தகங்களைப் பலமுறை படித்தப்பிறகுதான் எழுதுவது குறித்து தெளிவு ஏற்படுகிறது.  அதுமாதிரி சவாலான புத்தகம் முபீன் சாதிகாவின் üஉளம் எனும் குமிழிý என்ற தொகுப்பு. தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது.  இப் புத்தகம் படித்தபிறகும் என்ன எழுதுவது என்ற குழப்பம் எனக்கு இருக்கத்தான் செய்தது.   புத்தக அறிமுக நிகழ்வில், அமிர்தம் சூர்யாவும், சண்முக விமல்குமாரும்  என்ன சொல்ல போ...

இரண்டு வித்தியாசமான கவிதைத் தொகுப்புகள் - 1

அழகியசிங்கர் நேற்று (07.04.2018) எழும்பூரில் உள்ள இக்சா அரங்கத்தில்  இரண்டு கவிதைத் தொகுதிகளின் அறிமுக நிகழ்வு.  ஒன்று எஸ் சண்முகம் அவர்களின் 'ஈர்ப்பின் பெருமலர்' என்ற கவிதைத் தொகுப்பு.  இன்னொன்று கவிஞர் முபின் சாதிகா எழுதிய 'உளம் எனும் குமிழி' என்ற தொகுப்பு. இந்த இரண்டு தொகுதிகளையும் வாசிக்கிறவர்களுக்கு ஒரு ஒற்றுமை இந்தத் தொகுதிகள் மூலம் தெரியவரும். அதாவது கவிதைத் தொகுதியைப் படிக்கும் வாசகர்கள் கவிதைத் தொகுதியைப் புரியவில்லை என்று சொல்லலாமா கூடாதா என்ற கேள்விதான். அப்படி ஒரு வாதத்தின் அடிப்படையில் இத் தொகுதிகளை அணுகக் கூடாது என்ற நிபந்தனை முன்வைத்துத்தான் இத தொகுதிகளைப் படிக்க வேண்டும்.   சண்முகம் கவிதைகளை நான் 'பொம்மை அறை' என்ற தொகுப்பின் மூலம் அறிவேன்.  அப்போது அத் தொகுதியைப் படித்தபோது அது குறித்து எதாவது விமர்சனம் எழுத வேண்டுமென்று எழுதினேன். ஆனால் அவர் கவிதைகளை முழுவதும் புரிந்துகொண்டுதான் எழுதினேனா என்பது தெரியவில்லை.  ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் எழுதியதாக ஞாபகத்திற்கு வருகிறது  அத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒரு கவிதையில் ...

மறக்க முடியாத மதுரை

அழகியசிங்கர் நான் சென்னைவாசி.  பெரும்பாலும் சென்னையை விட்டு எங்கும் போவதில்லை.  ஏன் இந்த மாம்பலத்தை விட்டுக்கூட எங்கும் போக முயற்சி செய்வதில்லை.  ஆனால் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றுவிடுவேன்.  உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என்றெல்லாம் போவேன்.  எதாவது காரணம் இருக்க வேண்டும்.  அப்படி ஒரு காரணத்தை வைத்துக்கொண்டுதான் மதுரை சென்றோம்.  (மனைவியையும் சேர்த்து). பாண்டியன் எக்ஸ்பிரஸ் வண்டியில் கிளம்பினோம்.  மறுநாள் காலையில் மதுரையை அடையும்போது ரொம்ப தாமதமாகப் போய்ச் சேர்ந்தது.  ரயில்வே நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ள காலேஜ் ஹவுஸ் என்ற ஓட்டலில் போய்த் தங்கினோம்.  பின் அவசரம் அவசரமாக கல்யாணத்திற்குப் போனோம்.  நேற்று பந்த்.  ஒரு கடையும் திறக்கவில்லை.  மதுரை வெறிச்சென்றிருந்தது.  வெயில் பயங்கரமாக இருந்தது.  இந்த வெயில் என் வயசை ஞாபகப்படுத்துவதுபோல் தோன்றியது.  பின் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து, தெப்பக்குள மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம்.  கோயில் எதிரில் இருந்த தெப்பக்குளத்தில் தண்ணீரே இல...

நட நட நட நடநடநட நட நடநடநட நட ......

03.04.2018 நட நட நட நடநடநட நட நடநடநட நட ...... அழகியசிங்கர் என் லைப்ரரி வைத்திருக்கும் போஸ்டல் காலனி வீட்டின் அருகில் இதய இயல் பேராசிரியர் மருத்துவர் வைத்தியநாதன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் சில கிடைத்தன.  இதய படபடப்பு பற்றி ஒரு புத்தகம்.  இதய நோய் இல்லாத இதய நோயாளிகள் என்ற இன்னொரு புத்தகம். மூன்றாவது புத்தகம் நடை....நோய்க்குத் தடை என்ற புத்தகம்.  சொ செல்வராசன் என்பவர் எழுதிய புத்தகம். இதைப்போல முக்கியமான புத்தகத்தை கிட்டத்தட்ட 60 வயதைத் தாண்டியவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.  நடை எவ்வளவு முக்கியமானது என்று இந்த நூல் புட்டு புட்டு வைக்கிறது.  நடைப்பயிற்சி முடிந்தவுடன் தண்ணீர் அருந்தலாமா என்ற ஒரு கேள்வி. உடனே அருந்த கூடாது.  பதினைந்து நிமிடங்கள் பிறகு அருந்தலாம் என்கிறது இந்தப் புத்தகம்.  அதே சமயத்தில் நடைபயிற்சிக்கு முன்னால் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் அருந்தலாம் என்கிறது புத்தகம். இதில் இன்னொரு பக்கத்தில் இதுமாதிரி எழுதியிருக்கிறது. 1. நடக்கும்போது பேச்சைத் தவிர்த்து விடுங்கள் என்கிறது இப் புத்தகத்தில் ஒரு வாசகம். ...

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - இந்திரா பார்த்தசாரதி

அழகியசிங்கர் 11 .02.2018 அனறு பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் 16வதாக இந்திரா பார்த்தசாரதி  அவர்களைப் பேட்டி எடுத்தேன். இந்தப் பேட்டியை எடுக்க எனக்கு உதவியவர் ராஜேஸ் சுப்பிரமணியன் அவர்கள். அமைதியாக இந்திரா பார்த்தசாரதி  அளித்தப் பதிலை கேட்டு ரசிக்கவும்.  பொறுமையாக பதில் கூறிய இந்திரா பார்த்தசாரதிக்கு என் நன்றி.  தொடர்ந்து இத் திட்டத்தின் கீழ் பலரை பேட்டி எடுக்க உத்தேசம்.  

நானும் என் கவிதைகளும்....

அழகியசிங்கர் நவம்பர் 2013ல் நான் கொண்டு வந்த கவிதைப் புத்தகத்தின் பெயர் 'வினோதமான பறவை.'  அந்தப் புத்தகத்திற்கான விமர்சனம் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை.  யாரும் அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  அதற்கு உண்மையான காரணம் கவிதைத் தொகுதிகள் ஏராளமாக ஒவ்வொரு ஆண்டும் புத்தகமாக வந்து கொண்டிருப்பதுதான்.   என் வீட்டின் கீழ்ப் பகுதியில் பத்திரப் படுத்திய  'வினோதமான பறவை'  என்ற என் கவிதைத் தொகுதியை   வெள்ளம் வந்து நாசப்படுத்தி விட்டது.  விற்காமலேயே புத்தகப் பிரதிகள் தண்ணீரில் போய்விட்டது.   நான் திரும்பவும் இந்தப் புத்தகத்தை நவம்பர் 2016ல் கொண்டு வந்தேன்.  இந்த முறை இன்னும் சில கவிதைகளையும் சேர்த்தேன்.  வெள்ளம் பற்றிய கவிதைகளையும் சேர்த்தேன்.  முன்பு நான் கொண்டு வந்த üஅழகியசிங்கர் கவிதைகள்ý தொகுதியுடன் இந்தத் தொகுதியையும் சேர்த்தால்  300க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருப்பேன்.  எப்படி என் கதைகள் எல்லாவற்றையும் சேர்த்து 664 பக்கங்களுக்குப் புத்தகமாகக் கொண்டு வந்தேனோ அதேபோல் கவிதைகளையும் தொகுக்கத் ...