அழகியசிங்கர் 1. நீங்கள் யார்? ரமணர்தான் நான் யார் என்ற விசாரணையில் இறங்கினார். என்னைப் பார்த்து நீங்கள் யார் என்று கேட்டால் என்ன அர்த்தம். நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் யார்? 2. இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழவனின் ஆடிப்பாவைபோல என்ற நாவலில் 204வது பக்கம் படித்துக்கொண்டிருக்கிறேன். அந்த நாவலில் வரும் காந்திமதி என்ற பெண்ணைப் பார்க்க விரும்புகிறேன். 3. யாருக்கு இந்த முறை சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்கும். யாருக்கு என்று தெரியாது. ஆனால் பலர் க்யூவில் நின்று கொண்டிருக்கிறார்கள். 4. உங்கள் பத்திரிகையில் வரும் கதை, கவிதை, கட்டுரையை யாரெல்லாம் படிக்கிறார்கள். யாரெல்லாம் என்பது தெரியாது. ஒருவர் நிச்சயமாகப் படிக்கிறார். அது நான்தான். 5. துயரத்தின் உச்சம் என்ன? இன்னொரு துயரம். 6. நின்றுகொண்டே வாசிக்கப் போவதாக ஒரு திட்டம் வைத்திருக்கிறீர்களே? ஆமாம். கடந்த சில ஆண்டுகளாக நான் தரையில் அமருவதில்லை. தரையில் பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக்கொள்வதுமில்லை. டைன...