பைத்திய வாழ்க்கை.. காய்ச்சலால் உடம்பு தகிக்கிறது வெளியில் மழை முடிவில்லாமல் பெய்கிறது தகிக்கும் அந்த கேவலமான உடம்போடு மழையில் சென்று வர வேண்டிய வாழ்க்கையை வாழ்கிறான் அந்த மனிதன் . வெயில் என்றால் பாலைவன வெயில் சே , இந்த மஞ்சள் காமாலையின் மழுங்கிய கண்களோடு வெயிலில் அலைந்து திரிய வேண்டிய அற்பமான வாழ்க்கை அவனுடையது . மழைக்கான தனி இடமும் , வெயிலுக்கு ஒரு பிடி நிழலும் வாய்க்கும்போது அனுபவிக்க தோதுபடாத பைத்திய வாழ்க்கை அந்த மனிதனுடையது . ============================== ==================== முதல் கவிதையின் மாற்றுப்பிரதி ============================== =========== முதல் கவிதை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைந்துவிடுகிறது . படிமகுறியீடுகளின் பிரக்ஞையற்றது அந்த கவிதை . ந . பிச்சமூர்த்தி முதல் சபரிநாதன் வரை எவர் சாயலுமற்ற மலட்டுத்தன்மை அதனுள் ஒளிந்திருக்கும் . " நேற்றுதானே உன்னை சந்தித்தேன் , இன்று என் இதயத்துக்குள் எப்படி வந்தாய் ?" என்று அந்த