Skip to main content

Posts

Showing posts from May, 2013

யோசனை

 அழகியசிங்கர் நடந்து கொண்டிருக்கும்போது  ஏதோ யோசனை  உட்கார்ந்திருக்கும்போது  ஏதோ யோசனை  சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது  ஏதோ யோசனை  வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போது  ஏதோ யோசனை  தூக்கம் இல்லாதபோது  ஏதோ யோசனை  யாருடனுவாவது பேசிக்கொண்டிருக்கும்போது  ஏதோ யோசனை  பெண்ணைப் பார்க்கச் சென்றால்  பெண்ணைப் பற்றி ஏதோ யோசனை  பையன் போன் பண்ணினால்  பையனைப் பற்றி யோசனை  அப்பா தனியாய் இருப்பது பற்றி யோசனை  அலுவலகம் பற்றி யோசனை  படிக்க முடியாத புத்தகம் பற்றி யோசனை  விற்க முடியாத புத்தகம் பற்றி யோசனை  குடியிருப்பில் தண்ணீர் இல்லையென்ற யோசனை  வெயில்பற்றிய யோசனை  மாதா அமிர்தமாயி சென்னை  வந்தது பற்றி யோசனை  கிரிக்கெட் பற்றி யோசனை  தினமலர் படிக்கம்போது  தினமலர் பற்றி யோசனை  எல்லாவற்றையும் பற்றியும்  யோசனை யோசனை யோசனை.                     ...

பின்னற்தூக்கு

எம் . ரிஷான்   ஷெரீப் ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது . அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென , செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள் . செல்விக்கு நீண்ட பின்னல் . முழங்கால் வரை நீண்ட பின்னல் . எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள் . மருத்துவத் தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப் பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது . எந்தப் பெண் எனத் தெரியவில்லை . வெளியூர்ப் பெண் . ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள் . அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்...

ஒரு விதை போல

ரவிஉதயன் துளிகள் அடர்ந்து வானம் பெயர்ந்து விழுகிறது மழை தாரைகள் நிற்காது மண் முற்றத்தில் தாளமிசைக்கின்றன தாளக்கிரமங்களை செவியுற்றவாறே ஒரு விதைபோல வீழ்ந்து கிடக்கிறேன் சரி பாதி தொட்டிலில் உறங்கிக்கொண்டும்... சவப்பெட்டியில் சரிந்துகொண்டும்...

கொக்குகள் பூக்கும் மரம்

  எம் . ரிஷான்   ஷெரீப் தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது காலையில் பறக்கும் கிளைகளை தலையில் கொண்ட பெரு விருட்சம் ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய் நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும் வெள்ளைப் பூக்களென வந்து தங்கிச் செல்லும் கொக்குகள் இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால் கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும் இரை தேடி விடிகாலையில் தமதிரு நெடிய கிளைகளையும் வயிற்றில் பதித்துப் பறப்பவை விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள வெண்ணிறகுகளை அன்பாய்க் கொடுத்துச் செல்லும் அவற்றைச் சேமிக்கும் மரம் காற்றைத் தொட்டு இறகுத் தூரிகையால் ஓடும் ஆற்றில் கவியெழுதும்