ழ என்ற சிற்றேடு ஆத்மாநாம் மூலம் 1978 ஆம் ஆண்டு உருவானது. அவருக்கு பக்கபலமாக ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், காளி-தாஸ் போன்ற பல நண்பர்கள் செயல்பட்டார்கள். ழ ஒரு சிற்றேடு. மிகக் குறைவான பேர்களே வாசித்திருப்பார்கள். 1978 லிருந்து 10 ஆண்டுகள் செயல்பட்ட ழ பத்திரிகை, ஆத்மாநாமின் தற்கொலையால் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தமிழ் கவிதைக்கு ஒரு மாற்றத்தை எளிய வழியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை எழுதுவதற்கான ஒருவித ஒழுக்கத்தை பலரும் கற்றுக்கொள்ள முடியும். அப் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் முக்கிமானவை. கவிதை எழுத வேண்டுமென்கிற எண்ணம் உடையவர்கள், ழ வில் வெளிவந்த கவிதைகளை பயிற்சிக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். நவீன விருட்சம் பத்திரிகைக்குக் கூட ழ ஒரு முன்னுதாரணம். ழ வில் வெளிவந்த கவிதைகளை கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு அறிமுகப் படுத்த நினைக்கிறேன். ழ 5வது இதழ் டிசம்பர் 1978 ஜனவரி 1979 இந்த நிழல் பசுவய்யா எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்துதானா? அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலூன்றி ...