Skip to main content

Posts

Showing posts from February, 2010

Pudhukkavidhai - Fifty years of New/Modern Tamil poetry

(CONTINUATION) FITY YEARS OF NEW/MODERN POETRY 2 Translations of a few innovative poems. 1) Tree My shadow Plays and plays around the sun That is somewhere in the sky. Seeing my reflection in the gutter Logged under the root I become hateful The warrior Who comes to strike me off If only mar my shadow alone I will grow and branch out to a great height Amplify to nine fold Along with me You could mar My shadow too. Could you take out My shadow alone. Silence Every night is Silence of the light Every star is Silence of the sky Every word is Silence of Tranquility Every song is Silence of the Love. - Kaa.Naa. Su 2) Where is the bird That was flying In the window framed sky A while before. It has been flying A while before. - Anand 3) How to approach a dinosaur. Sticking in close quarters The thumb nail would hold umbrella. Head and tail are somewhere many miles apart Looking from the back The abdomen and the genitals are in abyss From the ear Toes are far away, How to approach a dinosaur...

Pudhukkavidhai - Fifty years of New/Modern Tamil poetry

GOLDEN POETRY Fifty years of New/Modern Tamil poetry Naa Pichamurti Kaa Naa Su Ci.Su.Chellappa This year (2008-2009) marks the completion and celebration of fifty years of Tamil pudhukkavidhai movement as golden jubilee year. Exactly fifty years back, Kaa.Naa. Subramanyam , a pillar of Tamil New Literature, in an article on poetry, named and termed the then budding Tamil poetry as pudhukkavidhai, meaning new poetry, which began even a quarter of a century earlier than that, after the great poet Bharati , to be precious, with a poem titled kadha l by Naa Pichamurt i , the other founder of new Tamil poetry movement. At the beginning Naa. Pi. And Ku.Pa.Rajagopalan wrote poetry in prose form which they called ‘vachana kavidhai’. Kaa. Naa. Subramanyam who gave the manifesto of new Tamil poetics, initiated the movement of new poetry,...

துரோகத்தின் கத்தி

முதுகில் ஆழப்பாய்ந்த வலியோடு இரத்தம் சுவைத்திருந்தது துரோகத்தின் கத்தி ஒன்று.. நேற்று இதே கத்திஎவரின் முதுகிலேயோ உயிர்க் குடித்திருந்திருக்கலாம்.. நாளை யாரோ ஒருவரின் முதுகில் பாய குறி வைத்துக்கொண்டிருக்கலாம்.. யாதொரு நேரத்திலும் யாதொரு இடத்திலும் இருந்து இந்த கத்தி பாய்ந்து வரலாம் நம் நம்பிக்கைகளை மணல் துகளாக்கியவாறு.. மற்றக் கத்திகள் போலில்லை துரோகத்தின் கத்தி.. இது குத்தப்பட்டப் பிறகு வெறுப்பை கக்குபவை.. உறவுகளின் மீதான நம்பிக்கையை மறுப்பரிசீலனைக்கு உட்படுத்தி சந்தேகத்தை உள்ளூற வைப்பவை.. யாவரும் ஏதாவது ஒரு தருணத்தில் எவராவது ஒருவரால் குத்தப்பட்டு இதன் கசப்பை அனுபவித்திருந்தாலும் தம் மனதுக்குள் மறைமுகமாய் வைத்திருக்கின்றனர் இதனை.. பயன்படுத்தியவர் பயன்படுத்தாதவர் யாவரும் இதனை கூர் தீட்டி தயார் நிலையில் வைத்திருக்கின்றனர் ஒரு முதுகை எதிர்பார்த்து.. பின் வரும் நாளின் கோர கணமொன்றில் எவரின் முதுகிலாவது இதே கத்தி செருகப்படலாம் கொடும் வன்மத்தின் அடையாளமாய் என் கைரேகைகளுடன்..

அன்புடையீர்,

வணக்கம். இந்த முறை சற்று சிரமமாக இருந்தாலும், நவீன விருட்சம் இதழை கொண்டு வந்து விட்டேன். இப்போது வந்துள்ள இதழ் இரு இதழ்களான 85/86ன் தொகுப்பு. 80 பக்கம் கொண்டு வந்துள்ளேன். வழக்கம்போல் பலருடைய படைப்புகள் இடம் பெற்றுள்ளன. யார் படைப்புகள் இடம் பெற்றுள்ளன என்ற விபரம் இதோ 1. ஐராவதம் - இக்கணத்தின் அருமை - பாரதிமணி எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தக விமர்சனம் கதைமொழி - எஸ் சண்முகம் புத்தகத்தின் விமர்சனம் 2. விட்டல்ராவ் - பழம் புத்தகக் கடை 3. கோசின்ரா - எனது புனைபெயர்கள் (கவிதை) 4. ஆ முத்துராமலிங்கம் - மழை இரவு (கவிதை) 5. ஏ ஏ ஹெச் கோரி - உறவு ஜீவிகள் (சிறு கதை) 6. அழகியசிங்கர் - சில குறிப்புகள் 7. யோசிப்பவர் - செருப்பு (சிறு கதை) 8. விட்டல்ராவ் - ரிச்சியும் நானும் (சிறு கதை) 9. நீல பத்மநாபன் - விஜய தசமி (கவிதை) 10. மஹேஷ் முணசிங்ஹா - ஜனாதிபதித் தேர்தல் 11. எஸ் வைத்தி...

தூண்டிற்புழு

மெளன மொழி புரிகின்றது மனதின் வேஷம் கலைகின்றது முகமூடி உருக்குலைகின்றது மனிதமுகம் தெரிகின்றது மழலை தேனாய் இனிக்கின்றது மீண்டும் குழந்தையாக உள்ளம் துடிக்கின்றது வாழ்க்கை வரமாய் தோன்றுகின்றது மறுமுறை பிறக்க மனம் ஏங்குகின்றது நாட்கள் கணமாய் ஓடுகின்றது நதியலைபோல் சூழ்நிலை மாறுகின்றது தோல்வி கூட இனிக்கின்றது வெற்றி எதில் இங்கு இருக்கின்றது தடுக்கிவிழ கால்கள் துடிக்கின்றது தாங்கும் கைகள் அவளுடையதாய் இருக்க வேண்டுமென உள்ளம் தவம் கிடக்கின்றது கடிதங்கள் தூது போகின்றது கவிமகளை நெஞ்சம் நாடுகின்றது மழை வந்து மேனியை நனைக்கின்றது அவளைச் சந்திக்காமல் உள்ளம் கொதிக்கின்றது ஆகாரம் கண்ணெதிரே இருக்கின்றது எண்ணச் சிறகுகள் எங்கெங்கோ பறக்கின்றது காலை கதிரொளி எழுகின்றது கனவுகள் விடை பெறுகின்றது உறக்கம் மெல்ல களைகின்றது உண்மை வேறாய்த் தெரிகின்றது காட்சிகள் பொய்யெனப் புரிகின்றது கற்பனை நின்றிட மறுக்கின்றது இங்கு எல்லாம் சரியாய் இருக்கின்றது வேறெங்கே என்னைத் தொலைக்கின்றது!

இலையின் பாடல்

நான் இல்லாது போனால் இப்புவியெங்கும் உள்ள மரங்களனைத்தும் மூளிகளாகும். நான் பச்சை வண்ணம் சுமந்து வசந்த காலத்தை வளமுள்ளதாக்குகிறேன். நான் இன்னோர் இலையாய்த் துளிர்க்க வேனிற்காற்றின் வேகத்தில் மரங்களினுடனான உறவுப்பிணைப்பை முறித்துக்கொண்டு மண்ணில் விழுகிறேன். நான் காணுமிடமெங்கும் நிறைந்திருப்பினும் மலர்களின் மீது மட்டும் மோகம் கொண்டலையும் மனிதர்கள் என்னை மரத்தின் ஒரு பாகமாக மட்டுமே பார்க்கின்றனர். நானின்றி மொட்டு மலர்ந்திடுமா? காய் கனிந்திடுமா? மரம் நிலைத்திடுமா? உணவாகிப் பல நோய்கள் தீர்க்கிறேன். எருவாகிப் பயிர்களைக் காக்கிறேன் எரிபொருளாகி வாகனங்களை இயக்குகிறேன். என் மீது உரசாத காற்றை சுவாசித்த நபருண்டா இவ்வுலகில்? பழுத்து மஞ்சளாகி உதிரும்வரை காலையில் நடைப்பயிற்சி செல்லும் வழியெங்கும் உங்களின் கண்களுக்கு இதமாக இலவசமாய் குளுமை தருகின்ற பூமித்தாய் தன் மேனியில் உடுத்தியிருக்கும் பச்சை வண்ண ஆடை நான்!

ஊழிக் காலம்

காய்ந்துபோன ஏரிகளில் காலம் தன்முகம் பார்த்துக் கொண்டது சுருக்கங்களின்றி பருவம் பூரித்துச் செழித்த தன் முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி பார்த்திருந்த வானத்திடம் தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும் ஒருசேரக் கொடுத்தது எதையும் கண்டுகொள்ளாச் சூரியன் வழமைபோலவே காற்றைச்சுட்டெரித்தது இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும் பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும் எதுவுமே செய்யாதவன் போல முகம்துடைத்துப் போகிறேன் நான் உங்களைப் போலவே வெகு இயல்பாக -

எதையாவது சொல்லட்டுமா....16

சமீபத்தில் என் நண்பரும் டாக்டருமான செல்வராஜ் ஒரு இ மெயில் அனுப்பியிருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கு இரவெல்லாம் சரியாய் தூக்கமில்லாமல் போய்விட்டது. டாக்டர் செல்வராஜ் ஒரு சிறுகதை ஆசிரியர் கூட. வைத்தியம் பார்ப்பவர். 2 சிறுகதைத் தொகுப்பும், 2 மருத்துவ நூல்களும் எழுதி உள்ளார். உற்சாகமாக இருப்பவர். பார்ப்பவர்களையும் உற்சாகப் படுத்துவார். நோயாளிகளின் உடல் மட்டுமல்ல மனதையும் குணப்படுத்தவும் நினைப்பவர். அவர் அனுப்பிய இ மெயிலுக்கு வருகிறேன். தனிமையில் நீங்கள் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய இ மெயில் கட்டுரை. திகைத்து விட்டேன். ஹார்ட் அட்டாக் வரும்போது பக்கத்தில் டாக்டர் இல்லை. நீங்கள் எப்படி உயிர் பிழைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கட்டுரையின் சாராம்சம். அவர் கட்டுரையில் எல்லாவிதமான நியாயமும் இருக்கிறது. அவருடைய உலகம் நோயாளிகளையே சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அவருடன் சற்,று நேரம் கூட பேச முடியாது. அவர் தூங்கி எழுந்தால் அவர் முன்னால் நோயாளிகள்தான் தென்படுவார்கள் என்று தோன்றுகிறது. நானும் அவர் முன்னால் ஒரு நோயாளிதான். ...

“மிஞ்சியவன்”

அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் சின்னையனுக்குத் தனது வண்டி ஸ்டான்ட்தான் ஞாபகத்திற்கு வருகிறது. தினமும் ஒரு வேளையாவது அந்தப் பக்கமாக வந்து போகவில்லையென்றால் அவனுக்கு மனசு ஆறாது. வர, வண்டியை ஓரமாக நிறுத்த, அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்க என்று பொழுது கழியும். பல நாட்களில் அங்கிருந்து கிளம்பவே மனசு வந்ததில்லை அவனுக்கு. நெஞ்சில் ஆழப் பதிந்து விட்ட சோகம் அது. நகரத்தின் எல்லாப் பகுதிக்கும் கால் கடுக்கக் கடுக்க ரிக்ஷாவை மிதிக்கிறான். இப்பொழுது இன்ன இடம் என்று குறிப்பிட்டு அவனுக்கு எதுவும் இல்லை. எல்லா இடமும் அவன் இடம்தான். எங்கெங்கு நிறுத்துகிறானோ அதெல்லாம் அவன் இடம்தான். ' யாரோ போவட்டும்” என்று எல்லோரும் விட்டு விடுகிறார்கள் அவனை. ஆனால் ஒன்று. எல்லோரும் அவனை ஒரு பார்வை பார்த்து விடுகிறார்கள். அவனைப் பார்க்கிறார்களா அல்லது அவன் வண்டியைப் பார்க்கிறார்களா? ரெண்டையும்தானோ? எதைப் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன? கொட்டியா கொடுக்கப் போகிறார்கள், தான் முடிந்துகொண்டு போவதற்கு? அப்படிப் பரந்த மனசோடு இன்றைக்கெல்லாம் யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே...

வானுக்கு கீழே அதன் வாழ்க்கை

கீழே குனிந்தவுடன் பின்வாங்கி ஓடும் நாம் கல்லைத்தான் தேடுகிறேதம் என்று நினைத்து நேருக்குநேர் அதன் கண்களை சந்தியுங்கள் புனிதப் பேதருக்கே தயாராகும் அந்த நாய்கள் எதையுமே அதன் கண்களால் காணமுடியுமென்பதால் அது எதையுமே கண்டு ஆச்சர்யம் கெதள்வதில்லை வெட்கம் கெதண்டு, மனிதர்களைப் பேதல் அது காமத்தைக் கூட மூடி மறைப்பதில்லை வானுக்கு கீழே அதன் வாழ்க்கை திறந்த புத்தகமாய்... சுவர்களுக்கு மத்தியில் தங்களை மறைத்துக் கெதள்ளும் மனிதர்களைக் கண்டு எள்ளி நகையாடுகின்றன வீதியில் படுத்துறங்கும் நாய்கள்.

இடர்மழை

நமக்கிடையே வான் தெளித்த அடர்த்தியான மழையைத் தவிர்த்து வேறெவருமிருக்கவில்லை தூறல் வலுத்த கணமது வீதியின் ஒரு புறத்தில் நீ இதுவரை கவிழ்ந்திருந்த தலையை முக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்தி எதிரே வருமென்னைப் பார்க்கிறாய் காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோட நானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லை உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத் தூறலுக்குத் தெரியவுமில்லை உன்னிடமோ என்னிடமோ அந்திவேளையின் மழையை எதிர்பார்த்த குடைகள் இல்லை வானிலிருந்து பொழியும் நீர்த்துளிகளைத் தடுக்க மேனிகளுக்குத் தெரியவுமில்லை இத்தனைகள் இல்லாதிருந்தும் ஆண்மையென்ற பலமிருந்து நான் அருகிலிருந்த என் வீட்டிற்கு ஓடுகிறேன் காற்சட்டையில் சேறடித்திருக்கக் கவலையேதுமில்லை தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள் நான் மறையும்வரை காத்திருந்து நீயும் புத்தகங்களை நெஞ்சில் அணைத்து பேருந்து நிறுத்தம் நோக்கி ஓடத்துவங்குகிறாய் திரைக்காட்சிகளில் வரும் அழகிய இளம்பெண்களின் மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை ஆங்காங்கே ஒழுகிவழியும் பேரூந்து நிறுத்தத்துக்குள் நீ முழுவதுமாக நனைந்திருக்க அடிக்கடி பின்னால் திரும்பி சேற்றோவியம் வரைந்திர...

விடுமுறையில் இருப்பவன்

அடையாள அட்டை கைக்குட்டை கடிகாரம் இப்படி ஏதாவதொன்றை மறந்து வைத்துவிட்டு அலுவலகம் வருவது எனக்குப் பழக்கமாயிருந்தது இன்று நடந்ததோ எல்லாவற்றையும்விட உச்சம் என்னையே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன்!

நான்கு உயிர்களும்

ம றக்கவே முடியாதபடி மனதில் ஆழப் பதிந்து போனது அந்த வருஷ ‘ஹோலிப் பண்டிகை’. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க் கூவியபடி ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வாரி இறைத்தும், சித்தாள்ப் பெண்கள் ஹோலிப் பாடல்கள் பாடி என்ஜீனியர்களிடமும் ஆபிஸர்களிடமும் காசு கேட்டுக் கலாய்த்துக் கொண்டும் சந்தோஷமாய் அலைந்து கொண்டிருந்த போது, விதி எல்லோருடைய முகங்களிலும் கரியைப் பூசி அழகு பார்த்த கறுப்பு தினமானது அன்றைக்கு. ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரங்களும் ஒரு பக்கம் உற்சாகமாக அரங்கேறிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பால்ராஜும், நரேந்திரனும் மறுநாள் போட வேண்டிய சிலாப் கான்கிரிட்டுக்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாய் இருந்தார்கள். அப்போது திடீரென்று வேலை ஆட்களின் கூடரங்களிலிருந்து அழுகையும் கூச்சலுமாய் சத்தம் கேட்கத் தொடங்கவும் ஏதோ விபரீதம் என்று புரிந்து இருவரும் கூடாரம் நோக்கி ஓடினார்கள். வேலை ஆட்களின் உபயோகத்திற்காகக் கட்டப் பட்டிருந்த தண்ணீர் தொட்டியின் இரண்டு சுவர்கள் அப்படியே சரிந்து அப்போது குளித்துக் கொண்டும் தண்ணீர் பிடித்துக் கொண்டு மிருந்தவர்களின் ...

இதையும்#

இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுரத்துள்ளதாக இன்னும் கொஞ்சம் உவப்பானதாக இன்னும் எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம் என்கிறீர்கள். இந்த ஒரு சிறு வாழ்வில் இந்தளவாவது இயன்றதே என்கிறேன். இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள் ஏனைய பிற யாவற்றையும் போல.o