எங்கள் வீட்டுமுன் வேப்பமரத்தில் புதிதாக இரண்டு காக்கைகள் கூடுவைத்துள்ளன . காக்கைகளினால் பொழுதுகளில் சங்கடமும் சமயங்களில் பலன்களும் வரலாம் . நாளை மறுநாள் வரப்போகும் பங்காளிகளை இன்றே கரைந்து காட்டிக்கொடுத்துவிடும் . தப்பித்தவறி எச்சமிட்டுவிட்டாலும் நல்ல அதிஷ்டக்காரன் என்றொரு பட்டம் கிடைக்கும் . கூட்டிலிருந்த கருவேல முள் விழுந்து முற்றம் முழுவதும் குப்பையாகிரதென்பாள் . துணி தொவைத்து ஒன்றைக்கூட மரத்தடியில் காயபோட முடியவில்லை என்பாள் . காக்கை என்பதை அருவருப்பாய் மட்டுமே பார்ப்பவளுக்கு எப்படி புரியவைப்பது ? இந்த கூடு நிறைய நேரங்களில் இருக்கும் வரை சொறுவைத்த அம்மையை நினைவுபடுத்துகிறதென்பதை.