Skip to main content

Posts

Showing posts from June, 2008

பெண்

கனவில் தெரிந்த பெண்ணொருவள் நேரில் வரவில்லை பலவாறு கற்பனையை விரித்து விரித்துப் பார்த்தேன் அவள் உருவம் மாறி மாறி தெரிந்ததே தவிர எந்த மாதிரி அவள் என்று யூகிக்க முடியவில்லை கனவில் தெரிந்தவள் மாதிரி யாருமில்லை ஒருபோதும் இன்னும் உற்றுப் பார்த்தேன் மாறி மாறி அந்தப் பெண்போல யாரும் தெரியவில்லை என்றாலும் பெண்கள் வேறு வேறு மாதிரியாகத்தான் தெரிந்துகொண்டிருந்தார்கள்

தசாவதாரம்

தமிழ் சினிமாக்களை எப்போது பார்த்தாலும் நான் அது குறித்து எந்தவிதக் கருத்தையும் கூற மாட்டேன். அது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று என்னைச் சுற்றியிருப்பவர்கள் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் அதற்குள் போவதில்லை. மேலும் ரசிகர்களுக்கேற்ப படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளிவரும் தமிழ்ப் படங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. ஒவ்வொரு படமும் எதாவது ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்கள் தயாரிக்க ஆகும் செலவைக் குறித்து. நாமெல்லாம் சாதாரணமானவர்கள். மாதச் சம்பளத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள். தமிழ்ப் படங்கள் தயாரிக்கும் செலவைப் பற்றியும், அதற்காக தேவைப்படும் உழைப்பைப் பற்றியும் யாரால் என்ன சொல்ல முடியும்? விளையாட்டுத்துறை என்று எடுத்துக்கொண்டால் சச்சினைவிட, தோனி விளம்பரம் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கிறார். எல்லாம் கோடிதான். என் வாழ்க்கையில் கோடியை நான் பார்க்கவே முடியாது என்று நினைக்கிறேன். வேண்டுமானால் தெருக்கோடியில் போய் நிற்கலாம். ஒருபக்கம் இந்தியா வறுமைக்கோட்டில் தத்தளித்துக் கொண்டிருக்க...

இன்று உலகப் புத்தக தினம்

எல்லாக் குப்பைகளையும் தூக்கி தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள் என் புத்தகங்களைப் பார்த்து மலைத்து நின்றாள் என்ன செய்வதென்று அறியாமல் பின் ஆத்திரத்துடன் தெருவில் வீசியெறிந்தாள் போவார் வருவார் காலிடற புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம் ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும் படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர் எல்லார் முகங்களிலும் புன்னகை நானும் ஆவலுடன் மாடிப்படிக்கட்டிலிருந்து தடதடவென்று இறங்கி புத்தகத்தின் வரியை ஒழுங்காய் நிலைகொள்ளாத வேஷ்டியுடன் படித்தேன் 'இன்று உலகப் புத்தக தினம் இன்றாவது புத்தகம் படிக்க அவகாசம் தேடுங்கள்' நானும் சிரித்தபடியே புத்தகத்தில் விட்டுச் சென்ற வரிகளை நினைத்துக்கொண்டேன் இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும் வேஷ்டியைப் பிடித்தபடி.....

விருட்சம் 80வது இதழ்

வணக்கம். இன்னும் சில தினங்களில், 80வது நவீன விருட்சம் வெளிவந்துவிடும். கிட்டத்தட்ட 100 பக்கங்கள். நவீனவிருட்சம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் நவீனவிருட்சம் இதழை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டுவர நினைப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. எப்படியோ ஆறு மாதங்கள் ஓடிவிடுகின்றன. ஏன் இதழ் வந்து அதை எல்லோருக்கும் அனுப்புவதற்கு ஒரு மாதம் மேல் ஆகிவிடுகிறது. யாருக்கும் சந்தா கேட்டுக்கூட கடிதம் எழுதமுடிவதில்லை. பத்திரிகை போய்ச் சேர்ந்தால் போதும். அவர்களே பார்த்து அனுப்பினால் சரி என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் பத்திரிகை சந்தா அனுப்புவதில்லை. சந்தா பெரிய தொகை இல்லை. ஆனால் அதை அனுப்புவதுதான் பெரிய விஷயமாக அவர்களுக்கு இருக்கும். தபால் அலுவலகத்திற்குப் போய் மணிஆர்டர் மூலம் 40 ரூபாய் அனுப்புவது என்பது பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. ஏன்என்றால் நான் நவீனவிருட்சம் பத்திரிகையை தபால் அலுவலகத்தில் கொண்டு செல்ல பாடாதபாடு படுகிறேன். சரி, யார் மூலமாவது இந்தப் பணியைச் செய்ய சொல்லலாம். ஆனால் யாரும் இதுமாதிரி பணியைச் செய்யத் தயாராய் இல்லை. ஒரு முறை என் நண்ப...

திருவனந்தபுரம்

கடந்த வாரம் முடிவில் (29 மே மாதத்திலிருந்து 2ஆம் தேதி ஜூன் வரை) சென்னையைவிட்டு, குடும்பம் சகிதமாக கொச்சின் சென்றோம். சனிக்கிழமை (30.05.2008)அன்று திருவனந்தபுரம் ஒருநாள் மட்டும் தங்கியிருந்தோம். ரயில்வே நிலையத்திற்கு அருகில் ஒரு ஓட்டலில் அறை எடுத்திருந்தோம். சுற்றிப் பார்ப்பதோடல்லாமல், நீல பத்மனாபனை பார்க்க நினைத்தேன். கூடவே அவரை அழைத்துக்கொண்டு நகுலன் வீட்டிற்கும் போக உத்தேசம் இருந்தது. அவருக்கு நான் வந்திருப்பதைச் சொன்னவுடன், என் உற்சாகம் ரொம்பவும் குறைந்துவிட்டது. அவரும் free ஆக இருக்கவில்லை. அவரைப் பார்த்துவிட்டு, நகுலன் வீட்டைப் பார்க்கும் எண்ணத்தில், நான் மட்டும் ஒரு ஆட்டோ வில் நகுலன் வீடை மட்டும் போய்ப் பார்த்தேன். பொதுவாக ஒரு இடத்திற்கு வரும்போது, அங்கு எழுத்தாளர்கள் என்று யாராவது இருந்தால், பார்க்க வருகிறேன் என்று சொன்னால்,உற்சாகம் குறைந்த உணர்வே ஏற்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, நகுலனிடம், 'உங்களைப் பார்க்க திருவனந்தபுரம் வருகிறேன்,' என்று குறிப்பிட்டேன். கேட்டவுடன், 'ஐய்யயோ..என் வீட்டில் தங்க முடியாது,' என்று பதறினா஡. எனக்கோ என்னடா இது என்று தோன்றியது. நான்...

நீத்தார் பெருமை

கவிதை என்பது சாந்தமான நிலையில் திரட்டப்படுகிற உணர்வு (Emotion recollected in tranquility) என்று வேர்ட்ஸ்வோர்த் தானும் கோல்ரிட்ஜீம் இணைந்து உருவாக்கிய கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரையில் எழுதினார். அது புகழ் பெற்ற வாசகம். கவிதை உருவாகிற மன நிலைக்கும் அவகாசத்திற்கு பின் அதை எழுதுகிற நிலைக்குமிடையே இடைவெளி இருப்பதால் பல கவிதைகளுக்கும் இந்த வரையறை பொருந்திவிடுகிறது. வேர்ட்ஸ்வோர்த் கவிதைகளுக்கு அது முற்றாகப் பொருந்தும். சங்ககாலக் கவிதைகள் பல சாந்தமானவை. ஆரவாரமற்றவை. இதுவேதான் எல்லாக் கவிதைளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. ஆரவாரமான, ஆக்ரோஷமான மன உணர்வுகள் அடங்கு முன்னரேயே பல கவிதைகள் எழுதப்பட்டு விடுகின்றன. பாரதி, பாரதிதாசன் ஆகியோர் உலக மாண்புகள் பற்றி எழுதிய பல கவிதைகளில் சாந்தம் வௌதப்படுகிறது. அரசியல், சமூகச் சிறுமைகளைக் கண்டு வெகுளும் போது அவர்கள் ஆக்ரோஷமாக அவற்றை முன் வைக்கின்றனர். ஆனால் ஆக்ரோஷம் கூட ஒரு வடிவமைதியுடன் வௌதப்படுவதால் மீண்டும் வேர்ட்ஸ்வோர்த் சொல்வதுதான் சரியோ என்றும் தோன்றுகிறது. Tranquil என்பதைத் தமிழில் சாந்தம், ஆரவாரமின்மை மற்றும் கலக்கமின்மை என்றும் கூட அர்த்தப்படு...

பிரமிள்

பிரமிளின் 70வது வயது பிறந்த நாள் விழாவை அமர்களமாக நடத்தினார்கள் பிரமிள் அபிமானிகள். பிரமிள் அவரது 56வது வயதளவில் புற்றுநோய்க் கண்டு இறந்து போனார். அவர் இறக்கும் தறுவாயில், அவரை வேறு வழியில்லாமல், வேலூரில் உள்ள கரடிக்குடி என்ற இடத்தில் உள்ள ஒரு அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆயிற்று. அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர், பிரமிள் அனுதாபி. தமிழ் இலக்கியம் மூலம் அல்லாமல், ஆன்மிக வேட்கையின் மூலம் பிரமிளிடம் அபிமானம் கொண்டவர். சரவணன் என்பவர் ஆன்மிக வேட்கையின் மூலம் பிரமளிடம் அறிமுகமானவர், பிரமிளை சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரவும் பகலும் பார்த்துக்கொண்டார். இப்போது நினைத்தாலும் என்னால் நம்ப முடியாத நிகழ்ச்சியாகவே அது இருக்கிறது. இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இலக்கிய ரீதியில் அவருக்கு நண்பர்கள் என்பது கிடையாது. யாரையும் அவர் மதிக்க மாட்டார். மதிப்பது மட்டுமல்ல. அவதூறாக எல்லாரையும் பற்றி எழுதுவார். நான் விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது, என்னைப் பற்றியும் எதாவது எழுதிவிடுவார் என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்ததுண்டு. பின்னாளில் எனக்கு அவர்...