Skip to main content

Posts

கதைகளைப் படித்தபடியே வந்தேன்...

கதைகளைப் படித்தபடியே வந்தேன்... அழகியசிங்கர் மயிலாடுதுறையிலிருந்து நான் திரும்பி வரும்போது இரண்டு பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு வந்தேன்.  ஒன்று காமதேனு என்ற பத்திரிகை.  முதல் இதழ்.  இரண்டாவது ஆனந்தவிகடன்.  இது தவிர விருட்சம் இதழுக்கு அனுப்பிய கதைகள்.  இவையெல்லாவற்றையும் பகல் வண்டியில் படித்துக்கொண்டு வருவது என்று தீர்மானித்தேன். ஆனந்தவிகடனுக்கும் காமதேனுவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  எல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் புகைப்படங்கள்தான்.  உள்ளே வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது காமதேனு.  படிக்கும்போது எனக்கு வீக் என்ற ஆங்கிலப் பத்திரிகை ஞாபகம் வந்தது.  உள்ளே பெட்டி செய்திகளைப் போல் ஒரு முகம், சர்வதேசம், தேசம் என்று பல செய்திகளைக் கொட்டிக் கொடுக்கிறது காமதேனு.  நான் இதை எழுதும் இந்தத் தருணத்தில் 4 இதழ்கள் வந்துவிட்டன. முதலில் நான் கதைகளைத் தேடித்தான் இந்தப் பத்திரிகைக்குள் நுழைந்தேன்.  என் கண்ணிற்கு எந்தக் கதையும் தென்படவில்லை.  ஆனால் புனை என்ற தலைப்பின் கீழ் நர்சிம் அவர்கள் நதி என்ற கதை எழுதியிருக்கிறார். ...

த நா குமாரசாமியைப் பற்றி முனைவர் வ வே சுப்பிரமணியன் பேசிய ஒளிப்பதிவு- 4 - கடைசிப் பகுதி

அழகியசிங்கர் முனைவர் வ வே சு அவர்கள் விவேகானந்தா கல்லூரியில் பணி ஆற்றியவர்.  மரபு கவிஞர்.  பல கவிதைப் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.  தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் பேரூரை ஆற்றி வருகிறார் 16.03.2018 வெள்ளிக்கிழமை அன்று பேசிய ஒளிப்பதிவின் 4வது பகுதியை இங்கு வெளியிடுகிறேன் 

த நா குமாரசாமியைப் பற்றி வ வே சுப்பிரமணியன் பேசிய ஒளிப்பதிவு- 3

அழகியசிங்கர் 16.03.2018 வெள்ளிக்கிழமை அன்று பேசிய ஒளிப்பதிவின் 3வது பகுதியை இங்கு வெளியிடுகிறேன் - 

த நா குமாரசாமியைப் பற்றி வ வே சுப்பிரமணியன் பேசிய ஒளிப்பதிவு 1, 2....

அழகியசிங்கர் 16.03.2018 வெள்ளிக்கிழமை அன்று பேசிய ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்

இன்று அசோகமித்திரனின் நினைவு நாள்

இன்று அசோகமித்திரனின் நினைவு நாள் அழகியசிங்கர் 'எழுத்தாளர்கள் நூல்கள் நிகழ்ச்சிகள்' என்ற அசோகமித்திரன் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.   'உதிர்ந்த மணி' என்ற கட்டுரையில் எம் வி வெங்கட்ராமன் பற்றி இப்படி எழுதியிருக்கிறார் : அவருடைய நெருக்கடி மிகுந்த நாட்களில் நாங்கள் இருவரும் ஒரு திருவல்லிக்கேணி காபிக்கடையில் காபி அருந்தினோம்.  பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே காபிக்கடையில் காபி அருந்தினோம்.  இம்முறை அவரே üüஇப்போது சிரமம் இல்லை, கவலைப்படாதே,ýý என்றார்.  ஆனால் எனக்கு அவரை எப்போது நினைக்கும்போது இருட்டில் புத்தக அடுக்குகள் மத்தியில் குகைவாசியாக அவர் எழுதிக்கொண்டிருந்த காட்சிதான் திரும்பத் திரும்ப வருகிறது. ******** தி நகர் செல்லும்போது கண்ணதாசன் சிலை அருகில் சிக்னலுக்காக வண்டியை நிறுத்துவேன்.  அப்போது ஒரு நிமிடம் இடது பக்கம் பார்ப்பேன்.  பலமுறை அசோகமித்திரனைப் பார்க்க இப்படித்தான் செல்வேன்.  ******** புதுமைப்பித்தன் இருந்த நாளிலும் அவர் மறைந்த பின்னரும் அவரைப் பற்றி அலுப்பு சோர்வு இல்லாமல் வ...

சும்மா போனேன் சும்மா வந்தேன்

அழகியசிங்கர் இரண்டு மூன்று நாட்களுக்கு  பங்களூர் போய்விட்டு வந்தோம்.  இலக்கிய நண்பர் வீட்டுத் திருமணத்திற்குத்தான்.   உண்மையில் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு பங்களூருக்கு  சென்றோம்.  பெரும்பாலும் சென்னை நகரத்திலேயே பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.  ஆனால் எதாவது காரணம் கிடைத்தால் வேறு வேறு ஊர்களுக்குச் சென்று அந்த ஊர்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறது.  இனி எளிதாக எதாவது காரணத்தைக் கண்டு பிடித்தாவது ஒரு ஊருக்குச் சென்று விட வேண்டும்.  சமீபத்தில் நான் மயிலாடுதுறைக்குப் போய் வந்தேன்.  அந்த ஊரின் பேரமைதி என் மனதிலிருந்து நீங்க வில்லை.  ஆனால் பங்களூர் வேற விதமாக இருக்கிறது.  நாங்கள் பயணம் செய்த லால்பாக் வண்டி தாமதமாகக் கிளம்பி இரவு பத்து மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்தது. கே ஆர் புரம் என்ற இடம் என்று நினைக்கிறேன்.  என் மனைவியின் சகோதரியின் பையன் எங்களை காரில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கொறமாவ் என்ற இடத்திற்கு அழைத்துக்கொண்டு போனான்.  ஒரு தெருவில் காரை ஓட்டிக்கொண்டு போனபோது, பங்களூரில் உள்ள அத்தனை நாய்களும் அந்...

சனிக்கிழமை நடந்த இன்னொரு கூட்டம்

சனிக்கிழமை நடந்த இன்னொரு கூட்டம்  அழகியசிங்கர் இந்த மாதம் நான் வழக்கம்போல சனிக்கிழமை கூட்டம் நடத்தாமல் வெள்ளிக்கிழமை பொதுவான கூட்டம் ஒன்றை நடத்தினேன்.  த நா குமாரசாமியும் நானும் என்ற பெயரில் வ வே சு அவர்கள் பேசினார்கள். அதற்குக் காரணம் ஒன்று உள்ளது. என்னவென்றால் சனிக்கிழமை என் கதைகளுக்கான  கூட்டம் ஒன்றை நடத்தியதால், வெள்ளிக்கிழமை எப்போதும் நடத்தும் கூட்டத்தை நடத்தினேன்.    சில பேர்களை மட்டும் கூப்பிட்டு என் சிறுகதைக்கான கூட்டத்தை சனிக்கிழமை நடத்தினேன்.  பெரும்பாலும் பேசியவர்கள் அனைவரும் என் நண்பர்கள்.  இக் கூட்டத்திற்கு என் மனைவியும் பேத்தியும் கலந்து கொண்டார்கள்.  என் பழைய நண்பர்கள் வந்திருந்தார்கள்.    பேத்தி தமிழ் வாழ்த்துப் பாட கூட்டம் சிறப்பாக ஆரம்பமானது. முதன் முதலாக என் கதையைப் பிரசுரம் செய்த என் சகோதரரிடம் என் புத்தகத்தை அளித்தேன்.  அக் கதை எழுதி பிரசுரமான ஆண்டு 1979ஆம் ஆண்டு.  அதிலிருந்து நான் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறேன்.  2017ஆம் ஆண்டு வரை மொத்தம் 64 சிறுகதைகளும், 7 குறுநாவல்களும், சி...