Skip to main content

Posts

Showing posts with the label மூலம் - சமபிம (சிங்கள மொழியில்)

முடியுமெனில் சுட்டுத் தள்ளு

மொழிபெயர்ப்புக் குறுங்கதை தனக்குச் சொந்தமான சூதாட்டவிடுதியொன்றில், பொறுப்பாளராகவிருக்கும் என்ஸோ (ENZO), 25 மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதாக மாஃபியா தலைவரான கோட்ஃபாதருக்கு தகவல் கிடைத்தது. என்ஸோ காதுகேளாத, சற்று வயதான ஒருவர். அதனால் கோட்ஃபாதர், என்ஸோவுடன் கதைக்கச் செல்வது தனது சட்டத்தரணியுடன்தான். அந்தச் சட்டத்தரணிக்கு சைகை பாஷை தெரியும். "என்னிடமிருந்து களவாடிய 25 மில்லியன் டொலர்களும் எங்கே?" என்று என்ஸோவிடம் விசாரிக்கும்படி கோட்ஃபாதர், தனது சட்டத்தரணியிடம் உத்தரவிட்டார். சட்டத்தரணி, சைகை பாஷையை உபயோகித்து அந்தக் கேள்வியை என்ஸோவிடம் கேட்டார். 'நீங்கள் என்ன கேட்கிறீர்களென்றே எனக்கு விளங்கவில்லை' என்ஸோ சைகை பாஷையிலேயே பதில் சொன்னார். "நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோமென்றே அவருக்கு விளங்கவில்லையென்று அவர் சொல்கிறார்" சட்டத்தரணி, கோட்ஃபாதரிடம் கூறினார். தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த கோட்ஃபாதர், கோபத்தோடு அதனை என்ஸோவின் நெற்றியில் வைத்து, "திரும்பவும் கேள்" என சட்டத்தரணிக்குக் கட்டளைய...