கருவேலம் மரத்தில் காலம் தள்ளும் கீறப்பட்ட அந்தப் பெயர்களுக்குள் சமீபமாய் பல பிணக்குகள் பிசினை வழித்து கீழே தள்ளுவது யார் வேலை? கட்டெறும்புகள் மேலேறி வர யார் காரணம்? கோடை தொடங்குவதற்குள்ளே இலையுதிர்க்க யார் காரணம்? காக்கா முட்டையை பச்சப் பாம்புக்கு காட்டிக் கொடுத்தது ஏன்? தேனடை கட்ட அனுமதிக்காதது ஏன்? உச்சிக் கிளை முள்ளைப் பிடித்து தொங்கியவாறே கீழே குதித்துவிடப் போவதாக நேற்று மதியம் 'ள்' பெயர் மிரட்ட குதிக்காதே...குதிக்காதே என 'ன்' பெயர் கெஞ்சிய பிணக்கு 'உன் சொந்தக்காரப் பசுக்களுக்கு பழுத்த கருவேலங் காய்களை அதிகமாய் பறித்துப் போட்டாய் என் பசுக்களுக்குப் போடவே இல்லை.'