தேனரசன் கவிதைகள் வெள்ளை ரோஜா-கவிதைகள் அன்னம் வெளியீடு, அகரம் சிவகங்கை ரூ.5-00 தேனரசன் கவிதைகளை ஒருமுறை படித்ததும் ஒரு திறமையாளனை சந்திக்கிறோம் என்ற உண்மை உடனே புலப்பட்டு விடுகிறது. காகங்கள் முடிபுனைந்தால் கரைச்சல்களே சங்கீதம் சிறுமைக்கு நீர் வார்த்தால் தெருநெடுவே முள் வளரும். இந்த வரிகளைப் படிக்கும் பொழுது,'பேயரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற பாரதியின் வரியும், மற்றதில் எதிர் மறையாய ஒரு திருக்குறளும் முற்றிலுமாக மறைந்து புதிய வரிகளும் இடம் கொடுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 'தேவை பணம் இதுவே திருவாய் மொழி எனவே சேவை மனப்பான்மை சிவலோகம் போகிறது' 'அவரவர்கள் பாட்டுக்கு அகப்பட்டது சுருட்டல் தவறில்லை என்னுமொரு தருமம் தழைக்கிறது.' என்ற வரிகளில் ஒரு புதிய கவிஞனின் குரல் ஒலிப்பதைக் கேட்கலாம். சொல்ல...