Skip to main content

Posts

Showing posts with the label தாஜ்

தமிழ்ப் பேசும் ஆங்கில படம்

தெரு விளக்குகள் அணைந்து விட்டது. எல்லா திசைகளிலும் பூரணமான இருட்டு. மணி எட்டேகால் சொச்சம்தான். காற்று சூறையாக சப்தம் காட்டியபடி தாறுமாறாக வீசியது. இந்தக் கோடையில் காய்ந்து சருகாகி மடிந்துப்போன சாலைப் புழுதியெல்லாம் காற்றில் மேலெழுந்து கண்களில் அப்பியது. மேலெல்லாம் நாற்றப் பூச்சு. நட்சத்திர மண்டலம் மறைந்துப் போனது. தேய்ந்து போய் வளர்ந்த நிலவையும் காணோம். மின்னல் மின்னி நெளிய, இடி இடித்துக் காட்டியது. மழைவரும் என்று பேசிக்கொண்டு சிலர் ஓட்டமும் நடையுமாய் விரைந்தார்கள். தூற்றல் பலமாக விழுந்தது. ஏறிவந்த சைக்கிளை தள்ளிக் கொண்டும் போக இயலவில்லை. சுழற்றியடித்து அதை நிறுத்தியது காற்று. உடல் பலஹீனம்வேறு. தேங்கிவிட்டேன். காலம் என் முன்னே இருளாக கவிழ்ந்து கிடக்கிறது. விளக்குகள் மீண்டும் உயிர்பொற்றன. காற்றும் தூறலும் கூடிக்கொண்டே இருந்தது. நாலு வீடு தள்ளி, ஒரு வீட்டின் முன்புறம் கொஞ்சம் பெரிய பெட்டிக்கடை. அதன் முன்னால் போடப் பட்டிருந்த கீற்றுப் பந்தலில் சிலர் ஒதுங்கி நின்றார்கள். மழை விடட்டுமென சைக்கிளை ஓரத்தே விட்டுவிட்டு நானும் அங்கே ஏறிக்கொண்டேன். தூரத்தில் இருக்கும் எங்க முஹல்லா பள்...

சொல்லடி என் சிவசக்தி

மாலை தொடங்கிய காற்றும் மழையும், இருட்ட ஆரம்பித்த பிறகே ஓய்ந்தது. இடையில் போன மின்சாரம் போனதுதான். வானத்தை பார்த்தப்படிக்கு வாசலில் நின்றேன். குழுமையான காற்று உடலில் அறைந்துக் கொண்டிருந்தது. தடுப்பு வேலியில் மஞ்சள் நிற மாலைப் பூக்கள் ஈரம் மினுக்க தலையசைத்தது. வீட்டைச் சுற்றிநின்ற மரங்கள், மழை நீரை காற்றில் உதறும் சலசலப்பின் சப்தம். எங்கும் இருள் படர, வானத்தில் ஒளி வைரங்கள் காணவில்லை. மேகமூட்டம் நிலைக் கொண்டு மாபெரும் கருங்சிலேட்டாகிப் போனது வானம்! தூரத்தே அதன் அடர்கருப்பில் மின்னல் கீற்றுகள் ரம்மியமாக நெளிந்து கொண்டிருந்தது. நல்ல கோடையில் இப்படியொரு சூழல் அபூர்வம்! முன்பெல்லாம் இயற்கையின் இப்படியான விசேச வீச்சை கண்ட நாழிக்கு, கவிதையில் அதைப் பதிய மனம் பரக்கும். இப்பொழுது இல்லை, முடியாது. அந்த மனம் நசித்து கிடக்கிறது. அப்பா..! அப்பா இல்லாத போன பொழுதுகள் எனக்கு எத்தனை ரம்மியத்தை காட்டிதான் என்ன!செல்லம் கொஞ்சி, தட்டிக் கொடுத்து, நடைபயில ஆர்வம்கூட்டி, ஓட, ஆட, தாண்டச் சொல்லி, தூக்கிப் பிடித்த அப்பா! வாட்டம் காணும் நாழியெல்லாம் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து தைரியம் தந்த அப்பா! கட...