Skip to main content

Posts

Showing posts with the label சம்பத்

இரண்டு கவிதைகள்

கொல்லும் முகம் சுழலும் விழிகளில் நீ஡ ஏனோ? கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ! மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் - உன்முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ? தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்! தெரிந்ததில்லை - பருவமதில் - மாற்றத்தில் - தெரிந்ததுதான் யாருக்கு எப்போது? இயம்புமோ உன்முகம்தான் அதைப்பற்றி? என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே! என் சிந்தையில் படர்ந்த கோடிப் பூவே என் மூளையில் பூத்த வெண்மலரே! உன் முகம்தான் என்னைக் கொன்றதடி. இன்னொரு கவிதை அழிவுப் பாதையில் பயணம் - இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு - தொடுவானம் கண்டது! ஆக்கப் பாதையில் பயணம் - செளகரியங்களின் நிரந்தரத்திறகான - கதறலோடு பட்டமெனப் பறக்கவும் - ஆதூரம் கொண்டது ரொம்ப நாட்கள் கழித்து- ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன் - அழிவுப் பாதையும் - ஆக்கப் பாதையும் - தெரியாத இடத்தில் - களைத்து!

பிரிவு

ச ரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் 'ராஜதானி' எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது, இன்று, மூன்றாவது ஃபிளாட்பாரத்திலிருந்து புறப்படுகிறது. 'இன்னமும் இரண்டே மணி நேரங்களில் அவள் என்னை விட்டுவிட்டு கன வேகத்தில் 'ஹவ்ரா' பக்கம் போய்க்கொண்டிருப்பாள்,' என்று நினைத்தார் தினகரன். தன்னில் ஏதோ செத்துக்கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. பத்மாவைப் பற்றி இவ்வளவு தீவிரமாக எப்போதாவது நினைத்திருப்போமா? என்று பட்டது. "தீவிரங்களெல்லாம் சொல்லிக்கொண்டா வருகிறது?' என்று சொல்லி எதையெல்லாமோ சபித்தார். அவரும் நினைத்து நினைத்துப் பார்த்தார். 'எது என்னை கல்பனாவிடம் இவ்வளவு தீவிரமடையச் செய்தது?' அவள் முதன் முதலில் எல்லோருக்கும் நடுவே உட்கார்ந்து, நாலுமணி மாலை இருக்கும், பாட ஆரம்பித்தாள். அவள் உட்கார்ந்த விதம், அவளுடைய சிரிப்பு, அவளுடைய நாசியும், கண்களில் மிளிர்ந்த அகலமும்! இதுதான் அவரை முதன்முதலில் அவளிடம் ஈர்ப்பித்தது. இருந்தும் இதெல்லாம் தப்பு என்று அவர் அவள் பக்கம் கூட போகாமல் தலைதெறிக்க...