Skip to main content

Posts

Showing posts from November, 2022

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி - 45

 வெள்ளிக்கிழமை (25.11.2022) - மாலை 7 மணிக்கு விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது   நிகழ்ச்சி எண் - 45 முதல் நிகழ்வு எழுத்தாளர் எஸ்ஸார்சி சிறு கதைகளைக் குறித்து  1. இந்திர நீலன் சுரேஷ் - ஜரகண்டி 2. வளவ.துரையன் - செய்தவம் 3. நாகேந்திர பாரதி - எலி இரண்டாம் நிகழ்வு எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ்  சிறு கதைகளைக் குறித்து. 1. மீனாட்சி சுந்தர மூர்த்தி - பெருங் கூட்டத்தில் ஒருவன் 2.  ராஜாமணி  -  கரைந்தவர்கள் 3. H N ஹரிஹரன் - குவிந்த வாய் அதன் காணொளியை ரசித்துப் பாருங்கள் 

93வது விருட்சம் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 93வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

  93வது விருட்சம் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 93வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வெள்ளிகிழமை - (18.11. 2022) - மாலை 6.30மணிக்கு நடைபெற்றது. தமிழ் ஒளியின் கவிதைகள் குறித்து அழகியசிங்கர் பத்து நிமிடங்களுக்குக் குறைவாகவே பேசினார். ந.பிச்சமூர்த்தியின் கவிதை ஒன்றை எடுத்து ந.பானுமதி பேசினார். கவிதை 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசித்தோம். நிகழ்ச்சியின் காணொளியை கண்டு மகிழுங்கள்

கொக்கு/ந.பிச்சமூர்த்தி

  படிகக் குளத்தோரம்  கொக்கு செங்கால் நெடுக்கு.  வெண்பட்டுடம்புக் குறுக்கு முடியில் நீரை நோக்கும்  மஞ்சள் கட்டாரி மூக்கு, உண்டுண்டு அழகுக் கண்காட்சிக்குக்  கட்டாயக் கட்டணம். சிலவேளை மீனும்  பலவேளை நிழலும்... வாழ்வும் குளம்  செயலும் கலை  நாமும் கொக்கு.  சிலவேளை மீனழகு  பலவேளை நிழலழகா?  எதுவாயினென்ன? தவறாது குளப்பரப்பில்  நம்மழகு -  தெரிவதே போதாதா?

92வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 92வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 04.11. 2022 அன்று - மாலை 6.30மணிக்கு நடைபெற்றது . ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தோம். கூடவே இன்குலாப் கவிதைகளையும் வாசித்தோம். . இன்குலாப் கவிதைகள் குறித்து அம்ஷன் குமார் உரை நிகழ்த்தினார்.

கவிதைத் தொகுப்பு நூல்கள்

  அழகியசிங்கர்   கவிதைத் தொகுப்பு நூல் முதன் முதலாக யார் கொண்டு வந்தார்கள்? இதைப் பற்றி யோசிக்கும்போது புதுக்கவிதை என்ற வகைமை தமிழில் முதன் முதலாக உருவானபோது, சி.சு செல்லப்பாதான் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூல் கொண்டு வந்தார். எழுத்து என்ற சிற்றேட்டில் வெளிவந்த புதுக்கவிதைகளைத் தொகுத்து சி சு செல்லப்பா வெளியிட்டுள்ளார். முதல் தொகுப்பு நூலாக அது இருக்குமென்று தோன்றுகிறது. கடந்த சில தினங்களாகப் ‘புதுக்குரல்கள்’ தொகுப்பை என் நூல் நிலையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்.  ஏனோ என் கண்ணில் அது தென்படவில்லை.  அதன்பின் எழுபதுகளில் புதுக்கவிதைத் தொகுப்பு நூல்கள்தான்   அதிகமாக வெளிவந்ததாகத் தெரிகிறது. ‘இலக்கியச் சங்க வெளியீடாக’ ‘புள்ளி’ என்ற தொகுப்பு நூல்  டிசம்பர் 1972ல்  வெளிவந்துள்ளது.  என் இலக்கிய நண்பர் ஒருவர் மூலம் ‘புள்ளி’ என்ற தொகுப்பு நூல் கிடைத்தது. அதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக  இருந்தது. அந்த வடிவத்தில் ஒரு தொகுப்பு கொண்டு வர முடியுமா?  விரல்  சைஸில்.    அது மாதிரி ஒரு தொகுப்பு நூலை நானும்  கொண் வரவேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.  திரும்பவும் புள்ளியை 2015ல் நானும் முயற்ச