அழகியசிங்கர் ஆச்சரியமாக இருக்கிறது. 11 கூட்டங்கள் நடந்து முடிந்து விட்டதை எண்ணி. முதலில் நானும் ஆடிட்டர் கோவிந்தராஜன் அவர்களும் சேர்ந்து நடத்தும் கூட்டம், சில கூட்டங்களில் நின்று விடுமென்று நினைத்தேன். ஆனால் கூட்டம் தொடர்ந்து நடத்துவதென்பது சாத்தியமாக எனக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு கூட்டம் முடிவிலும் ஒவ்வொன்றை சரி செய்ய வேண்டுமென்று நான் நினைப்பேன். ஸ்ரீ அசோகமித்திரனை வைத்து முதல் கூட்டம் ஆரம்பித்தபோது, மைக் முதலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்தோம். உடனே வாங்கினோம். இப்போது மைக் மூலமாகத்தான் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறோம். கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருகிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. எனக்கும் ஆடிட்டருக்கும் இதில் தெளிவான பார்வை உண்டு. ஆனால் ஒவ்வொரு மாதமும் கூட்டத்திற்காக செலவழிக்கும் நேரத்தை உபயோகமாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. அதனால் கூட்டத்தில் பேசுவதை பதிவு செய்ய வாய்ஸ் ரெக்கார்டரை நான் பயன் படுத்துவது வழுக்கம். சோனியின் இந்த வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் பல கூட்டங்களைத் துல்லியமாக பதிவு செய்