கடந்த வாரம் முடிவில் (29 மே மாதத்திலிருந்து 2ஆம் தேதி ஜூன் வரை) சென்னையைவிட்டு, குடும்பம் சகிதமாக கொச்சின் சென்றோம். சனிக்கிழமை (30.05.2008)அன்று திருவனந்தபுரம் ஒருநாள் மட்டும் தங்கியிருந்தோம். ரயில்வே நிலையத்திற்கு அருகில் ஒரு ஓட்டலில் அறை எடுத்திருந்தோம். சுற்றிப் பார்ப்பதோடல்லாமல், நீல பத்மனாபனை பார்க்க நினைத்தேன். கூடவே அவரை அழைத்துக்கொண்டு நகுலன் வீட்டிற்கும் போக உத்தேசம் இருந்தது. அவருக்கு நான் வந்திருப்பதைச் சொன்னவுடன், என் உற்சாகம் ரொம்பவும் குறைந்துவிட்டது. அவரும் free ஆக இருக்கவில்லை. அவரைப் பார்த்துவிட்டு, நகுலன் வீட்டைப் பார்க்கும் எண்ணத்தில், நான் மட்டும் ஒரு ஆட்டோ வில் நகுலன் வீடை மட்டும் போய்ப் பார்த்தேன். பொதுவாக ஒரு இடத்திற்கு வரும்போது, அங்கு எழுத்தாளர்கள் என்று யாராவது இருந்தால், பார்க்க வருகிறேன் என்று சொன்னால்,உற்சாகம் குறைந்த உணர்வே ஏற்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, நகுலனிடம், 'உங்களைப் பார்க்க திருவனந்தபுரம் வருகிறேன்,' என்று குறிப்பிட்டேன். கேட்டவுடன், 'ஐய்யயோ..என் வீட்டில் தங்க முடியாது,' என்று பதறினா. எனக்கோ என்னடா இது என்று தோன்றியது. நான்