Skip to main content

Posts

விருட்சம் 109வது இதழ்

விருட்சம் 109வது இதழ் அழகியசிங்கர் அமெரிக்கா வருவதற்கு முன் நவீன விருட்சம் 108வது இதழ் தயாரித்து முடித்து விட்டேன்.  பின் எல்லோருக்கும் அனுப்பி விட்டேன்.  சிலருக்கு அனுப்பாமல் விட்டிருப்பேன். 108வது இதழ் கனமான இதழ்.  அத்தனைப் பக்கங்கள் ஒரு இதழைக் கொண்டு வர முயற்சி செய்யக்கூடாது. அந்த இதழில் குறிப்பிட்டபடி அமெரிக்காவிலிருந்து 109வது இதழ் தயாரிக்க விரும்புகிறேன்.  அமெரிக்கா வந்தபிறகு இங்கு எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகளைக் கொண்டு வரலாம் என்று இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.  நான் நினைத்தபடி நடக்காமல் போகலாம்.  முகநூலில் இதைக் குறிப்பிட விரும்புகிறேன்.  யாராவது இதைப் பார்த்துப் படைப்புகளை அனுப்பினால் பிரசுரிக்கத் தயாராக உள்ளேன்.   படைப்புகளை அனுப்ப விரும்புவோர் என்னுடைய இ மெயிலில் படைப்புகளை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.  அமெரிக்காவில் உள்ளவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் அனுப்பலாம். navina.virutcham@gmail.com  முகவரிக்கு அனுப்பவும்.

ஜானகிராமனின் 'குழந்தைக்கு சுரம்' என்ற கதை

அழகியசிங்கர் அக்பர் சாஸ்திரி என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதையின் பெயர் üகுழந்தைக்கு சுரம்ý என்ற கதை.  எழுத்தையே நம்பி வாழ்க்கை நடத்தும் ஒரு ஏழை எழுத்தாளனின் கதை என்று இதைக் குறிப்பிடலாம்.  அந்த எழுத்தாளனின் குழந்தை சுரம் வந்து அவதிப்படுகிறது.  ஜானகிராமன் கதையை இப்படி ஆரம்பிக்கிறார்: 'மனைவி சொன்னதைக் கேட்டார்.  குழந்தையைப் பார்த்தார். மணிபர்ûஸப் பார்த்தார்.  புத்தகம்போடும் பஞ்சாபகேசனை நினைத்தார்.  வாத்தியார் நெஞ்சு புகைத்தது. வயிற்றைப் பற்றிக்கொண்டு வந்தது.' இந்த ஒரு பாராவிலேயே கதையின் முழு வடிவத்தைக் கொண்டு வந்து விடுகிறார். குழந்தைக்கு சுரம்.  டாக்டரைப் பார்க்க வேண்டும்.  கையில் பணம் இல்லை. அந்தத் தருணத்தில் கடவுளைத் திட்டுகிறார்.  ஏன் இது மாதிரி வியாதியை குழந்தைக்குக் கொடுத்தாய் என்று.  பஞ்சபகேசன் இவருடைய புத்தகங்களை அச்சிட்டு விற்பவர்.  அவனை பாவி என்று குறிப்பிடுகிறாள்  மனைவி.  அவனிடம் போய் நின்றாலும் பணம் கிடைக்காது என்பது இவருடைய எண்ணம்.  உண்மைதான்.   பள்ளிக்கூட மாணவ...

நீங்களும் படிக்கலாம் - 49

அழகியசிங்கர் படிக்க வேண்டிய கதைகள் - 2 அக்பர் சாஸ்திரி என்ற சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1963ல் ஐந்திணை பதிப்பகம் மூலம் வந்துள்ளது. அதன்பின் தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்துவிட்டன. ஆறாம் பதிப்பு 1990ல் வந்துள்ளது.  அதன்பின் எத்தனைப் பதிப்புகள் வந்துள்ளன என்பது தெரியாது. 11 கதைகள் கொண்ட தொகுப்பில் முதல் கதை அக்பர் சாஸ்திரி.  அவநம்பிக்கையுடன் முன்னுரை எழுதி இருந்தாலும் ஜானகிராமன் எழுத்துக்கு வாசகரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு மறுப்பதிற்கில்லை.  இந்தப் புத்தகத்தின் 6வது பதிப்பைததான் வாங்கியிருக்கிறேன்.  புததகம் வாங்கிய ஆண்டு 1990.   தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் பார்க்கலாம்.  பொதுவாக கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.  ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ஒரே மையம் இல்லை. அதாவது ஒன்றின் தொடர்ச்சி இன்னொன்றில் இல்லை. முதல் கதை அக்பர் சாஸ்திரி என்றால் இரண்டாவது கதை 'துணை'  இப்படி விதம் விதமாய் கதைகள் அமைத்ததால் வாசகர்கள் கதைகளை வாசிக்கும்போது போரடிக்காது.  இதோ üதுணைý ...

நீங்களும் படிக்கலாம் - 49

அழகியசிங்கர் படிக்க வேண்டிய கதைகள் சென்னையிலிருந்து அமெரிக்கா வரும்போது 4 தமிழ்ப் புத்தகங்களும் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வந்தேன்.   கிட்டத்தட்ட 30 புத்தகங்களுக்கு மேல் எடுத்துவர தீர்மானித்திருந்தேன்.  இங்கே பொழுது போவது கடினமாக இருக்குமென்று தோன்றியது.  ஆனால் கடைசி நிமிடத்தில் என் மனைவியின் அதைரியத்தால் புத்தகங்களை எடுத்துவரும் பெரிய பையைத் தூக்கிக்கொண்டு வரவில்லை.  முக்கியமாக ஜோல்னாப் பையையும் எடுத்து வரவில்லை. ஆனால் அதற்குப்பதில் 2011ல் வாங்கிய கின்டல்  இருந்தது.  இதில் ஏகப்பட்ட புத்தகங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  அதைப் படிக்கலாம் என்று  தோன்றியது. மேலும் பிடிஎப் ஆக சில புத்தகங்களை டௌன் லோட் செய்து லாப்டாப்பில்.  ஆனால் இங்கே வந்தபிறகு அமெரிக்கன் நூலகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எடுத்து வரலாமென்று தெரிந்தத.  அதிலிருந்து 10 புத்தகங்களை எடுத்து வந்திருப்பேன்.   புத்தகம் படிப்பதும் அது குறித்து எதாவது எழுத முடியுமா என்று பார்ப்பதும்தான் என் பொழுதுபோக...

தெருவில் ஒளிரும் குழல் விளக்கு

அழகியசிங்கர் நீண்ட குழல் விளக்கொன்று ஒளிர்ந்து கம்பீரமாக நின்றது குறுகிய வட்டத்தில் ஒளியைச் சிந்திய வண்ணம் வெளியே தலையைக் காட்டி போகலாமாவென்று யோசித்தேன் வேண்டாம் என்றது ஒளிர் விளக்கு வாழ்க்கை வித்தியாசமாக இருக்கிறது எண்ணங்கள் எங்கங்கோ சென்றவண்ணம் உள்ளன

துளி : 40 - அவர்கள் நாகரீகமானவர்கள்

துளி : 40 - அவர்கள் நாகரீகமானவர்கள் அழகியசிங்கர் ஆரம்பத்தில் நான் அமெரிக்காவைப் பற்றி நினைக்கும்போது, அமெரிக்கா ஒரு பணக்கார நாடு.  பிச்சைக்காரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.  பிச்சைக்காரர்கள் இல்லாத உலகமே இல்லை.  என் கற்பனை முட்டாள்தனமானது.  ஏன் அப்படி நினைத்தேன் என்றால் செல்வ செழிப்புள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பதால்.   2011 ல் நான் வந்தபோது நியூயார்க் என்ற இடத்தில்தான் ஒன்றிரண்டு பிச்சைக்காரர்களைப் பார்த்தேன்.  அப்போது நான் ப்ளோரிடாவில் இருந்தேன்.  இப்போது பினீக்ஸ்.  சில தினங்களுக்கு முன்னால் நான் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் தட்டியை வைத்துக்கொண்டு இருந்தாள்.  தட்டியின் வாசகம் இப்படி எழுதியிருந்தது.  எதாவது உதவி செய்ய முடியுமா என்று.   எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  பிச்சை எடுப்பவர்கள் கூட நாகரீகமான முறையில் ஒரு தட்டியில் வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக் கிறார்களே என்று. சென்னையில் காலையில் சரவணபவன் அருகில் வந்தால் குறைந்...

துளி : 39 - வாரிசுகள் வேண்டுமா?

அழகியசிங்கர் இன்றைய அரசியல் கட்சிகளை ஒருவர் கூர்ந்து பார்த்தால் வாரிசு இல்லாத கட்சி எதாவது இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.   அந்தக் காலத்தில் அரசர்கள் ஆட்சியைப் பார்க்கும்போது ஒருவர் ஆட்சி முடியும்போது அந்த அரசரின் வாரிசுதான் ஆட்சி செய்வார்.  வாரிசு இல்லையென்றால் யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து அரசரைத் தேர்ந்தெடுப்பார்கள்.  முகலாயர்கள் ஆட்சி செய்யும்போது இது இன்னும் தெளிவாகவே தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சியில் இது வாரிசு ஆட்சி இல்லை என்று மறுத்தாலும் வாரிசு ஆட்சிதான் மறைமுகமாகவோ நேரிடையாகவே நடைபெறாமலில்லை. நேருக்குப் பிறகு இந்திரா காந்தி, இந்திரா காந்திக்குப் பிறகு ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, இவர்களுக்குப் பிறகு ராகூல் காந்தி என்று இது தொடரத்தான் செய்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் தலைவர் பதவியை வகுத்துள்ளார்.  இதற்குத் தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.  இன்னும் தேர்தலில் கலந்துகொள்ளும் பல அரசியல்வாதிகளின் வாரிசுகளின் புதல்வர்கள் அல்லது புதல்விகள் தேர்தலில் போட்டி இடுகிற...