அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 27ஆவது நிகழ்ச்சி சிறப்பா நடந்து முடிந்தது. ஒரு இலக்கியக் கூட்டத்தில் வழக்கமாக எதிர்பார்ப்பவர்களைத்தான் எதிர்பார்க்க முடியும். பெருந்தேவி புதுமைப்பித்தன் கதைகளை தீவிரமாக அலசி கட்டுரை மாதிரி படித்தார். அவருடைய பேச்சு சிறப்பாகவே இருந்தது. அவர் பேச்சை ஆடியோவிலோ வீடியோவிலோ பதிவு செய்யக்கூடாது என்பதால் பதிவு செய்யவில்லை. அவர் புத்தகமாகக் கொண்டு வருவார் என்ற நினைக்கிறேன். பெருந்தேவி புதுமைப் பித்தன் கதைகளைப் பற்றி பேசும்போது வாடா மல்லிகை என்ற கதையைப் பற்றி குறிப்பிட்டார். கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் இரண்டு முறை நான் அந்தக் கதையைப் படித்துப் பார்த்தேன். அந்தக் கதையில் ஒரு விஷயம் புரியவில்லை. மொத்தமே 3 பக்கங்கள் கொண்ட கதை இது. 1934 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதை. ஸரஸ÷ என்ற பிராமணப் பெண் விதவையாகி விடுகிறாள். 17 வயதிலேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது என்று புபி எழுதி உள்ளார். அவள் அழகை வர்ணிக்கும்போது ஸரஸ÷ ஒர் உலவும் க...