Skip to main content

Posts

குழந்தைகள் பூங்காவில்

அழகியசிங்கர் நேற்று ஞாயிற்றுக்கிழமை.  இந்த முறை விட்டுவிடலாம் என்று தோன்றியது. அதற்குக் காரணம் அப்பா. வீட்டில் அறையில் இருந்த அவர் நொடிக்கொருதரம் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்.  எங்கும் நகர முடியவில்லை.  கிருபானந்தன் போன் செய்தார்.  அசோக்நகரில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்குச்  சென்றோம்.  இந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயகாந்தன் கதைகளும் ஞானக்கூத்தன் கவிதைகளும்.  பிறகு எங்களுடைய கதைகள் கவிதைகள் வாசித்தோம். குழந்தைகள் பூங்காவில் நாங்கள் வாசித்ததுக் கொண்டிருந்தபோது, ஊஞ்சல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.  பக்கத்தில் ராஜாமணி வீடு இருந்தது.  அங்கு போய்விட்டோம்.  ராத்திரி 8 மணிவரை படித்தோம். ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு மாதிரி.  இதுவும் அப்படித்தான். கதைகளையும், கவிதைகளையும் படிக்கும்போது அது ஒருவித அனுபவத்தைத் தராமல் இருக்க தவறுவதில்லை.  பின் நாங்களே கதை சொல்லும் முயற்சியையும் செய்து பார்த்தோம்.  எல்லாவற்றையும் ஆடியில் கொடுத்துள்ளோம். கேட்டு மகிழவும். உங்கள் கருத்துகளை அறிய ஆவல். மேலும் இதை இன்னும் பிரமாத...

எழு வரிக் கதைகள்

அழகியசிங்கர் 1.சிகரெட் பிடிப்பவன்... நானும் என் மனைவியும் தெருவில் நடந்து சென்றோம்.  தெரு முனையில் வாலை ஆட்டியபடி மாடுகள்.  வீரபாகு திரும்பவும் மாடு வியாபாரமும் பால் வியாபாரமும் செய்து கொண்டிருக்கிறான்.  அவனைப் பார்த்தாலே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவனும் அதைப் பொருட்படுத்தவில்லை.  கோடம்பாக்கம் ரோடில் நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்தோம்.  வண்டி ரிப்பேர் என்பதால் வண்டியில் செல்லவில்லை.  மசூதி தெருவில் தனியாக இருக்கும் மாமியார் வீட்டிற்குத்தான் சென்று கொண்டிருந்தோம்.  தெருவில் ஒரு இடத்தில் நாலைந்து இளைஞர்கள் சிகரெட் பிடித்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். "நான் சிகரெட் பிடிப்பேன்," என்றேன் மனைவியிடம். அவள் பேசாமல் வந்து கொண்டிருந்தாள்.  நான் திரும்பவும் அதையே சொன்னேன். "நான் நம்பவில்லை," என்றாள் அவள். "நீ நம்ப வேண்டும், அவ்வளவுதானே,," என்று ஒரு பெட்டிக் கடையை நோக்கிச் சென்றேன்.  கடைக்காரனைப் பார்த்து, "ஒரு சிகரெட்" என்றேன்.  "என்ன பிராண்ட்" என்று கேட்டான்.  "ஏதோ ஒன்று," என்றேன்.  அவன் ...

அங்கும் இங்கும்........

அழகியசிங்கர் கவிதைக்காக என்ற புத்தகத்தில் ஞானக்கூத்தன் கொஞ்சம் பேசட்டுமா? என்ற தலைப்பில் இப்படி எழுதியிருக்கிறார் : 'கடினமான காரியங்களில் ஒன்று படிப்பது.  இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள்.  முற்றிலும் தப்பித்துக் கொள்ள முடியாதபடி நவீன மனிதனின் வாழ்க்கை அமைந்து விட்டது.  எனவே சிலவற்றைப் படித்தும் வேறு சிலவற்றைப் படிக்காமலும் விட மனிதன் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  இதனால் எழுதுகிறவர்களுக்குப் பெரிய நஷ்டம்.  நாவல் படிப்பவர்க் கவிதை படிப்பதை விட்டு விடுகிறார்கள். கவிதை படிப்பவர்கள் நாவல்களைப் படிப்பதாகத் தெரியவில்லை.  பலர் பழைய இலக்கியங்களை முற்றிலும் தவிர்த்து விடுகிறார்கள். தமிழாசிரியர்கள் நவீன இலக்கியங்களைப் படிப்பதில்லை.  படிப்பவர்கள் அதைக் கேலி செய்ய இடம் தரும் எழுத்துகளைப் படிக்கிறார்கள்.  இப்படி வாசகரகளின் கடைத்தெரு வீணாகிக கொண்டிருக்கிறது.  இதற்கிடையில் படிக்கிறார்களோ இல்லையோ வெளியிடும் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ எழுதுகிறவர்கள் இருந்து வருகிறார்கள்.' 34 தலைப்புகளில் 256 பக்கங்கள்...

ஏடிஎம்மில் போய் ஏன் பணம் எடுக்க முடியவில்லை?

அழகியசிங்கர் சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் எனக்கு போன் செய்தார்.  "ஒரு உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டார்.  "நிச்சயமாக," என்றேன்.  "ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும்," என்றார். நான் அவரைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றேன்.  என் வீடு பக்கத்திலேயே அவர் வீடு இருந்தது. அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வேன்.   சிலசமயம் நான் வருவேன் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார். அவர் எதிர்பார்க்கும் ஞாயிற்றுக்கிழமையில் நான் போயிருக்க மாட்டேன். அவருக்கு ஏமாற்றமாக இருக்கும்.  அந்த ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இன்னொரு ஞாயிற்றுக்கிழமை செல்லும்போது, "உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்," என்று அவர் மனைவிதான் குறிப்பிடுவார். அவரால் நடக்கவே முடியாது.  ஆர்யக்கவுடர் தெருவில் உள்ள ஏடிஎம்மில் அவரால் நடந்தே போக முடியாது.  நான் டூ வீலரில் அவரை உட்கார வைத்து அழைத்துக் கொண்டு போவேன்.  அப்போது டூ வீலரை ஜாக்கிரதயாக ஓட்டுவேன்.  ஏன் எனில் அவர் குள்ளமாக குண்டாக இருப்பார்.  எனக்கு டூ வீலர் ஓட்டும்போது தடுமாற்றம் ஏற்படுமோ என்று தோ...

ஏழு வரிகளில் கதை....

செல்வராஜ்  ஜெகதீசன்   “ நான் கொஞ்சம் அதிகம் பேசுறனா? ” “ மொத்தமா உன் பிரண்ட்ஸ் லிஸ்ட்ல எத்தனை பேர் தேறும் ”  என்றான் ரமேஷ். ரமேஷ் எப்போதும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இப்படி எதையாவது கேட்பான். அப்போது சரவணன் பேசிக்கொண்டிருந்தான். வெளியூரில் வேலை. ஏதோ விடுமுறையில் வந்திருந்தான். “ உன்னையும் (என்னைக்காட்டி) இவனையும் விட்டா இன்னும் ஒரு ரெண்டு பேர் தேறும்...நான் அதிகமா யார் கிட்டயும் அவ்வளவா வச்சிக்கிறதில்ல.. ” என்றான் சரவணன். “ நல்லா யோசிச்சுப் பாரு.. அது மட்டும்தான் காரணமா... ”  என்ற ரமேஷிடம் “ இப்போ என்ன சொல்ல வர? ” ...என்றான் சரவணன். “ கடந்த அரைமணி நேரமா நீதான் பேசிக்கிட்டிருக்க...நாங்க வெறுமனே கேட்டுக்கிட்டுதான் இருக்கோம்...இதுவே உன் பிரண்ட்ஸ் சர்க்கிள் கம்மியா இருக்கக் காரணமா இருக்கலாம். நீ கொஞ்சம் அதிகமா பேசற.. ” நன்றாக யோசித்திருப்பான் போலிருக்கிறது. இப்போதெல்லாம் பேசும்போது இடையிடையே  “ நான் கொஞ்சம் அதிகம் பேசுறனா? ”  என்பதை சேர்த்திருந்தான். பேச்சு என்னவோ அதே அளவுதான். o

ஆத்மாநாம் இதையெல்லாம் ஏன் எதிர்பார்த்தார்

அழகியசிங்கர் ஆத்மாநாமின் பிரச்சினை உடனடியாக புகழ் வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்று அவர் நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எல்லோருக்கும் அதுமாதிரியான பிரச்சினை இருக்குமென்று தோன்றுகிறது. குறிப்பாக எழுதுபவர்களுககு.   எப்போதும் நம்முடைய எழுத்தை யாராவது படிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எழுதுபவர்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.  பத்திரிகைகளில் தினசரி தாள்களில் எதாவது படைப்புகள் வெளிவந்தால் அதை உடனடியாக தெரிந்தவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறார்கள். பின் அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள். இப்போதாவது முகநூல் என்ற ஒன்று இருக்கிறது.  அதன் மூலம் நாம் தெரிவிக்கிற கருத்துகளை உடனுக்குடன் மற்றவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள்.  இப்போது ஒருவருக்குக் கிடைக்கிற இந்த அங்கீகரிப்பு அன்று மட்டும் இருந்திருந்தால், ஆத்மாநாம் போன்றவர்கள் தற்கொலையே செய்திருக்க மாட்டார்கள்.   அவர் எழுதி வைத்த அத்தனை கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டு வர வழி இல்லாமல் தவித்தார்.  அந்தச் சமயத்தில் அவர் எழுதிய வேகத்தில் அதைப் பற்ற...

நகுலன் எழுதிய மூன்று நொடிக் கதைகள்

அழகியசிங்கர் ஏழு வரிக் கதைக்கு முக்கிய காரணம் நகுலன்தான்.  அவர் ஞானரதம் அக்டோபர் 1972ல் மூன்று நொடிக் கதைகள் எழுதி உள்ளார்.  அதைப்படித்துப் பார்த்தப் பிறகு அதே மாதிரியான முயற்சியை ஏன் எற்படுத்துக் கூடாது என்று தோன்றியது. இதோ நகுலன் எழுதிய மூன்று நொடிக் கதைகளை இங்கு அளிக்க விரும்புகிறேன். கதை ஒன்று ஆஸ்பத்திரி. அறையில் அவன். ரண சிகிச்சை செய்து கிடத்தியிருந்தார்கள் நான்கு மணி நேரம் கழித்து அவன் தன்னருகில் யாரோ நிற்பதாக ஒரு போதம் தட்டி விழித்துப் பார்த்தான். யாரும் இல்லை.  மறுபடியும் தூங்கி விட்டான். அவ்விருவரும் வெளியில் வந்தனர். முதல்வன் : ஏன்? மற்றவன் : இன்னும் சமயம் ஆகவில்லை. கதை இரண்டு அவளுக்கு ஐந்து வயது. தாயிடம் விரைந்து சென்றாள். "அம்மா உன்னை யாரோ பார்க்க வந்திருக்கார்." "üயாருடி?" "தெரியல்லே, அம்மா, கேட்டதுக்கு உனக்குத் தெரியும்கிறார்." அவள் வெளியே வந்ததும், அவனைப் பார்த்தாள். அவள், "குழந்தை வருவதற்கு முன் போய் விடுங்கள்.  உங்களுடன் இனியும் என்னால் அவஸ்தைப்பட முடியாது," அவன்,"அலமு, நான் ...