Skip to main content

Posts

கசடதபற ஜøலை 1971 - 12வது இதழ்

நான் குளம் ஆ சந்திரபோஸ் நாளை பெய்யும மழையில் நான் நிரம்பி விடுவேன் நேற்றுவரை.... குடிக்க நீர் கொடுத்தேன், குளித்துத் துவைத்தனர். குதித்து விளையாடிக்கூட என் மீது படகு விட்டனர். வயிறு புடைக்கத் தின்று ஏப்பம் விட கொக்குகளுக்கு மீன் கொடுத்தேனே..... மீனுக்கு என் 'பாசம்' இரையாக வில்லையா? ஏன்? இன்று கூட என்மேல் படிந்து கிடக்கும் அழுக்கை உரமாக்குகிறீர்களே... நான் என்ன கெட்டுவிட்டேன்...? நாளை பெய்யும் மழையில் நான் நிரம்பி விடுவேன்.

புத்தக விமர்சனம் 12

அழகியசிங்கர் தேவேந்திரபூபதியின் 'நடுக்கடல் மௌனம்' என்ற கவிதைத் தொகுதியை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். இத் தொகுதியில் உள்ள கவிதைகள் எல்லாம் என்னுடன் அமர்ந்து பேசும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் கட்டுக்கடங்காமல் இக் கவிதைகள் எங்கோ சஞ்சாரித்துக் கொண்டிருக்கின்றனவோ என்றும் தோன்றியது.  திரும்ப திரும்ப இக் கவிதைளைக் கூப்பிட்டு அதனூடன் உரையாட முயற்சி செய்தேன். தனக்குத் தெரிந்ததை சில கவிதைகள் சொல்லிச் சென்றன. பல கவிதைகள் ஒன்றும் சொல்லாமல் முறைத்தபடி சென்றுவிட்டன. நான் என்ற தன்னை சாட்சியாக வைத்து பல கவிதைகள் எழுதிக் கொண்டே போகின்றன. சிலசமயம் சுயபுராணமாக இருக்குமோ என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. கவிதையில் பூடகத் தன்மையைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அது ஓரளவுதான் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. படிக்க வருகிற வாசகன் என்ன எழுதி உள்ளார் என்று ஆராய்ச்சி செய்வதற்கு நேரமில்லாமல் இருப்பான். இத் தொகுப்பை மூன்று விதமாகப் பிரிக்கிறார் தேவேந்திரபூபதி. முதல் பகுதியை அலைமுகம் என்று பிரிக்கிறார். இரண்டாவது பகுதியை ...

லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியைப் பற்றிய ஓர் ஆவணப்படம்.....

அழகியசிங்கர் அம்ஷன்குமாரின் ஒரு ஆவணப்படம் யாழ்ப்பாணம் தெட்சணமூர்த்தியைப் பற்றியது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்குமேல் இந்த ஆவணப்படத்தைத தயாரித்துள்ளார். 1933ஆம் ஆண்டு பிறந்த தவில் வித்வான் தெட்சணாமூர்த்தி 42வது வயதில் அதாவது 1975ஆம் ஆண்டு இறந்துவிட்டார். தவிலில் அவருடைய சாதனையை விளக்குவதே இந்த ஆவணப்படம். தவிலில் சாதனைப் படைத்த தெட்சணாமூர்த்தியை எட்டாவது உலக அதிசயம் என்று குறிப்பிடுகிறார்கள் இசை மேதைகள். எனக்கு இசையைப் பற்றி ரொம்பவும் தெரியாது. நான் ஒரு பாமர ரசிகன். இசையை வெறுப்பவன் கிடையாது. ஆனால் இசைத் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படத்தை இரண்டு மணி நேரம் விடாமல் பார்த்தேன். கொஞ்சங்கூட அசையாமல் வைத்தக் கண் ணை எடுக்காமல் இந்த ஆவணப்படத்தை ரசித்தேன்.  பொதுவாக பெரும்பாலான ஆவணப்படங்களை முழுவதும் பார்த்து ரசிக்க முடியாது. பாதியிலேயே பார்க்க வேண்டாமென்று தோன்றும். இந்த ஆவணப்படத்திற்கான வெளியீட்டுக் கூட்டம் சமீபத்தில் டாக் சென்டரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குச் சென்று யாழ்ப்பாணம் தெட்சணாமூர்ததியின் ஆவணப்படமும், அவர் இசை எலலாவற்றையு...

ஆயிரம் கூட்டம் நடத்திய அபூர்வ சிந்தாமணி

அழகியசிங்கர்     ஒரு சினிமாத் தலைப்பை இப்படி மாற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.  கூட்டம் நடத்துவது எப்படி என்பது தெரியாமல்தான் நான் இதுவரை கூட்டம் நடத்தி இருக்கிறேன்.  எத்தனைக் கூட்டங்கள் என்று நினைக்கிறீர்கள்?  கிட்டத்தட்ட 100 கூட்டங்களுக்கு மேல் இருக்கும். பல நோட்டுப் புத்தகங்களில் யார் யார் வருகைப் புரிந்துள்ளார்கள் என்றெல்லாம் குறித்து வைத்திருக்கிறேன்.  நவீன விருட்சம் என்ற பத்திரிகையை 28 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வரும்போது கூட்டத்தையும் நடத்திக்கொண்டு வந்தேன்.  பத்திரிகைக்கு ஆகும் செலவை விட கூட்டத்திற்கு ஆகும் செலவு மிக மிக குறைவாகவே ஆகும்.     கூட்டம் நடத்த என்னைப் புகுத்தியவர் என் நண்பர் ஒருவர்.  அவர் தயாரித்த ஒரு பொருளுக்கு விளம்பரம் தரும் நோக்கத்தில் என்னை இலக்கியக் கூட்டம் நடத்தத் தூண்டியவர்.  இரண்டு மூன்று கூட்டங்களுக்குப் பிறகு அவர் ஆதரவு எனக்குப் போய்விட்டது.  பின் நான் மட்டும் கூட்டம் நடத்தினேன்.  என் கூட்டம் தபால் கார்டு கூட்டம்.  தபால் கார்டில் எல்லோருக்கும் தகவல் அனுப்புவே...

நவீனவிருட்சம்

நவீனவிருட்சம் 98வது இதழ் வெளிவந்து விட்டது.  வழக்கம்போல கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புத்தக மதிபபுரை எல்லாம். வழக்கம்போல இதழ் தாமதமாக வந்துள்ளது.  முதன் முதலாக விருட்சம் அட்டையில் ஒரு எழுத்தாளரின் புகைப்படத்தைப் பிரசுரம் செய்துள்ளேன்.  வருத்தமான சூழ்நிலையில்தான இதைச செய்யுமபடி நேரிட்டது.  படைப்பின் ரகசியம் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.  இதழில் மூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  அ மலைச்சாமி என்பவர் ஊமைக் கொலுசுகள் என்ற பெயரில் கதை எழுதி உள்ளார்.  ஜாதுஷ்டிரன் என்ற கவிஞர் யார் என்பது தெரியவில்லை.  அவருடைய கவிதைகளை எல்லாம் திரட்டி வெளியிட்டிருக்கிறேன்.  இன்னும் சில கவிஞர்களின் கவிதைகளை இப்படிப் பிரசுரம் செய்ய உத்தேசம்.  இரண்டு புத்தகங்களுக்கு விமர்சனம் வந்துள்ளன.        கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக நவீன விருட்சம் வெளிவந்து கொண்டிருக்கிறது.  அதிகப் பக்கங்கள் இல்லை எளிமையான பத்திரிகையாகத்தான் விருட்சம் வெளிவந்து கொண்டிருக்கிறது.  இனிமேலும் வரும்.  உங்களுடைய வாழ்த்துக...

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 18

         தலைப்பு     ஊடகக்  கலாச்சாரம்        பேசுவோர்     கடற்கரய் மத்தவிலாச அங்கதம்             இடம் :         அலமேலு கல்யாண மண்டபம                          அகஸ்தியர் கோயில் பின்புறம்                          19 ராதாகிருஷ்ணன் தெரு                         தி நகர், சென்னை 600 017     தேதி        31.10.2015 (சனிக்கிழமை)                நேரம்         மாலை  6 மணிக்கு     பேசுவோர் குறிப்பு : பல ஆண்டுகளாக அச...

ஒரு நினைவு - ஒரு திரைப்படம்

பிரபு மயிலாடுதுறை எனது இளம் பிராயத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி மனதில் ஓர் ஆழமான ஞாபகமாக பதிவாகி உள்ளது. அவ்வனுபவத்தின் கூறுகளாக ஒரு திரைப்படமும் நானும் எனது தந்தையும் உள்ளோம். அது நிகழ்ந்த போது, எனக்கு ஐந்து வயது. பள்ளி விடுமுறையாயிருந்த ஒரு சனிக்கிழமையில், எனது தந்தை என்னை சைக்கிளில் முன்னால் அமர வைத்து அழைத்துச் சென்றார். அன்றைய பகலின் வெளிச்சம் கூட தெளிவாக இன்னும் நினைவில் இருக்கிறது. வாகனம் ஒரு திரையரங்குக்கு சென்றது. அது நாள் வரை, மாலை நேரத்தில் திரைப்படம் பார்க்க பெற்றோருடன் அல்லது உறவினர்களுடன் அரங்குக்கு சென்றிருந்த எனக்கு தந்தையும் நானும் மட்டும் படம் பார்க்கச் சென்றது நூதனமாக இருந்தது. பெரிய தாழ்வாரங்கள்,சிறு திறப்பு கொண்ட டிக்கெட் கொடுக்குமிடம், பெரும் உயரம் வரை பொருத்தப்பட்டிருக்கும் சிமெண்ட் ஜாலிகள், சுருண்டிருக்கும் சோள உருண்டைகள், டிக்கெட் கிழித்து உள்ளே அனுப்பும் பணியாளர்கள் மற்றும் நீண்ட வரிசையில் நிற்கும் சைக்கிள்கள் ஆகிய திரையரங்கின் காட்சிகள் மீது திரைப்படம் போலவே ஈர்ப்பு இருந்தது. அங்கே நிறைய பேர் இருந்தனர். இருக்கையில் அமர்ந்ததும் எனது தந்தை ...