Skip to main content

Posts

எதையாவது சொல்லட்டுமா......89

அழகியசிங்கர்     சி சு செல்லப்பா கூட்டம் ஒன்று ஜனவரி மாதம் நடந்தது.  அதில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார்.  சி சு செல்லப்பாவின் நெருங்கிய நண்பர்.  செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் எழுதியவர்.  அவர் நடந்து வரும்போது யாரோ ஒருவர் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு வரும்படியாக இருந்தது.  முறுக்கிய மீசையுடன் கம்பீரமாகக் காட்சி அளிப்பவர்.  பேசும்போது தயங்கி தயங்கி பேசுவதுபோல் இருந்தாலும், யாரும் அவரது பேச்சை ரசிப்பார்கள்.  கிட்டத்தட்ட 75 வயதாவது அவருக்கு இருக்கும்.  தமிழில் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்.  ஆனால் அவர் தன்னை சிறுகதை எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன்.  நாடகத்தில் தீவிரமாக கவனம் செலுத்துபவர்.  ஒவ்வொரு நடிகனும்  வசனம் பேசும்போது எப்படி உச்சரிக்க வேண்டுமென்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.  கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் சி சு செல்லப்பாவை குறித்து தன் எண்ண ஓட்டத்தைத் தெளிவாகப் பேசினார்.   அவரின் கம்பீரமான குரலுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் அன்று அவர் துண...

வரட்டும்

அழகியசிங்கர்  சந்திரமௌலி என்பவர் அங்கிருந்து இங்கு வருகிறார் இங்கிருந்து அங்கு போகிறார் பென்சன்காரர்கள் எங்கே எங்கே எங்கே என்று கேட்கிறார்கள் அவர் ஆமாம் ஆமாம் ஆமாம் என்கிறார் யாருக்கும் எந்தத் தீர்வும் கிடைப்பதில்லை குறையில்லாத மனிதர்களும் இல்லை 2014 பிப்ரவரி மாதம் பின்பு இவரும் பென்சன்காரர்தான்                                 (25.09.2013) 

A. Thiagarajan

    கண்ணாடி   கண்ணால் காண்பதும் பொய் ... கண்டதே காட்சி ... கண்ணாலே பேசி பேசி .... இன்னமும் எத்தனை  கண்கள் சார்ந்தவை ? வார்த்தைகள், பழமொழிகள், அறிவுரைகள்  வழக்காடல்கள் புழக்கத்தில் ... பார்த்தலே நம்புதல் விசிவிக்-  நீ எதை பார்க்கிறாயோ அதுவே கிடைக்கும்   என்ன பேசினாலும்  எப்படி யோசனை செய்தாலும்  கண்ணாலே பார்ப்பது போலாகுமா? பகுத்தறிவாளனும் இதையே... தினமும் இந்தப்  பொய் நமக்கு அவசியம்  வேண்டியிருக்கிறது... நினைவு தெரிந்த நாளிலிருந்து  இன்று வரை நான் எனது  என்று நம்பும் என் முகமல்லாத வேரொரு பிம்பத்தை  தவறாமல் தினமும் எனக்கே காட்டும் இந்த கண்ணாடியை  தவறாமல் தினமும் நானும் பொய்யாய் கண்டும்- ஒரு சந்தேகம்  கண்ணாடி கண்டுபிடிக்குமுன்னர்  எதைப் பார்த்துக் கொண்டிருதோம்? பார்த்தல் என்பதுதான் நம்புதல்  என்று ஆன பின்,   அவை  நம்பிக்கொண்டிருத்தல் என்பது  அவசியமில்லாத நாட்களாக இர...

பெண்

சா.தீபா     காணக் கிடைக்காத  காவல்கள் எனக்காகவே  காவலில்லாத வாயில்களில்  காத்துக் கிடக்கும்!    தெருவில் இறங்கித்  தொடர்ந்து நடக்கத்  தொடர்பில்லாத  கண்கள்  துளைத்துத் தொலைக்கும்!   ஆடைகளின் சலசலப்பும்  ஆரவாரமாய்த் தோன்றும்! வசைமொழியில் வாய் நனைத்து  வார்த்தைகள் கேட்கும்!   பேருந்து நிறுத்தம் வந்து  பெருமூச்சு விடும் முன்பு  பெருங்கூட்டம் கழுகாகி  வெறித்துப்  பார்க்கும்!   சகித்துக்  கொண்டு  சட்டென்று பேருந்திலேற  சற்றுமுன்  பார்த்த கூட்டம்  வேலை காட்டும்!   நிறுத்தம் வந்து  நின்றிறங்கிய பின்பு  அலுவலக வாயிலும்  அப்படியே வரவேற்கும்!   இறந்த பகலின்  இருளோடு வீடு வர  சந்தேகமாய் சில முகங்கள்  சேறிரைத்துப்  போகும்   என்ன செய்ய?          பெண் என்று         ...

சில குறிப்புகள்...1

அழகியசிங்கர்     21.09.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மையிலாப்பூரில் உள்ள கோகுலே ஹாலில் ஆரம்பித்து 80 ஆண்டுகள் முடிந்த மணிக்கொடி பத்திரிகைக்கு ஒரு கூட்டம் நடந்தது.  மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் புதல்வர் போனில் அழைத்ததால் சென்றேன்.  அரங்கத்தில் மணிக்கொடி எழுத்தாளர்களின் வாரிசுகள் இடம் பெற்றிருந்தனர்.  சிதம்பர சுப்பிரமணியன் புதல்வர்கள், இராமையாவின் புதல்விகள், சிட்டியின் புதல்வர்கள், சி சு செல்லப்பாவின் புதல்வர் என்று பலர் கலந்து கொண்டார்கள்.  கி.அ சச்சிதானந்தம், ம ராஜேந்திரன், மூத்த எழுத்தாளர் நரசய்யா, பேராசிரியை செந்தமிழ்ச் செல்வி என்று பலர் கலந்துகொண்டு மணிக்கொடி பத்திரிகைப் பற்றி பேசினார்கள்.      நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் மறைமலைநகர் நூலகத்திற்குச் சென்று மணிக்கொடி இதழ்களைப் பார்த்திருக்கிறேன்.  மணிக்கொடி எழுத்தாளர்களான சி சு செல்லப்பா, சிட்டி அவர்களுடன் பேசிப் பழகியிருக்கிறேன்.              கூட்டத்திற்கு பொருத்தமே இல்லாமல் சுப்பு ...
எதிரி காஷ்மீர் சிறுகதை - ஏ.ஜி. அத்தார் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில் எந்தவொரு மனித ஜீவராசியும் தேசத்தின் எல்லையைக் கடந்து செல்வரென அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப் போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின் முகம் எனது கண்ணெதிரே தோன்றுகிறது. அவரது நிலைமை படுமோசமானதென தகவல் தந்தவர் கூறியிருந்தார். நீலம் ஆற்றங்கரையில் தனது இல்லத்தில் வசிக்கும் அவனுக்கு தனதென்று சொல்லக் கூடிய எவரும் அங்கில்லை. நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் வசித்து வந்தேன். எனது சகோதரன் ஆற்றின் எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கரையில் வசித்து வந்தான். 'அவர் சுயநினைவற்ற நிலையிலும் உங்கள் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறார்' என தகவல் தந்தவர் கூறியிருந்தார். அவ்வாறான தகவலொன்று கிடைத்த பின்...

நீல பத்மநாபனின் 43 கவிதைகள் குறித்து...............

     அழகியசிங்கர்         திருவனந்தபுரம் என்ற இடத்திலிருந்து மூன்று முக்கிய  படைப்பாளிகளை நான் அறிவேன்.  அதில் ஒருவரான நீல பத்மநாபனை எனக்கு கல்லூரி ஆண்டிலிருந்து தெரியும்.  அவர் புத்தகங்களை நான் விரும்பிப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து அவரை நேரிடையாக அறியாவிட்டாலும் அவர் மீது எனக்கு ஒருவித மதிப்பும், லயிப்பும் இருந்துகொண்டுதான் இருந்தது.   இன்னும் இரண்டு படைப்பாளிகளாக நான் அறிவது. நகுலனையும் காசியபனையும்.  இந்த மூன்று படைப்பாளிகளிடமும் நான் காணும் ஒரு ஒற்றுமை.  மூவரும் கவிதைகள் எழுதுவார்கள்.  சிறுகதைகள் எழுதுவார்கள்.  நாவல்கள் எழுதுவார்கள்.  கட்டுரைகள் எழுதுவார்கள்.  மொழிபெயர்ப்பு செய்வார்கள்.   திருவனந்தபுரத்தில் இன்னும் இரண்டு படைப்பாளிகளைப் பற்றியும் நான் அறிவேன்.  அதில் ஒருவர் ஷண்முக சுப்பையா.  இன்னொருவர் ஆ மாதவன்.  ஷண்முக சுப்பையா கவிதைகளுடன் நின்றுவிட்டார்.  ஆ மாதவன் சிறுகதைகள், நாவல்களுடன் நின்றுவிட்டார்.   நீல பத்மநாபனை நான் அறிந்த...