Skip to main content

Posts

மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்

அசோகமித்திரன் ஒரு காலத்தில் வார மாதப் பத்திரிகைகள் மிகவும் குறைவு. வெளிவருவதில் பக்கத்துக்குப் பக்கம் விகடத்துணுக்குகள் இருக்கும். திரும்பத் திரும்ப மருத்துவர்கள் பற்றிய துணுக்குகள். “டாக்டர் உன் நண்பர் என்று சொன்னாயே, பின் ஏன் ஃபீஸ் கொடுத்தாய்? ” “அவர் பிழைக்க வேண்டுமே? ” “அப்படிப் பணம் கொடுத்து வாங்கிய மருந்தை ஏன் குப்பையில் கொட்டினாய்? ” “நான் பிழைக்க வேண்டுமே? ” அந்த நாட்களில் டாக்டர்கள் பத்திரிகைகளைத் தொடாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது கோபமே வராதவர்களாக இருக்கவேண்டும். எந்தக் கலாச்சாரத்தில் நீண்ட மருத்துவப் பாரம்பரியம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ந்ம்பிக்கை-அவநம்பிக்கை இரண்டும் சேர்ந்தே இருக்கின்றன. பெரும்பாலானோர் கடவுளைப் பிரார்த்திகாதபடி டாக்டரிடம் செல்வதில்லை. கன்னட எழுத்தாளர் சிவராம் கரந்த் பிறப்பால் பிராமணரானாலும் ஒரு நாத்திகவாதி. ஒரு முறை அவருடைய குழந்தைக்குப் பெருவாரி நோய் கண்டு விட்டது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலும் அம்மை, பிளேக் முதலியன கால அட்டவணை அமைத்துக் கொண்டு மாறி மாறி வரும். அம்மைக்கு வைத்தியம் செய்யாமல் வீட...

ஐராவதம் பக்கங்கள்....

தானும் அதுவாகப் பாவித்து - சிறுகதைகள் - எஸ்.ஷங்கரநாராயணன் - சொல்லாங்கடி - சென்னை 19- முதல் பதிப்பு 2012- பக்கம் 207 விலை ரூ.120  கேட்கிறபோது பத்திரிகைகளுக்கு எழுதினாலும் வெளியிடும் உத்வேகத்துடன் நான் கதைகளை உருவாக்குவதோ, பிரசுர அவசரம் காட்டுவதோ இல்லை.  வாய்ப்புகள் வரும்போது அவை அச்சுவாகம் ஏறும்.  கதைப் புனைவு ஒரு மனநிலை.  தியானம் போன்றதொரு மனநிலை அது.  அகக்கண் திறக்கும் கணங்கள்.  உள்ளே தெரிகிற, விரிகிற காட்சிகளில் திளைக்கிறதில் உள்ள தினவு தனி அனுபவம்.  அதை ருசி கண்டபின் அடிக்கடி பசியும் கண்டாகிறது.  உறங்கி அடியில் சில சமயம் அது பதுங்கினாலும், குபீரென்று கதவு திறந்துகொண்டு வீட்டுள் நுழையும் பள்ளிக் குழந்தைகள் போல...அப்பாவை அவை முகம் மலரச் செய்துவிடும். இப்படி எழுதும் ஆசிரியர் பின்வரும் வரிகளில் தன் உடல் உபாதைகளை வர்ணிக்கிறார்.  தைராய்டு பிரச்னை என்னை தினசரி ஒழுங்குகளில் சிரமப்படுத்துகிறது.  கண்ணின் வீரியமும் அத்தனைக்குப் பாராட்டும் வசத்தில் இல்லைதான்.  உடல்சோர்கை வாழ்க்கைச் சார்ந்த அலுப்பாக நினைக்க வேண்டாம்.  நினைக...

புத்தக மதிப்புரையும், புத்தக வாசிப்பும்.......

அழகியசிங்கர் சமீபத்தில் ஒரு சிற்றிதழை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.  அச்சிற்றிதழில் பெரும்பாலான பக்கங்களில் புத்தக மதிப்புரைகள் வெளிவந்திருந்தன.  எனக்குத் திகைப்பாக இருந்தது.  என் வெளியீடாகக் கொண்டு வந்துள்ள நான்கு கவிதைப் புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கியிருந்தார்கள்.  என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை.  உண்மைதானா என்று யோசித்தேன். ஆமாம் உண்மைதான்.  ஏனென்றால், அப் புத்தகங்களை நான் பல பத்திரிகைகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறேன்.  அவர்கள் எல்லாம் கண்டுகொள்ளவில்லை.  ஒரு சேர எல்லாக் கவிதைப் புத்தகங்களுக்கும் விமர்சனம் வந்தால் நீங்கள் சந்தோஷம் அடைவீர்களா மாட்டீர்களா?  ஆனால் எனக்குச் சந்தோஷம் ஏற்படவில்லை.  ஏன்? இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும்.  அதற்குமுன் இன்னும் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது என் நண்பர் ஒருவர் புத்தக விமர்சனம் அதில் வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  அவரே ஒரு புத்தகத்திற்கு மதிப்புரை எழுதிக்கொடுத்தார்.  பின் வேறு எழுத்தாள நண்பர்களும் எழுத...

***பசித்த பாம்பும், பிடரனும் மற்றும் பார்வையாளர்களும்

ரவிஉதயன் சேமித்தக் காற்றையெல்லாம் இசையோடு ஊதி பாம்பிடம் கேட்கிறான் சீறலை. மீதம் வைத்திருந்த வலுவைஎல்லாம் திரட்டி படமெடுத்துப் பாம்பு கேட்கிறது சீறலோடு பிடரனிடம். தன் இரையை. சுற்றிலும் பசியின்விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவ்வளவு பயந்திருந்தார்கள் பசியைக் கண்ணுற்று.

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு

  அழகியசிங்கர்   13   பந்தநல்லூர் என்ற கிராமத்திற்குச் செல்லும்போது எனக்கு அசிக்காடுதான் ஞாபகத்திற்கு வரும்.  அசிக்காடு போகும் வழியில் உள்ள பாதை குறுகலானது  மறையூர் அல்லது மல்லியம் வழியாக அசிக்காடு போகலாம்.  அந்தக் காலத்தில் ரோடு சரியாக இருக்காது.  மாட்டு வண்டியில்தான் போக வேண்டும்.  பலமுறை நான அசிக்காடு கிராமத்திற்குச் சென்றிருக்கிறோம்.  ஆனால் ஒருமுறை நான், என் தம்பி, என் பெரியப்பா பிள்ளைகளுடன் போனதை மறக்க முடியாது.  அந்த முறை என் நெருங்கிய உறவினர் இறந்துவிட அசிக்காட்டில் உள்ள என் பெரிய பெரியப்பா குடும்பம் அசிக்காடு கிராமத்தை விட்டே சென்றுவிட்டார்கள்.  அந்த இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடுவதற்கே நாங்கள் சிரமப் பட்டோம்.  ஒரு வீட்டில் திவசம் நடந்துகொண்டிருந்தது.  அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டார்கள்.  நாங்கள் மதியம் 2 மணிவரை ஒன்றும் சாப்பிடாமல் காத்திருந்தோம்.  ஆனால் பந்தநல்லூர் இன்னும் பெரிய கிராமம்.  அடிக்கடி பஸ்கள் போய்க்கொண்டிருக்கும்.  நான் திரும்பவும் மயிலாடுதுறைக்கு வந்துவிட்டதால...

நான், பிரமிள், விசிறி சாமியார்.....18

அழகியசிங்கர்   எங்கள் தெருவில் இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.  என் வீட்டிற்கு எதிர் வீட்டல்தான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.  ஒரு நடுத்தர வயது பெண்மணி தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.  முதலில் அந்தப் பெண்ணின் கணவன்தான் தற்கொலை செய்துகொண்டு விட்டான் என்று நாங்கள் தவறாக எண்ணியிருந்தோம்.  ஆனால் அவன் இல்லை.  அவன் மனைவி.   அவள் கணவன் ஒரு குடிகாரன்.  எப்போதும் அவர்கள் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார்கள்.  அந்தப் பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் அவர்களுடன் வளரவில்லை.  ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அவள்  மகள் கே கே நகரில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறாள்.  அவளுடைய பையன் வேறு ஊரில் படித்துக்கொண்டிருக்கிறான்.  அந்த வீட்டில் அவர்கள் குடும்பம் தவிர ஏழு எட்டு குடும்பங்கள் உண்டு. எல்லோரும் அவள் கணவனின் சகோதரர்களின் குடும்பங்கள்.  அந்த சிறிய இடத்தில் எல்லோரும் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம்.   ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள் என...

நிறைவு

  மட்பாண்டம் செய்யும் குயவனுக்கு அதில் தண்ணீர் குடித்தவனின் இன்சொல் நிறைவு , பலவேடங்கள் கட்டி நடிக்கும் நடிகனுக்கு திரை நோக்கி வீசப்படும் காசுகள் நிறைவு பாடங்களைத்திறம்பட நடத்தும் ஆசிரியருக்கு கற்றுத்தேர்ந்த மாணவனின் உயரம் நிறைவு வெகுநேரமாகக் காத்திருக்கும் காதலிக்கு காதலனின் கெஞ்சல் நிறைவு தோல்வியால் கீறிக்கிழிந்த இதயத்துக்கு நல்ல இசை நிறைவு பிளந்து கிடக்கும் பாலைநிலத்துக்கு அவற்றை நிரப்ப வரும் மழை நிறைவு நல்ல வரிகள் தேடி வந்த வாசகனுக்கு இந்தக்கவிதை நிறைவு. - சின்னப்பயல்