Skip to main content

Posts

வீழ்வது

  குடை இல்லாமல் வெளியே செல்வது சரியல்ல - வெயிலானாலும் சரி மழையானாலும் சரி அட் லீஸ்ட் ஒரு குல்லாயாவது தேவை சிலருக்குக் கறுப்புக் கண்ணாடி சிலருக்குக் குறுந்தாடி எழுதும் வர்கமெனில் ஜோல்னாப்பை கருப்புச்சட்டை சிவப்புச் சட்டை அல்லது டிசைனர் துணிமணிகள் ...   இப்போதெல்லாம் மற்றபடியிருப்பது டன் தின்ங் இல்லை - ஓபனாக இருந்து அதன் இயல்பான உள்ளுரை முரண்பாடுகள் மருத்துவரிடம் செல்லும் கட்டாயத்தை ஏற்படுத்தி ஏன் இந்த வீண் வம்பு ?   இந்த ஞானம் நமது கனவுக் கன்னிகளும் உண்டென்பது உண்மைதானே     மெல்லச் சாகும் என்பது ஒருவகை சாஸ்வதமே ஏனெனில் செத்துக் கொண்டிருக்குமே தவிர சாவதில்லை கலிபுருஷனல்லாவா ஆள்கிறான் !   எல்லாமே ஒருவகை சாலென்ஜ் / மானேஜ் செய்யப்பட வேண்டியது எல்லாமே ரிலேடிவ் மதிப்பு உள்ளவையே கண்ணகிக்கும் சீதைக்கும் ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும்   துகில் உரிந்தால் உள்ளது தெரியுமென்று கடவுளரே எண்ணுவதாக கதைத்தவர் பெரியோர் சொல்லாமல் சொல்லிச் சென்றனர் -   நாமெல்லாம் எந்தமட்டு...

பாஞ்சாலி சபதம்

    தொலைபேசியில் உன் முகம் வாரந்தோறும் நிழலாடும்- இது தவிர வேறென்ன உன் நினைவு பாலைவனத்து எண்ணைக் கிணறுகள் டாலரின் முகம் காட்டி உன் முகத்தைப் பறித்தது பழங்கதை மறந்து போன கதை   நீ அனுப்பிய டாங்க் ஆரஞ்ஜ் யாருடைய தாகத்தை தணிக்காதே பெருக்கியதென்பதை நீ அறியாதிருப்பதே நலம்-   காலையின் உதயம் கலைந்ததைச் சரிசெய்யும் உன் நினைவுகள் அடுத்த வாரம் வரை காத்தேயிருக்கும்-   ஒன்றில் மட்டும் உறுதியுண்டு சபதமென- குழந்தையொன்று பேறானால் அது உன்னுடையதாகத்தான் இருக்கும் பிறக்கும் இது சத்தியமே  

விளக்குகளை அணை; வெளிச்சம் வரும்!

வீ ட்டுச் சுவரை இடித்துவிட்டு கதவுகளை மூடிக் கொள்பவர்கள், தெருவில் விளக்கிட்டுவிட்டு வீட்டிற்குள் வெளிச்சம் தேடி யலைகின்றோம்; வாசலில் கோலம்போட்டு  உள்ளே கோழி  வெட்டும் வீரர்கள், பேங்க் லாக்கரில் பணமும் நகையும் சேர்த்துவிட்டு தெருப்பாடகனுக்கு வெறுங் கையசைக்கும் வள்ளல்களாகின்றோம்; பட்டுப் புடவைக் கட்டி அசைவ பாவம்பற்றி பேசுபவர்கள், பட்டுப்பூச்சி வாழ்க்கையதை விதியின் வாளால் கொல்லவே விரும்புகின்றோம்; நெற்றிப்பொட்டில் அடிக்கும் சாபம் பணம் கொடுத்தால் அகன்றாப் போகும்? சற்றும் யோசனை இல்லா ஓட்டம் இடையேக் கரண்ட்டுப் போனால் கத்துமாட்டம்; மனிதம் வற்றிப் போன மனமே மலைக்கப் பெரிதாய் தெரிவது இருட்டோ? முழுக்க  முழுக்க விதிகளை தகர்த்து சுயநல அரசியல் புரிதல் தகுமோ? போய்; வீணாய் எரியும் விளக்கினை யணைத்து இருண்டவீட்டில் வெளிச்சமூட்டு, அல்லது வெட்டும் மின்களம் செய்து செய்து முண்டத்தின் தலையில் விளக்கை ஏற்று; அணுவை உடைத்து உயிரை குடிக்கும் விளையாட்டொன்றில் விளக்கைப் பூட்டி, எறியும் வெளிச்சத்தில் எம் எதிர்வரும் நாளில் பிறக்கும் தலைமுறைக்கு ஆபத்தைக் கூட்டு; மின்வ...

தனிமைக்குள் கடவுள் இருக்கலாகாது !

யாருமற்ற தனிமையில் கடவுள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை கடவுள் எப்போதும் இனிமையானவன் தனிமை சில நேரம் இனிமை சில நேரம் துயரம் கடவுள் எப்போதும் பலம் வாய்ந்தவன் தனிமை சில நேரம் பலம் சில நேரம் பலவீனம் மிக நெருக்கத்தில் தனிமையை தரிசித்தல் சில நேரம் பரவசம் சில நேரம் பெருவலி யாருமற்ற தனிமையில் கடவுள் இருப்பதாக என்னால் நம்பமுடியவில்லை தனிமையில் அழுவதும் கடவுள் முன் அழுவதும் ஒரு வகை திருப்தி என்பது உங்கள் வாதமா? சமனற்றிருப்பதே தனிமைக்கு  அழகு ஒருவேளை கடவுள் தனிமைக்குள் இருந்தால் உடனடியாக அவரின் வெளியேற்றத்தை நான் விரும்புகிறேன் அதோ என் அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் தனிமை தனிமையில் கிடக்கட்டும் உங்கள் வாதப்படி கடவுள் அங்கிருந்தால் உடனே அவரை வெளியேற்றுங்கள் .

சொல்

  குதூகலம். மகிழ்ச்சி. சந்தோஷம். உவகை. சொற்கள் உணர்வின் அடையாளமாக பரிமாறப்பட்டன. திகட்டிவிட்டதென்று எழுந்து கொள்ள முடியாமல் முற்றுப்புள்ளி எங்கோ போய் ஒளிந்திருந்தது. அலுப்பு சலிப்பு வெறுப்பு இயலாமை சொற்களில்லாமல் சொன்னது உடல் மொழி. சொற்கள் முற்றுப்புள்ளியை அழைத்து வந்து பொருத்திக்கொண்டு அமைதியாயின. புன்னகை புன்முறுவல் குறும்புப்பார்வை வெடுக்கென எழுதல் உடல்மொழி கட்டைவிரலை உயர்த்திக்காட்டி வெளியேறியது... சொற்கள் அமைதியாய் காகிதத்தில் வந்தமர்ந்தன கவிதையாக. இறுமாப்புடன் திரும்பிய உடல்மொழி கவிதையாக உருக்கொண்ட சொற்களைக்கண்டு மோனமாகி நெற்றி அகன்று சிந்தனை வயப்பட்டது. ”வாய் வார்த்தையாகும் சொற்கள் எழுத்துருவாகியும் பேசுகின்றன.” சிந்தனையும் சொற்களாகவே வெளிப்படுவதை உணர்ந்த உடல் மொழி மரியாதையாய் தலை குனிந்தது.  சொற்கள் நிரம்பிய கவிதை புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் புரண்டன.

கல் எறிந்தவர்க​ள்

பிளாட் பாரத்திலிருந்து பிரிகிறது ரயில் ஒரே தருணத்தில் சில நூறு கரங்கள் உயர்ந்து கையசைக்கின்றன சட்டென எழும்பிப்பறக்கின்ற பறவைகள் போல்! கல் எறிந்தவர்கள் கண்களிருந்து மெதுவாகக் காணாமல் போகிறார்கள்

எதையாவது சொல்லட்டுமா......71

க.நா.சு வை நாம் மறந்துவிட்டோம்.  அவருடைய 100வது ஆண்டை நாம் வெறுமனே சில கட்டுரைகள் எழுதி நிறுத்தி விட்டோம்.  நான் அவருடைய கவிதைகளை இலவசமாக அச்சடித்து விநியோகம் செய்ததோடு நிறுத்தி விட்டேன். ஆனால் க.நா.சுவை நான் பல சந்தர்ப்பங்களில் நினைத்துக்கொள்ள வேண்டும்.  உண்மையில் அவர் மரணம் அடையும்வரை புத்தகங்கள் படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தவில்லை. இது ரொம்ப ஆச்சரியம்.  வயது ஆக ஆக நம்மால் புத்தகம் படிப்பது முடியாது.  க.நா.சு கண் தெரியாவிட்டாலும் படித்துக்கொண்டிருப்பார்.  எழுதிக்கொண்டே இருப்பார்.  இன்னும்கூட அவர் எழுதியது பிரசுரமாகாமல் இருக்கும்.  ஒருமுறை நான் விருட்சம் ஆரம்பித்தபோது எதாவது கட்டுரை தரும்படி கேட்டுக்கொண்டேன்.  உடனே க.நா.சு ஒரு கட்டுரை ஏற்கனவே எழுதியதைக் கொடுத்தார். பல சந்தர்ப்பங்களில் நான் க.நா.சுவைப் பார்த்து வியந்திருக்கிறேன்.  கவிதை எழுதுவது, விமர்சனம் செய்வது, கதை எழுதுவது என்று தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டிருந்தார்.   அவருடன் பேசுவது இனிமையான அனுபவமாக எனக்குத் தோன்றும்.  ஒருமுறை பெரிய கூட்டம் ஒன்று மயிலா...