Skip to main content

Posts

நான் பிரமிள் விசிறி சாமியார்.....14

நான் இந்தத் தொடரை எழுதவே மறந்துவிட்டேன். இப்போது திரும்பவும் ஆரம்பிப்பதற்குள் என்ன எழுதினேன் என்பதை நினைவுப் படுத்திக்கொள்ள வேண்டும். திரும்பவும் நான் எழுதியதை எடுத்துப் படிக்க வேண்டும். ஏனென்றால் சொன்னதையே திரும்பவும் சொல்லக்கூடாது. ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தின்போது பிரமிள் கலந்துகொண்டு பேசியதை எழுதியிருந்தேன். அதில் சில தகவல்களைக் கூறியிருந்தேன். அந்தத் தகவல்களில் சிலவற்றை நான் மறந்து விட்டேன். வங்கியில் பணிபுரிவது ஒரு பக்கம் இருந்துகொண்டாலும், பல படைப்பாளிகளைச் சந்தித்துப் பேசுவது என் பொழுதுபோக்கு. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட உபயோகமான விஷயம். இப்போதெல்லாம் அதுமாதிரி நடப்பதில்லை. முன்பு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் வருவது எளிதான விஷயம். பார்க்கலாம். பேசலாம். திரும்பவும் போய்விடலாம். பிரமிள் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்றுவிடுவார். அவர் நுங்கம்பாக்கம் ஹைரோட் வழியாக நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அப்படி சந்தித்துக்கொள்ள முடியாவிட்டால், இவரை ஏன் சந்திக்க முடியவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்படும...

''காலம்''

யாரோ காலமானார் என்ற செய்தி என் எதிரில் நட்சத்திரமாகத் தொங்குகிறது காலமென முதலில் உணர்ந்தவன் கபாலச் சூடு பொரியும் ஆண்மை நிறைந்தவனாக இருந்திருப்பான் சில சமயத்தில் தோன்றுகிறது காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல ஆனால் பற்ற முடியாமல் நழுவிப் போகிறது. எங்கேயோ காத்திருக்கிறது காதலுடன் மெளனம் சாதிக்கிறது காலம் காலமாகக் கடல் ஒலிக்கிறது வெற்று வெளியில் மேசம் சஞ்சரிக்கிறது கனத்த காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து விட்டார்கள். எவ்வளவோ காலம் கடந்தும் அறிந்துகொள்ள என்னவென்று அது - முளைக்கவே இல்லை. ஆனால் விலகாத கிரஹணமாக என் எதிரில் தொங்கிக்கொண்டே தானிருக்கிறது யாரோ காலமான செய்தி நானும் ஒரு காலத்தில் காலமாகி விடுவேனோ என்பதில் மட்டும் முளைத்து விடுகிற பயம் சொட்டுச் சொட்டாய் உதிரக் காத்திருக்கிறது - காலம் வராமல்.... ( ஆகஸ்ட் 8ஆம் தேதி ஸ்டெல்லா புரூஸ் பிறந்த நாள். காளி-தாஸ் என்கிற பெயரில் அவர் பல கவிதைகள் எழுதி உள்ளார். அவருடைய எல்லாக் கவிதைகளையும் தொகுத்து விருட்சம் வெளியீடாக காளி-தாஸ் கவிதைகள் என்று கொண்டு வர உள்ளேன். எளிமையான வரிகள் கொண்ட ஆழமான கவிதைகள். இக் கவிதை பிரசுரமான ஆண்டு ஜனவரி 1979. இ...

இலை மொழி

முதிர்வில் இலை தன் அடையாளத்தை அகற்றிக் கொள்கிறது ஆங்காங்கு தெரியும் நரம்புக் கோடுகள் கண்களை மூடிக் கொண்டாற் போலொரு தோற்றம் வண்ணத்து பூச்சியும அண்டா விலக்கம் பூமியின் பரப்பை நோக்கி நாளும் குவிந்திடும் உயிர் இயக்கம்... போகிற போக்கில் இலைகளைக் கிள்ளிச் செல்லும் மனிதக் கரங்களூடே நழுவிச் செல்கின்றன மரணம் குறித்த இயற்கையின்இலை வார்த்தைகள்...

எதையாவது சொல்லட்டுமா / 24

தினமும் காலை 9 மணி சுமாருக்கு, மயிலாடுதுறையிலிருந்து பஸ்ஸில் கிளம்பி சீர்காழிக்குச் சென்று வருவேன். சீர்காழியிலிருந்து திரும்பவும் வீடு வந்து சேர மணி 9 மணிமேல் ஆகிவிடுகிறது. சில சமயம் பத்தைத் தொட்டு விடுகிறது. இதுமாதிரியான வேலை கடுமையை நான் இதுவரை பார்த்ததில்லை. சுருக்கெழுத்தாளராக நான் சென்னையில் இருந்த காலம் பொற்காலம். எந்தத் தப்பை யார் செய்துவிடுவார்களோ என்ற பதைபதைப்போடு இருக்க வேண்டி உள்ளது. பெரும்பாலும் என் அலுவலக நண்பர் அறிவானந்தமும் நானும் சேர்ந்துதான் வருவோம். அவரைப் பார்க்கும்போது பெரும்பாலும் சோர்வாக இருப்பார். நானும் அவரும் energy எல்லாம் தீர்ந்துபோய் வற்றிப் போய் வருவோம். வங்கியில் பணிபுரியும் பெரும்பாலோருக்கு தொடர்ந்து அதில் பணிபுரிய விருப்பமில்லை. இதில் தப்பிப்பவர்கள் க்ளார்க்காகப் பணிபுரிபவர்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு இருக்க மாட்டார்கள். எந்த வேலையாக இருந்தாலும் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். கொஞ்ச வேலை பளு அதிகமாக இருந்தால் முணுமுணுப்பார்கள். சண்டைக்கு வருவார்கள். ஆனால் 5 மணிக்குமேல் அவர்களை இருக்கச் சொல்லமுடியாது. முன் யோசனை எதுவுமின்றி 2004ல...

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும்

மொழிபெயர்ப்புக் கவிதை முதியோர் காயமுற்றோர் மற்றும் நோயாளிகள் குழந்தைகள் - வயதுவந்தோர் பிணக்குவியல்களை நிறைய நிறையக் கண்ணுற்றேன் பாவங்களை ஊக்குவிக்கும் துறவிகளின் உருவங்களைக் கண்டேன் *பிரித் நூலும் கட்டப்பட்டது 'நாட்டைக் காக்கும்' எனக்கு காவல் கிட்டவென பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து விழி சதை இரத்தமென தானம் செய்து உங்களிடம் வந்துள்ளேன் ஆனாலும் புத்தரே உங்களது பார்வை மகிமை மிக்கது கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும் மனைவி குழந்தைகளோடு நலம் வேண்டிப் பாடும் சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே எனது தலையை ஊடுருவும் உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள் கண்ணெதிரே தோன்றுகின்றனர் என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள் ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த அவர்கள் மெலிந்தவர்கள் துயருற்ற ஏழைகள் ஒரே நிறம் ஒரே உருவம் எல்லோருக்குமே எனது முகம் நூறு ஆயிரமென நான் கொன்றொழித்திருப்பது என்னையேதானா பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற சிறிய பிக்குகள் பின்னாலிருந்து நீங்கள் தரும் புன்முறுவல் தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன் கரங்கள் தென்பட்டு விடுமோ ...

வீடு பேறு

நத்தை ஒன்றுபோகிறது மெல்லுடலில் பாரிய வீட்டை சுமந்தபடி. போகிறதா? ஆம். உன்னை போல் என்னை போல் நம்மை போல்.அது நகர்ந்து எஞ்சிய நீர்த்தடங்களில் வீடு குறித்த ரகசிய கேள்விகளின் ரசம் மின்னிக்கொண்டு இருக்கிறது...

தொண்டையின் துயரம்

இனிப்பான பலகாரத்திலிருந்து உப்பில்லா உணவு கொதிக்கிற தேனீரிலிருந்து குளிர்ச்சியான ஐஸ் க்ரீம் எதிர் வீட்டு பால் அப்பம் எதிரி சுட்ட பணியாரம் சந்த்ருவின் பிறந்த நாள் கேக் ஆஞ்சநேயரின் வடைமாலையில் பிரசாதமாய் எஞ்சிய வடை என எல்லா உணவு பதார்த்தங்களையும் தொண்டை அனுமதித்து விடுகிறது. திடீரென வயிற்றில் தள்ளு முள்ளு கலவரம் அடிதடி என நடக்கிற போது வயிற்றிற்காக இரக்கம் காட்டி கலவரக்காரர்களை வாய் வழியாக தண்ணீர் பீய்ச்சி வெளியேற்றியும் விடுகிறது. ஆனால் வினோதமாய் ஒரு உறங்கும் உண்மை மட்டும் தொண்டைக்குள் முள்ளாய் குத்திக் குத்திக் குதறுகிறது வெளியேற இயலாமல்.. பொய் தவத்தில் புண்ணாய் தொண்டை நாறிக் கொண்டிருக்கிறது பல நேரங்களில்