தமிழில் : அழகியசிங்கர் கேள்வி : மஹாராஜ், நீங்கள் என் முன்னால் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்॥ நான் உங்கள் அருகில் காலடியில் அமர்ந்திருக்கிறேன்। நம் இருவருக்குமிடையில் என்ன அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது? மஹாராஜ் : எந்த அடிப்படையான வித்தியாசமும் இல்லை। கேள்வி : உண்மையில் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன। நான் உங்களைத் தேடி வருகிறேன்॥ நீங்கள் என்னைப் பார்க்க வருவதில்லை। மஹாராஜ் : ஏனெனில் நீங்கள் வித்தியாசமாக இருப்பதாகக் கற்பனை செய்கிறீர்கள்। மிகச் சிறந்த மனிதர்களைத் தேடி நீங்கள் இங்கேயும் அங்கேயும் செல்கிறீர்கள்। கேள்வி : நீங்கள் கூட ஒரு சிறந்த மனிதர்। உண்மையை அறிவதற்குத் தகுதி உடையவர்। நான் அதுமாதிரி இல்லை। மஹாராஜ் : உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்றும் அதனால் தாழ்வு மனப்பான்மை கொண்டவரென்றும் எப்பவாவது சொல்லியிருக்கிறேனா? அப்படி வித்தியாசத்தைக் கண்டிபிடிப்பவர்கள் அதை நிரூபிக்கட்டும்। உங்களுக்கு என்ன தெரியாதென்பதை நான் சொல்வதில்லை। பார்க்கப்போனால், உங்களுக்குத் தெரிந்ததைவிட குறைவாக எனக்குத் தெரியும்। கேள்வி : உங்கள் வார்த்தைகள் புத்திசாலித்தனமானவை। உங்கள் நடத்தை போற்றுதற்...