Skip to main content

Posts

Showing posts with the label ஸ்டெல்லா புரூஸ்

எனது மஹாராணியின் நினைவாக

short story அவள் எனக்கு மஹாராணிதான். என்னுடைய நினைவுகளையும், கனவுகளையும் அரசோச்சும் அழகு ராணி. என்னுடைய ராணி ஓர் மயிலும் கூட - நடனத்தில். எனது மயில்....ஸாரி, மயிலின் பெயரைச் சொல்லாமலே....பெயரென்றால்? காலேஜ் ரிஜிஸ்டரில் அவள் - ஸில்வியா ஆன்டர்ஸன். காலேஜ் கேம்பஸிற்குள், தோளுடன் தோள் உராயும் தோழியருக்கு - அவள் ஸில்லி. எனக்கு, என்னுடைய சுகமான நினைவுகளுக்கு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கனவுகளுக்கு - அவள் பெப்பி பெப்பி பெப்பி........ பெப்பி - என் நினைவே, என் கனவே.......ப்ரு காப்பியின் முறுகல் நுரை போலிருக்கும் என் மயிலின் சிரிப்பு. அவளுக்குத் தொடைகள் என்ன மயிலின் பட்டுத் தொகைகளா? - இந்த புஷ்கி அரைக் கண்ணைத் திறந்து கொண்டு; அரை வாயைத் திறந்து கொண்டு அத்தனை சுகமாகத் தூங்குகிறதே மயிலின் மடியில். சொல்லவே சுகம். மீண்டும் சொல்கிறேன். 'என் மயிலின் மடியில்.' ஏய் புஷ்கி. எனக்கு உன்மேல் பொறாமை. யார் இந்த புஷ்கி? யாருமில்லை. மயில் வீட்டுப் பொமரேனியன். மயிலுக்குக் குழந்தை மாதிரி. இரவிலும் கூட இந்த புஷ்கி என் மயிலுடன் பஞ்சு மெத்தைக்குள்; போர்வைக்குள்..போகட்டும். ஸில்வியாவை நான் மட்டும் ஏன் பெப...

என் நண்பர் ஆத்மாநாம்

கடைசிப் பகுதி எனக்கும் அவருக்கும் இடையே இருந்த பன்னிரெண்டு வருட உறவு வினோத தருணங்களாலும் அவ்வப்போது விபரீத தருணங்களாலும் அடுக்கப்பட்டடிருந்தது. அவையெல்லாம் எனக்கு உரமாகி விட்டிருந்தன. ஆத்மாநாமை அவை உலுக்கிப் போட்டிருந்தன. அவருக்கு ஒரு பெண்ணிடம் அறிமுகமான குறுகிய காலத்திலேயே மெல்லிய நட்பை அரும்ப வைத்திருந்தது. நட்பு உறவாகவும் மலர வித்திட்டுக்கொண்டிருந்தது. ஆனால் திருமணம் என்ற அவசர குறிக்கீடு ஆத்மாநாமையும் மீறி அப்பெண்ணை நோக்கி எய்யப்பட்டதில் அத்தனையும் கலைந்து போனது. அழகிய மலர்வனம்போல் உருவாகிக் கொண்டிருந்த சதுக்கம் ஒரே நாளில் காலிமனையாகி விட்டது. நிஜமாக வாழ்க்கையில் அந்தக் கணம் தன்னந்தனியாக நின்றார் - ஆத்மாநாம். ஒரு நிமிஷம் அவளை அவரால் பார்க்க முடியவில்லை. ஒரு விநாடி அவளின் குரலை தொலைபேசியிலும் கேட்க முடியவில்லை. அவள் அவளுடையகுடும்பத்தாரால் முழுவதுமாக மறைக்கப்பட்டு விட்டாள்..அந்த அத்தியாயம் மர்ம புதிராக முற்றுப் பெறாமலே முற்றுப் பெற்றுவிட்டது. மனச்சிதைவின் முதல் தாக்குதலுக்கு நான்கு மாதங்களுக்கு முன் ஆத்மாநாமும் நானும் மெரீனா கடற்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். பக்கிங்காம் கால்வாயின...

என் நண்பர் ஆத்மாநாம்

பகுதி 2 அ தற்குமுன் 1983 அக்டோபர் மாதத்தில் தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு ஒரு தற்கொலைக்கு முயன்றார். அதில் காப்பாற்றப்பட்டு விட்ட அவர் பத்துநாட்களுக்குப் பின் தியாகராய நகரில் இருந்த என் சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்தார். இடையில் ஒரு வருஷம் நான் என் சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தேன். காலை டிபன் சாப்பிட நான்தான் ஆத்மாநாமை வரச் சொல்லியிருந்தேன். அப்போது ஊரில் இருந்து என் அம்மாவும் வந்திருந்தார். "ஆத்மாநாமை சாப்பிட வரச்சொல்லு," என்று என் அம்மாவும் என்னிடம் கூறி இருந்தார். பொதுவாக நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவதற்கு ஆத்மாநாம் ஆசைப்படுவார் - அன்று காலை என் சகோதரியின் வீட்டில் காலை டிபன் - ரவா தோசை. தோசையை என் அம்மாதான் வார்த்தார். பொன் நிறத்தில் முறுகலாக பரிமாறப்பட்ட ரவாதோசைகளைப் பார்த்து குழந்தையின் குதூகலத்தோடு வியந்து வியந்து பாராட்டி சாப்பிட்டார் ஆத்மாநாம். சாப்பிட்டப்பின் நானும் அவரும் மாமரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டோம். அப்போதுதான் ஆத்மாநாம் பத்து நாட்களுக்குமுன் தான் தற்கொலை முயற்சி செய்துகொண்டதைப் பற்றி தணிந்த குரலில் கூறினார். நான் அதிர்ந்து போனேன்...

என் நண்பர் ஆத்மாநாம்

பகுதி 1 ஆத்மாநாம் என்ற மதுசூதன் வாழ்க்கையில் முதல் முறையாக நான் சந்தித்தது திருவல்லிக்கேணியின் ஒரு தெரு முனையில். 1972 - ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நாலரை மணி இருக்கும். நானும் நண்பர் ஷர்மாவும் ஹோட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட்டுவிட்டு என் அறையை நோக்கி மெதுவாக நடந்துகொண்டிருந்தோம். கடை ஒன்றில் நின்று ஷர்மா சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டிருந்தபோது, "ஹலோ ஷர்மா," என்ற குரல் கேட்க திரும்பிப் பார்த்தோம், 20 வயது மதிக்கத்தக்க அழகிய இளைஞனாக ஆத்மாநாம் நின்று கொண்டிருந்தார். நானும், ஆத்மாநாமும் அதற்குமுன் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டதில்லை. எங்களுடைய முதல் சந்திப்பு அது. ஷர்மா எங்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நேரத்தில் நான் மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ஞானரதம் இதழில் பிரசுரமாயிருந்த என் ஒரு சிறுகதையை வாசித்திருப்பதாக ஆத்மாநாம் சொன்னார். நண்பர் மகா கணபதியைப் பார்ப்பதற்காக சென்றுகொண்டிருப்பதாகவும், இன்னொருமுறை திருவல்லிக்கேணி வரும்பொழுது என் அறையில் வந்து என்னைச் சந்திப்பத...