Skip to main content

Posts

Showing posts with the label லாவண்யா

காவேரி

           உடைகளில்லாதிருப்பதிலொரு          உல்லாசத்தை உணர்கிறேன்          உடலில் கவிந்த ஊர்ப்பழுதியை          ந்தியில் நனைந்து கரைக்கிறேன்          என் நேற்றைய வானவில்          நுரைக்குமிழிகளாகிக் கரையும் காட்சியை          ந்தியில் கப்பல்விட்ட சிறுவனாகி          வேடிக்கை பார்க்கிறேன்          புலரியின் இளஞ்சூட்டில் வியர்க்க          இலைகளால் விசிறிக்கொள்ளும்          கரையோர வாழைமரங்கள்          ந்தியின் நடுவில் உலர்ந்த மணற்திட்டில்          உறுமீன் வருமுன் உடற்பயிற்சி ...

ஒரு கவிதை -

கடுகளவும் சந்தேகமில்லை இது ஒரு பைத்தியக்காரவுலகம் இதில் பலவித பைத்தியங்கள் வாழ்கின்றன. காசுப் பைத்தியம் கார் பைத்தியம் சினிமாப்பைத்தியம் சீட்டுப்பைத்தியம் காதல் பைத்தியம் கவிதைப்பைத்தியம் என நமக்கு முன்பும் பைத்தியங்களிருந்தன அவை அப்பாவிகளாயிருந்திருக்கின்றன அவை நிறையக் கதைகளைத் தெரிந்து வைத்திருந்தன அவைகள் சொல்ல நாம் கேட்டோம் அவற்றிலொன்று விறகுவெட்டி மூன்று கோடரிகள் கதை அந்தக் கதையால் நாம் வீணாய் போனோம் அதோ அவனைப் பார்த்தால் புரியும் போட்டியாளனைப் போட்டுத் தள்ளுகிறான் கவர்மெண்ட் பணத்தைக் களவாடுகிறான் குபேரனாகிறான் மண்ணைப் பொன்னாக்கும் மகானென்று மண்டியிடுகிறதுலகம் மகானின் தோட்டத்தில் மாடுகள் ரெண்டு மூத்திரம் குடித்து பல்லிளிக்கின்றன ஒன்றின் பற்கள் உனதைப் போலிருக்கின்றன தோலிருக்கச் சுளைமுழுங்கித் தலைவன் வாய் திறந்தால் பொய்யருவி- அவனை கணினியுகத்தின் விடிவெள்ளியென்கிறதுலகம் ஆட்டைப்போல் ஆளை வெட்டினவன் அரசனானான் அடுத்தவன் கிடையில் ஆடு திருடி அரசனுக்கத் தந்தவன் தளபதியானான் கிலிபிடித்த ஒருவன் கடவுளைக் கற்பித்தான் புசிக்க உணவில்லை பிட்டுக்கூலி வசிக்க மனையில்ல...

மிச்சம்

                                   மரம்போல் நிற்காதே                 மனம் திறந்து                 பதிலைச் சொல்லென்றேன்                                  மனிதனைப்போல                 மலிவானவையல்ல மரங்கள்                                  தேக்கின்விலை மனிதனுக்கில்லை      ...

இரு கவிதைகள்

முதலில் முதலில் யானை மேலிருந்து இறங்கு பிறகு பேசுவோம் மராமத்து வெள்ளைத்துரை உனைக் கண்டு வேர்த்து வெளவெளத்து வேஷ்டியைத் தழையவிட்டு வளைந்து வணங்கும் காலம் போச்சு கொலம்பஸ் பிறக்குமுன்பே கடலோடி வணிகர் நாங்கள் அதனால் பையா அடக்கி வாசி எங்கள் சந்தை எங்கள் சட்டம் எந்தக் கொம்பனும் அதற்கு அடக்கம் சம்மதம் என்றால் கடையை விரி சரிப்படாதென்றால் கடையைக் கட்டு அரிசி, பருப்பு, ஆமணக்கு, காய், கறி மிளகாய், உப்பு, மஞ்சள், வெல்லம், மாம்பழம், வாங்கலாம்.  உன் சரக்கை நீ விற்கலாம்.  வாரந்தோறும் சந்தை உண்டு அடாவடி விலைக்கு அனுமதி இல்லை அடிமை வாணிபம் செய்வதற்கில்லை வணிகம் செய்ய வந்தவன் வணிகம் மட்டும் செய்வது நல்லது உலவு பார்ப்பது கலகம் செய்வது சித்துவேலை ஏதும் செய்தால் சீவி விடுவோம் பனங்காய்போல. உள்கோட்டில் பிஸ்டலை மறைத்து உதட்டோ ரம் புன்னகை மலர்த்தி கைக்குலுக்கும் கபடம் எனக்கும் தெரியும் நெடுநாள் முன்பு பிஸ்டல் செய்வது குடிசைத் தொழிலாய் இருந்தது எங்களூரில்..... இலவசம் கோழி வாங்கினால் முட்டை இலவசம் ஜாடி வாங்கினால் மூடி இலவசம் பழம் வாங்கினால் கொட்டை இலவ...

உப்பு

_ தலைவர்,மனிதவள மேம்பாட்டுத் துறை. பளிச்செனக் கண்ணில் பட்டது. அறைக் கதவின் மீதிருந்த ப்ளாஸ்டிக் பலகை. பலகைக்கு மேலே üதற்காலிகம்ý என ஸ்கெட்ச் பேனாவில் எழுதப்பட்ட மஞ்சள் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. கதவை மெல்லத் திறந்தாள். ரூம் ஸ்ப்ரே மணந்தது. சிகரெட் வாடையடித்தது. செவ்வக அறை. கதவு அறையின் ஒரு ஓரத்திலிருந்தது. மறுமூலையில் அந்த அதிகாரி உட்கார்ந்திருந்தார். "நான் உள்ளே வரலாமா...?" "வெல்கம்" அறைக்குள் நுழைந்தான். மூலைவாட்டில் குழலூதும் கண்ணன் பொம்மையாய் நின்றுகொண்டிருந்தான். "நான் மதியழகன்" "வளையாபதி......" கரகரத்த பெரியகுரல். கைகுலுக்கினான். விரல்கள் லேசாய் வலித்தன. சிகரெட்டிருந்த இடதுகையில் நாற்காலியைக் காட்டி உட்காரச் சொன்னார். தடித்த கண்ணாடிக்குள்ளிருந்து இரண்டு கோலிக்குண்டு கண்கள் தன்னை ஊடுருவுவதை உணர்ந்தான். மறுவிநாடி எதிரேயிருந்த கணினியை இயக்கினார். ஒரு நிமிடம் ஸ்கிரீனில் வருவதை நன்றாகப் பார்த்துக்கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினார். "மிஸ்டர் மதியழகன். அப்பாவைச் சந்தித்தீர்களா?.." திகைத்தான். கணத...

நமக்கிருப்பது

நமக்குத் தெரியும் ஒரு பொம்மலாட்டத்தில் நாம் மன்னர்களென்று. நமக்குத் தெரியும் உண்மையில் நாம் சம்பள அடிமைகளென்று நமக்குத் தெரியும் மன்னர்கள், குறுநில மன்னர்கள் பெருநில மன்னர்கள், மாமன்னர்கள் பெரு மாமன்னர்களின் பிரஜைகள் நாமென்று. நமக்குத் தெரியும் மாமன்னராகும் கனவு பலருக்குமிருக்கிறதென்று நமக்குத் தெரியும் அரசன் வசமும் அவன் எதிரிகள் வசமும் ஆளும் அம்பும் உண்டென்று. நமக்குத் தெரியும் பசுக்களை, இளங்கன்றுகளை காளைகளை, பறவைகளை, மரங்களை சாய்த்தது யாரென்று. நமக்குத் தெரியும் கண்ணால் கண்டதும் காதால் கேட்டதும் தீர விசாரித்ததும் மெய்யென்று. நமக்குத் தெரியும் நமதடுத்த கணம் கத்தியின் கூராய் அரிவாளின் மின்னலாய் துப்பாக்கியின் உறுமலாய் வருமென்று. நமக்குத் தெரியும் நாம் கண்களை, காதுகளை வாயை பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று. நமக்குத் தெரியும் நமக்கிருப்பது ஒரே உயிர் அதை எளிதில் விடக்கூடாதென்று. தமிழில் அங்கத உணர்வுடன் கவிதை எழுதுவது எளிதான விஷயம் அல்ல. இதில் கை தேர்ந்தவர் ஞானக்கூத்தன். அவருடைய கவிதைகளில் sense of humour தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். எந்தக் கவிதையைப் படித்தாலும், படிப்பவரை சிரி...