ஒன்று சொல்லக் கேட்டு சொல்லச் சொல்லி பிறந்தது ஓர் சொல். சொல்லச் சொல்ல சொல் பெருகியது பின்னிப் பின்னி உருவானது ஓர் சொல் வலை சொல் தன்னைத் தானே சொல்லத் துவங்கியது தான் வகித்த வலைக்குள் தானே சிக்கியது சொல். இரண்டு மலரென்ன ஓர் சொல் கிளையென்ற ஓர் சொல்லிலிருந்து காற்றென்ற சொல்லைத் தழுவி மண்ணென்ற சொல் மீது உதிர்கிறது. மண்ணில் புதைந்த விதையென்ற ஓர் சொல் மண்ணைக் கீறி மரமென்ற சொல்லாக முளைத்து வான் என்ற சொல்லைத் தீண்டி நிற்கிறது....