அடித்துப் பெய்கிற மழையில் வளைகின்றது தாவரம் குனிகின்றன பெருமரக் கிளைகள் ஒண்டிக் கொள்கின்றன பறவைகள் அணைந்து போகின்றன விளக்குகள் கம்பிகளுக்குப் பின் ஒளிகிறது நிலா மேல்நோக்கித் திரும்புகிறது குடை நடுக்கமுறுகிறது உடல் பயத்தில் குளிர்ந்து விடுகிறது காற்றும் ஒரு மின்னலில் ஒளிர்கின்றது ஜொலிக்கும் புன்னகையோடு இக்கரிய இரவு மட்டும். -