அழியா கைக்கிளை ம.தவசி அவர்களின் கதைகளைப் படிக்கும்போது ஏற்கனவே கொண்டிருக்கிற தீர்மானங்கள் உறுதிப்படுகின்றன. ஒரு படைப்பைப் பொறுத்தவரை அது வெறும் அறிவுரையோ படைப்பாளியின் மேதமையை வெளிப்படுத்துகிற கருத்துக்களாகவோ இருக்காது என்பது அறிந்த விசயம். வியப்பு, ஏக்கம், நப்பாசை என்று இப்படியான விதங்களால் சாதாரண மனிதன் பெற்றதை போலவே படைப்பாளியிடமிருந்தும் அவை வெளிப்படும். சாதாரண மனிதனுக்கு பயம் என்பது எப்படி வெளிப்பட்டது? வெளிப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட பின்னர், அதை எவ்வாறு எழுத்தில் கொண்டு வர வேண்டும்? சரி, எழுத்தில் கொண்டு வருவது இருக்கட்டும் - முதலில் பேச்சில் எவ்வாறு வெளிப்படுகிறது? ஒரு புதிய முறையில் சொல்கிற விதம்....ஒரு படைப்பு இரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை. கிட்டத்தட்ட எழுத்து வடிவில் நமக்குக் கிடைக்கப்பெற்றது இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுதான். இது இலக்கியவாதிகள் சொல்வதல்ல - ஆய்வாளர்கள். காற்றிலிருந்து மூக்கால் இழுக்கப்பட்டு வெளியானது - ஆதியிலே இருந்தது வார்த்தை - இப்படிச் சொல்லப்பட்டது எல்லாமும் இந்தக் கணக்குத்தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்து மொழி இலக...