Skip to main content

Posts

Showing posts with the label பிரேம்குமார்

கோவில் யானை

கோவிலில் எப்போதும் பார்க்க முடிகிறது அந்த யானையை காசு தந்தால் பாகனுக்கு தின்பண்டங்கள் அதற்கு எதுவாயினும் பதிலுக்கு ஆசீர்வதிக்க தவறியதில்லை கழுத்து மணியை ஆட்டி தனக்கான இசையை பிறக்கச்செய்கிறது பிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு பெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது தொலைதொடர்புகளற்ற அதன் உலகில் காட்டுலா குறித்த ஏக்கங்களோ பிச்சையெடுக்கும் தன்னிலை குறித்த கவலைகளோ இல்லாதிருக்கலாம் முதன்முதலாய் இன்னொரு யானையை முகாமில் சந்திக்கும் வேளை என்ன சொல்ல எத்தனிக்கும் கோவில் யானை?