Skip to main content

Posts

Showing posts with the label நீலமணி

குற்றச்சாட்டு

தாயிடம் குழந்தை பால் குடித்ததாய்க் குற்றம் சாட்டுகிறார்கள். சக்தி பார்த்த சிவன் தாண்டவமாடியதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் இதயம் ரத்தம் பாய்ச்சுவதாய்க் குற்றம் சாட்டுகிறார்கள். கருவறை மானுடரை அனுமதித்ததாய்க் குற்றம் சாட்டுகிறார்கள் பூ மலர்ந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள் காவிக்கு அடியில் சதை இருந்ததாய்க் குற்றம் சாட்டுகிறார்கள் திராட்சை மதுவானதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் தங்க மாலையைக் கழுத்து அணிந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள் கைகள் கொடை வழங்கியதாயக் குற்றம் சாட்டுகிறார்கள் வள்ளுவர் காமத்துப்பால் எழுதியதாய்க் குற்றம் சாட்டுகிறார்கள் கண்கள் இமை திறந்து காட்சி உண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் சுவாசித்தலை அவ்வப்போது செய்ததாய்க் குற்றம் சாட்டுகிறார்கள் காற்றால் இலைகள் அசைந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

இது என் பேப்பர் ரெயிலில் செல்கையில் அடுத்தவர் தோள்மேல் அரை மேய்ந்ததில்லை விரைந்து விழுங்கும் இரவல் ஷீட் அல்ல கைக்குள் வைத்து மடித்துப் படிப்பேன் மேஜைமேல் போட்டு விரித்துப் பார்ப்பேன் பகலிலும் படிப்பேன் இரவிலும் படிப்பேன் படிக்காமல் கூட தூக்கிஎறிவேன் இது என் பேப்பர் (புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதியை இலக்கியச் சங்க வெளியீடு டிசம்பர் 1972 ஆம் ஆண்டு. அப்போது அதன் விலை 30 பைசா. அதில் வெளியான கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் - அழகியசிங்கர்)