. வெ.நாராயணன் இலக்கியவட்டம் காஞ்சிபுரம் 21.08.1989 விருட்சம் 3வது இதழில் பக்கம் 23ல் நகுலன் அவர்களுடைய குறள் மூலம் கவிதை பின்வருமாறுவெளியாகியுள்ளது. 'நில் - போ - வா/வா - போ - நில்/போ - வா - நில்/நில் - போவா?' இதற்குஎன்ன அர்த்தம் என்று புரியவில்லை என்று சென்ற கூட்டத்திற்கு வந்த நண்பர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர. கவிதை புனைந்தவரின் கருத்தறியவும் விரும்புகின்றனர். நகுலன் பதில் நில் போ வா இப்பொழுது இயங்கிவரும் அதிநூதன இலக்கிய விமர்சன இயக்கத்தில் ஒவ்வொரு வாசகனும் ஒரு படைப்பைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறான் என்றும், சிருஷ்டி கர்த்தாவைவிட வாசகன்தான் முக்கியம் என்ற ஒரு இயக்கம் உலவி வருகிறது. மேலும் ஒரு சிருஷ்டிகர்த்தாவின் விளக்கம் அதிகார பூர்வமானது என்று சொல்வதற்கும் இல்லை. இதைத் தொடர்ந்து சிந்திக்கையில் ஒரு சிரு...