ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ் ச ம்பவங்கள் நிகழ்வது அந்த மற்றொரு போர்ஹெஸ்க்கு. நான் போனஸ் அயர்ஸின் ஊடாக நடக்கிறேன். ஒரு நுழைவாயிலின் வளைவையும் அதன் உட்கதவையும் உற்றுப்பார்க்கத் தாற்காலிகமாக - ஒருவேளை இப்போது இயந்திரத்தனமாக இருக்கலாம்-நிற்கிறேன். போர்ஹெஸ் தொடர்பான செய்தி அஞ்சலில் என்னை வந்தடைகிறது, அல்லது அவன் பெயரைக் கல்வியளார்களின் பட்டியலொன்றிலோ ஏதாவதொரு வாழ்க்கை வரலாற்று அகராதியிலோ பார்க்கிறேன். மணற்கடிகைகள், நிலப்படங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு எழுத்துருவங்கள், அடிச்சொல் வரலாறு, காபியின் சுவை, அதோடு ராபர்ட் லூயி ஸ்டிவன்சனின் உரைநடை என என் விருப்பம் பரவுகிறது. இந்த முன்னுரிமைகளைப் போர்ஹேஸூம் பகிர்ந்து கொள்கிறான். ஆனால் அவைகளை ஒரு நடிகனின் போர்க்கோலங்களாக மாற்றும் வீண் வழியில். எங்கள் உறவு பகைமை உணர்வு கொண்டுள்ளது எனச் சொல்வது மிகைப்படுத்தலாக இருக்கும்-நான் வாழ்கிறேன், என்னை நானே வாழ அனுமதிக்கிறேன். அதனால் போர்ஹெஸ் தன் இலக்கியத்தை நான் நியாயப்படுத்துகிறேன். அவன் மதிப்பு வாய்ந்த பல பக்கங்களை எழுதியிருக்கிறான் என்பதை நான் ஆசையோடு ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்தப் பக்கங்கள் என்னைக்...