Skip to main content

Posts

Showing posts with the label தமிழாக்கம் : நாகார்ஜூனன்

ஸில்வியா ப்ளாத் இரண்டு கவிதைகள்

தீப்பாடல் பசியப் பிறந்தோம் குறைகொண்ட தோட்டமிதற்கு.. ஆயின் புள்ளியாய்த் தெறித்துத் தேரைபோல் மறு கொண்ட முட்செடி பலதில் பகையுடன் நழுவும் எம் காவலர் தம் கண்ணி வைக்க சிக்குமதில் மானும் சேவலும் மீனும் ஏன் எல்லாம் நன்றேகுருதி சிந்தும் தந்திரமாக யாவும் சீர்குலைந்து நிற்கும் அவன் சீற்றமுற்ற வீண்சாமானினின்று தேவதை-ஏதோ வடிவ ஆடையுடுப்பதை வ ெட்டியழிப்பதேநம் கடனென்ப நேர்-விசாரணையேதும் திறக்காது சாமர்த்தியமாய்ப் பிடித்து ஒளிரும் எம் செயல் ஒவ்வொன்றாய் வண்டலாக்கி மீண்டும் உருவற்ற சேற்றுமண்ணாக்கி புளிநொதித்த வானெனும் ஆடையாய் மூட இனிய உப்பும் களையின் முறுக்கிய தண்டும் யாம் வழியின் கடைக்கோடியில் வைத்துச் சமாளிக்க செங்கதிர் எரித்த யாம் ரத்தக்குழாய் பலதின் முட்கம்பி வலைப்பின்னலில் அடுக்கிய தீக்கல் உருளத் தூக்குவோம் மறமான காதல், கனாவென கறார்-அழலை நிறுத்த அன்றி வா, என் காயம்படச் சாய்.. நின்றெரி நின்றெரி.. சொற்கள் கோடரிகள். அவை வீழும் மரத்தில் தொடங்கும் வட்டங்கள்.மையத்தினின்றும் குதிரைகளாய்ப் பாயும் எதிரொலிகள். கண்ணீராய்ப் பொங்கும் மரச்சாறு. பாறைதனில் தன் கண்ணாடி மீண்டும் நிறுவ முயலும் நீராய். பசிய களையுமுண்ட ...