1 - நினைவுப் பூனை ____________________ அன்றொரு பூனை பார்த்தேன் முதுகு தடவி கொடுக்க ஆளின்றி கண்ணில் மென்சோகம் கவிழ்ந்து மெதுவாய் நடந்து சென்றது . பூனையின் சொந்தக்காரன் இழுத்த இழுப்பில் கழுத்தில் பட்டையொடு விரைந்ததப் பூனை . பின்னொருநாளில் அந்த பூனையைப் பார்க்கையில் சோகம் கழிக்க என்று கையேந்த யோசித்த நேரம் கையில் கீறி ரத்தம் சொட்டச் செய்தது வீட்டுப் பூனையின் நினைவு **** 2 - பூனையின் குரல் _________________ நாயும் பூனையும் நித்தம் சண்டையிடும் வீட்டில் நாயின் குரல் ஓங்கி இருந்தது இருவரையும் நிறுத்தச் சொல்லிக் கத்தி சென்றான் வீட்டுக் காரன் பூனையின் குரல் அவனிடமும் வழக்கம் போலவே தாழ்ந்திருந்தது. உன் நியாயத்தை எஜமானனிடமாவது எடுத்து சொல் என்றேன் பூனையிடம் என் அடிமைகளிடம் நான் அதிகம் பேசுவதில்லை என்றது அந்த பூனை. ****** 3 - இளிச்சவாய் பூனை. ___________________ மகளின் கதைப் புத்தகத்தில் அறிமுகமானது அந்த பூனை காதளவு நீளும் புன்னகையுடன் உனக்கும் சிரிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றேன் சிரிப்பை எனக்கள...