சிறுகதை பாங்காக்கில்தமிழ்ப் பெண் என்று கேட்டதும் சட்டென்று உள்ளே பரபரப்பானது. அதுவரை பெண் விஷயத்தில் அசட்டையாக, சமர்த்தாக இருந்தவன்தான். தாக சாந்தி என்று பார்ட்டிகளில் கிடைக்கும். அளவாக அருந்துவான். எதாவது வாய் தவறிவிடுமோ, கேலியாக ரகளையாக கிவிடுமோ, என்று பயத்துடன், அத்தோடு அன்றைய நாளை முடித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பி, தாள் போட்டுக்கொண்டு படுத்துவிடுவான். காலையில் மூளை தெளிய எழுந்து கொள்வதில் கவனமாய் இருப்பான். தலைவலி என்று இழுத்துப் போட்டுக் கொள்ளமாட்டான். முந்தைய நாள் இரவு அவனுக்கே கனவு போலிருக்கும். ஆனால் தாக சாந்தி இல்லை, இது தேக சாந்தி! வேண்டாம் ...என மறுக்க சட்டென வாய் வரவில்லை. வேண்டும் என்று சொல்லவும் கூச்சமாய், தயக்கமாய் இருந்தது. இன்னும் முழுசாய் ஒருநாள் இருந்தது கையில். கான்டிராக்ட் விவாதங்களில் இழுபறி இருக்கலாம். பேசித் தீர்க்க, சரிசெய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கலாம்... கூட ஒருநாளாகும் என அவன் அலுவலகத்தில் எதிர்பார்த்திருந்தார்கள். இவன் காட்டிய செக்யூரிட்டிகள் அவர்களுக...