எத்தனையோ கனமான பொருட்களை இந்தக் கைகள்தூக்கிச் சென்றிருக்கின்றன விழாக்கள் போதும் சடங்குகள் போதும் இப்போது வெறுமனே கட்டிக் கொண்டிருந்தாலும் கைகள் சுமையாக இருக்கின்றன
நிமிடங்கள் சந்திக்கையில் நாள் உருவானது கிழமைகள் சந்திக்கையில் வாரம் உருவானது வாரங்கள் சந்திக்கையில் வருடம் உருவானது வருடங்கள் சந்திக்கையில் எனும்போது இறங்க வேண்டிய தளம் நெருங்க நிலைக்கண்ணாடியில் தந்தையின் உருவம் எனை நோக்க திகைப்புடன் நகர்ந்தேன்