Skip to main content

Posts

Showing posts with the label அ.தியாகராஜன்

பாஞ்சாலி சபதம்

    தொலைபேசியில் உன் முகம் வாரந்தோறும் நிழலாடும்- இது தவிர வேறென்ன உன் நினைவு பாலைவனத்து எண்ணைக் கிணறுகள் டாலரின் முகம் காட்டி உன் முகத்தைப் பறித்தது பழங்கதை மறந்து போன கதை   நீ அனுப்பிய டாங்க் ஆரஞ்ஜ் யாருடைய தாகத்தை தணிக்காதே பெருக்கியதென்பதை நீ அறியாதிருப்பதே நலம்-   காலையின் உதயம் கலைந்ததைச் சரிசெய்யும் உன் நினைவுகள் அடுத்த வாரம் வரை காத்தேயிருக்கும்-   ஒன்றில் மட்டும் உறுதியுண்டு சபதமென- குழந்தையொன்று பேறானால் அது உன்னுடையதாகத்தான் இருக்கும் பிறக்கும் இது சத்தியமே  

அனுவாகம்

ஒரு நிமிடம் தான் திரும்பி ஒரே ஒரு பார்வை தான் குசுகுசுக்கள் எல்லாம் அடங்கின இங்கே பார்வைகள் மட்டுமே காக்காய்கள் போல இப்படியும் அப்படியும் ஆட்டம் கண்டன- மௌன சொற்கள் இல்லை மௌனத்தில் சொற்கள் பதுங்கிச் செல்லும் படுத்துப் பதுங்கிச் செல்லும் ஜீவன்கள் போலே- ஏதோ இரண்டு வெவ்வேறு கபடி ஆட்டக் கட்சிகள் போல- சிந்சியரிட்டி இல்லையென்றால் ஏன் இங்கு? என்னுடைய செல் போன் கூவியது- இல்லை நடுங்கியது.. அணைத்து வைக்க முடியவில்லை பாஸ் அழைத்தால்? எடுத்துப் பார்த்து பின்னரே கவனித்தேன் அடுத்த அனுவாகத்துக்கு எல்லோரும் சென்றிருந்தனர் குகுசுத்தவர்களும் கூடவே

இரண்டு கவிதைகள்

ஏன் வீண் பரீக்ஷை? காலையில் ஜாகிங்க் செல்ல ஒரு தனி ஷூ வாங்க வேண்டும் என்றார்கள்- என்ன ரேஞ்ஜ் என்று கேட்ட கடையின் பையன் எதை எனக்குக் காண்பிப்பதென்றும் கையிலிருந்த ரூபாய் ஆயிரத்து ஐனூறு நான் வாங்கவேண்டிய ஷூவையும்முடிவு செய்தன... எங்கள் வீட்டு ஜோச்யர் எட்டில் சனியென்று என் சனி காலைகளை மற்றும் மாலைகளையும் முடிவு செய்தார்.. இந்த வாரம் எப்படி நான் வணங்க வேண்டிய கடவுளரையும் சொல்ல வேண்டிய தோத்திரங்களையும் முடிவு செய்தது.. என் காலைகளை தண்ணீர் வரும் நேரமும் பள்ளிக்கூட ஊர்த்தியின் நேரமும் சபர்பன் ரயிலின் டைம்டேபிளும் என் எதிர் வீட்டு நண்பனும் மனைவியின் வேகமும் இன்னம் எத்தனையோ- பல உதவாவிட்டாலும் உபத்திரவம் பண்ணமுடியுமே- என் நாளை என் மானேஜர் உட்பட பலர்.. யாருக்கு என்ன- எல்லோரும் இதே பாடானால் இது ஒன்றும் புதிய பாடல் அல்லவே ஆனாலும் புதுப்புது ராகங்கள் விதவித தாளங்கள் வாத்தியங்கள் டெக்னாலஜி வழி மாறினென்ன! என் ஷூ சரியாகவே யிருந்தது ப்ராண்டடாகயில்லாவிட்டாலென்ன- என் வேண்டுதல்கள் ஏதோரு விதத்தில் எனக்கு மட்டுமின்றி தாய் மற்றும் மனைவி மக்களுக்கு இதமாகவே யிருந்தது.... எல்லோருக்கும் நான் என் மனோ வாக்கு...