Skip to main content

Posts

Showing posts from March, 2022

79 வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

   அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 79வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6.30மணிக்கு (25.03.2022) நடைபெற்றது. அதன் காணொளியை இங்கே காணலாம்.

78வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 78வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (12.03.2022) நடக்க உள்ளது. ஏன் கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை? என்ற தலைப்பில் அரை மணிநேரம் உரையாடல். உரையாடல் முடிந்த பிறகு, உங்களுடைய கவிதைகளை வாசிக்கலாம்.  உங்களுக்குப் பிடித்த கவிதைகளை வாசிக்கலாம்.  மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்கலாம். நீங்கள் தரும் உற்சாகம்தான் கவிதைகளை உயிர்ப்புடன் உணர வைக்க முடியும்.  ஆதலால் உங்கள் வரவு முக்கியம். Topic: 78வது விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம் Time: Mar 12, 2022 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88398834151... Meeting ID: 883 9883 4151 Passcode: 450705

துளி 247

  என் அரங்கில் புத்தகம் திருட்டுப் போகிறது.. அழகியசிங்கர் 45வது புத்தகக் காட்சி ஒரு வழியாக முடிந்தது.  ஆரம்பத்தில் சுறுசுறுப்பில்லாமல் இருந்தது.  சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.  நான் ஒரு வழியாக யு  டர்ன்   எடுத்துச்   சுற்றிச்  சுற்றி  17 எண்ணுள்ள  ஸ்டாலுக்கு  வந்துவிடுவேன். பின் மாலை வரை இருப்பேன்.  என் நண்பர்களின் உதவியுடன். “ வழக்கம்போல புத்தகக் காட்சியில் இந்த முறையும் என்  ஸ்டாலில்  புத்தகம் திருட்டுப் போனது. மற்ற  அரங்குகளிலிருந்து  புத்தகங்கள் ஒரு பகுதியும், என் புத்தக  ஸ்டாலில்  விருட்சம் புத்தகங்களையும் வைத்து விற்பேன். இந்த முறையும் அப்படித்தான் செய்தேன். அடையாளம் பதிப்பகம் கொண்டு வந்த ' சலூன்   நாற்காலியில்  சுழன்றபடி' என்ற 1000 பக்கங்கள் கொண்ட கோணங்கியின் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று தோன்றாமல் இருக்காது. நான் வாங்கி  என் ஸ்டாலில்  விற்பதற்கு வைத்திருந்தேன். கடைசி நாளில் அந்தப் புத்தகம் காணாமல் போய்வ...

போர்

  அழகியசிங்கர் ரஷ்யா ஏன் உக்ரைனுடன் சண்டை இடுகிறது நமக்கு அதனால்  பெற்றோல்  விலை அதிகமாகி விட்டது வெங்கடேஸ்வர  போளி  ஸ்டாலில்   உருளைக்கிழங்கு  சிப்ஸ்  ₹ 40 ஆகிவிட்டது படிக்கச் சென்ற இந்திய  மாணவ மாணவிகள் நிலை என்ன? பத்திரமாகத்  திரும்பி வருவார்களா? உலக அரங்கில் இது ஒரு அபத்த நாடகம் இந்தப் போரால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்கிறோம் யாரிடம் யார் சொல்வது