அழகியசிங்கர் என் அலுவலக நண்பரின் பெண்ணிற்குத் திருமணம். பத்திரிகை அனுப்பியிருந்தார். பின், போனில் கூப்பிட்டார். நானும் அவரும் சீர்காழி என்ற ஊரில் உள்ள வங்கிக் கிளையில் ஒன்றாகப் பணிவுரிந்து கொண்டிருந்தோம். அங்கே அதிக நேரம் பேசிக்கொண்டிருப்போம். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது ஒன்றாக கிளம்பிப் போவோம். இதோ நான் அலுவலகத்தை விட்டு 4 ஆண்டுகள் முடியப் போகிறது. அவர் இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு எனக்குப் பத்திரிகை அனுப்பியிருந்தார். நான் இருக்குமிடம் மாம்பலம். திருமணம் நடக்குமிடம் புழுதிவாக்கத்தில் உள்ள மூவரசம் பேட்டை கூட்டு ரோடில் உள்ள ஒரு கல்யாண மண்டபம்.7.30க்கு ரிசப்ஷன். நான் மாலை 5.30 மணிக்கே கிளம்பி மடிப்பாக்கத்தில் உள்ள என் பெண் வீட்டிற்குச் சென்றேன். அங்கே ஒரு அரை மணி நேரம் இருந்தேன். "மழை பெய்யப் போகிறது..சீக்கிரம் போ," என்றாள் பெண். நான் அங்கிருந்து கிளம்பி கல்யாண மண்டபத்தை அடைந்தேன். சரியாக 7.15 மணி ஆகிவிட்டது. அலுவலக நண்பர் வாசலில் நின்று என்னை உபசரித்தார். இந்த நான்கு வருடங்க...