அழகியசிங்கர் நான் ஒரு பையை எப்போதும் வைத்திருப்பேன். அந்தப் பையின் பெயர் பத்மா காபி பை. துணிப்பைதான். ஆனால் உறுதியான பை. இந்தப் பை மூலம் என் புத்தகங்களை எல்லா இடங்களிலும் சுமந்து வருவேன். புதிய புத்தகங்கள் ஆனாலும் பழைய புத்தகங்கள் ஆனாலும் சுமப்பதற்கு உறுதியான பை. அகலமான பெரிய பை. தினத்தந்தி பேபர்பர்களைக் கொண்டு வருவார்களே அதுமாதிரியான பை. நான் மயிலாடுதுறை செல்லும்போது இந்த பத்மா காபி பையை வாங்கிக்கொண்டு வந்து விடுவேன். என்னிடம் இப்படி அதிகமாக 7 அல்லது 8 பைகள் சேர்நதிருக்கும். இந்தப் பை ஒவ்வொன்றும் ரூ.60 விலை. எனக்கு யாராவது இந்தப் பையை மட்டும் தானமாகக் கேட்டால் கொடுக்க மனசு வராது. ஆனால் என் வீட்டில் பணிபுரிபவருக்கு ஒரு பையைக் கொடுத்து விட்டேன். திரும்பவும் மயிலாடுதுறைக்குச் சென்று இன்னும் இரண்டு முன்று பைகள் வாங்கி வந்து விட்டேன். பத்மா காபி என்று விளம்பரம் படுத்தியிருக்கும் இந்தப் பையில் பத்மா காபி எப்படி இருக்குமென்று தெரியாது. வாழ்க பத்மா காபி. பையை விளம்பரப் படுத்தி வழ...