Skip to main content

Posts

Showing posts from June, 2015

எதையாவது சொல்லட்டுமா........98

அகியசிங்கர் மாம்பலத்தில் ஆர்யாகவுடர் ரோடு என்றுழ உள்ளது.  அந்த ரோடு ஒருவர் நடந்து போனல் போதும், பொழுது நன்றாகப் போய்விடும்.  மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.  எளிதில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக முடியாது.  நான் கிட்டத்தட்ட அநத ரோடு வாசி.  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டல் காலனி முதல் தெருவில்தான் இருந்தேன்.  நல்ல சென்டரான இடம்.  ரோடு அகலமாக இருக்கும்.  ரொம்ப குறைவான அடுக்ககத்தில் நாங்கள் இருந்தாலும், எந்த இடத்திற்கும் அங்கிருந்து போய்விட முடியும்.  அந்தத் தெருவை ஒட்டித்தான் ஆர்யாகவுடர் ரோடு உள்ளது.  அயோத்தியா மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும் கூட்டம் நடக்கும். பாட்டுக் கச்சேரி நடக்கும்.  கதை உபன்யாசம் நடக்கும்.  எனக்குக் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் குறைவு.  ஆனால் நாத்திகன் கிடையாது.  என் வீட்டில் உள்ளவர்கள் அயோத்தியா மண்டபம் போக வேண்டுமென்று சொன்னால், அயோக்கியா மண்டபமா என்று கேட்பேன்.  உடனே வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள்.  நான் சிரித்துக்கொள்வேன்.   நாங்கள்...

ஒரு வருத்தமான சந்திப்பு...

அழகியசிங்கர் போனவாரம் செவ்வாய்க் கிழமை நானும், பெ சு மணி அவர்களும் லா சு ரங்கராஜன் என்ற முதிய எழுத்தாளரைப் போய்ப் பார்த்தோம்.  அவர் உடல்நிலை சரியில்லாமல் சிரமப்படுவதாக பெ சு மணி சொன்னபோது, பெ சு மணியை அழைத்துக் கொண்டு அவரைப் போய்ப் பார்ப்பது என்று தீர்மானித்தேன்.   டிசம்பர் 1930ல் பிறந்த லாசு ரங்கராஜன் ஒரு காந்திய அறிஞர்.  சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் உதவி ஆசிரியராக 1952-55 வரை பணியாற்றினார்.  பின்னர் புது டில்லியில் மத்திய அரசு தலைமைச் செயலகத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார்.    மகாத்மாகாந்தியின் ஆதாரபூர்வமான எழுத்துக்கள், பேச்சுக்கள் யாவற்றையும் திரட்டித் தக்க அடிக்குறிப்புகளுடன் காலவாரியாகத் தொகுத்து நூறு தொகுதிகள் கொண்ட நூல் வரிடசையைப் பதிப்பிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான திட்டத்தை மேற்கொள்ளும் பொருட்டு "கலெக்டட் ஒர்க்ஸ் ஆஃப் மகாத்மா காநதி" என்ற பெயரில் இந்திய அரசு தனி அலுவலகத்தில் லா சு ரங்கராஜன் விசேஷ அதிகாரியாகவும், பின்னர் துணை இயக்குநராகவும் நியமனம் பெற்றார்.  அங்கு கால் நூற்றாண்டு (196...

அப்பாவும் நானும்

அழகியசிங்கர் அப்பாவிற்கு 93 வயது.  எனக்கும் 61 வயது.  இந்தப் புதிய இடத்திற்கு வந்தபிறகு, அப்பாவால் வாசலைத் தாண்டி வெளியே வந்து நடக்க முடியவில்லை.  வீட்டிலேயே நடப்பார்.  பெரும்பாலும் தூங்கி வழிவார்.  எழுந்தவுடன் தினசரிகள் வந்து விட்டதா என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.  தினசரிகளை எடுத்து அப்பா முன் வைப்பேன்.  அதற்கு முன் அப்பா பால்கனி முன் நின்று தெருவில் வருவோர் போவோரைப் பார்த்து கை அசைப்பார்.  எல்லோருடைய பெயர்களையும் கூப்பிட்டு காலை வணக்கம் சொல்வார்.  நலமுடன் வாழ்க என்பார்.  சிலரைப் பார்த்து, üகாப்பி  சாப்பிட வரட்டுமா?ý என்பார்.  தெருவில் விளையாடும் சிறுவர்களிடம், மாஜிக் செய்வதாக சொல்வார்.  அப்பா எப்போதும் காலையில் சின்ன தட்டை எடுத்து வைத்துக்கொண்டு உணவு உண்பார்.  அந்தச் சின்ன தட்டில் கொஞ்சம் சாதம் வைத்துக்கொண்டு, ரசம் அல்லது சாம்பாரை பிசைந்து சாபபிடுவார்.  பின் தூங்கச் சென்று விடுவார்.  தூங்கிய பிறகு திரும்பவும் எழுந்து குளிக்கப் போவார்.  குளித்து விட்டு வந்தபிறகு தானே ஒரு பெரிய த...

கசடதபற APRIL 1971 - 7வது இதழ்

தோட்டி ந  மகாகணபதி                              ஈக்களை, நேற்று விரட்டி நீ படுத்திருக்கையில் மற்ற குப்பைகளை வாரிப்போனேன். கடித்து மகிழ்ந்த கரும்புச் சக்கைகள் கால் பரப்பிக் கிடக்கும் பழத்தோல்கள். வாடிய இலைகள் இவற்றை விட்டு ஈக்கள் உன்னை, இன்று மொய்க்க, நீ அவற்றை விரட்டவில்லை மூலையில் வழக்கமாய் மாடுகள் நிற்க நானும் நிற்க, வேலையும் நிற்கிறது நடக்காமல. இந்தத் கவிதையை எப்படி அர்த்தப்படுத்துவது.  படுத்திருப்பவள் தோட்டியா?  அவளுக்கு உதவியாய் அவளுக்கு நெருக்கமானவள் வருகிறாள்.  அடுத்த நாள் ஈக்கள் படுத்துக்கிடந்தவளை மொய்கிறது.  அப்படியென்றால் அவள் சவமாக மாறிவிட்டாள்.  அவளுக்கு உதவி செய்ய வந்தவள் ஒன்றும் தோன்றாமல் நிற்கிறாள்.  அற்புதமான கவிதை.

கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்

அழகியசிங்கர்                                                      3                            விருட்சம் கூட்டத்தில் ஜெயகாந்தனைப் பற்றி அசோகமித்திரன் பேசியது.   ஜெயகாந்தன் சின்ன வயசிலேயே எழுத ஆரம்பித்து விட்டார்.  ஆரம்பத்தில் அவர் பொது உடமை அதைச் சார்ந்த வெளியீடுகளுக்காக எழுத ஆரம்பித்திருந்தார்.  பத்திரிகையில் அவர் கதை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.  அவர் எழுதியவுடனே பத்திரிகையில் பிரசுரம் ஆக வேண்டும்.  ஒரு வாரம் தள்ளிப் போட்டால் கூட அவர் சண்டைப் போடுவார்.  ஆனந்தவிகடன் அந்தக் காலத்திலே முத்திரை கதைகளை வெளியிட்டது.  நீலவன், துமிலன், வையவன் என்று மூன்று பேர்களும் முத்திரைக் கதைகள்  எழுதி உள்ளனர்.  ஆனால் நீலவனும், துமிலனும் தொடர்ந்து எழுதவில்லை.  ஆனால் வையவன் கல்கியில் தொடர்ந்து எழுதினார். மகரிஷி...

புத்தக விமர்சனம்:

ரோஜா நிறச்சட்டை – அழகியசிங்கர் - விருட்சம் வெளியீடு.     ஜெ.பாஸ்கரன். சிறுகதை என்பது, ஒரு மையக் கருவை அல்லது அனுபவத்தை ( அதிக நீளம் இல்லாத ) கதையாக உரைநடையில் எழுதும் ஓர் இலக்கிய வகை என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. அழகியசிங்கரின் ‘ரோஜா நிறச்சட்டை’ அவரது நான்காவது கதைத் தொகுதி. எல்லாக் கதைகளுமே, வங்கிகளில் நடக்கும் தினசரி அலுவல்களின் சவால்களும், முரண்களும்தான் ! வங்கி மேலாளர், அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள், தற்காலிக வேலையில் இருப்பவர்கள் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் என, கதை மாந்தர்கள் சுற்றி வருகின்றனர். மிக இயல்பாக, வங்கியிலும், வெளியிலும் அங்கு பணிபுரிபுரிபவர்களின் மனோ பாவங்களை, எந்த ஏற்ற இறக்கங்களும் இல்லாமல், ஒரே நேர்க் கோட்டில் கதை சொல்லிக்கொண்டே போகிறார் அழகியசிங்கர். ஒவ்வொரு கதையிலும் யதார்த்தம் முழுமையாக விரவியுள்ளது ! சில சமயங்களில் கதைகள், கட்டுரை வடிவை  அடைந்து விடுகின்றன – கதையின் மையப்புள்ளியிலிருந்து சற்று விலகி, வாசகனின் கற்பனைக்கு வழிவிட்டுத் திரும்பவும் கதைக்குள் திரும்பி, சட்டென முடிந்துவிடுகிறது,! கதைசொல்லி...

கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்

அழகியசிங்கர்                                                                                          2. மூன்றாவது கூட்டமாக விருட்சம் சார்பில் நானும் கோவிந்தராஜ÷ம் சேர்ந்து நடத்திய கூட்டம்.  23.05.2015 அன்று நடந்தது. இது விருட்சம் நடத்தும் 12வது கூட்டம்.  கூட்டத்திற்கு 40 பேர்கள் வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இக் கூட்டம் ஜெயகாந்தன் நினைவாக நடத்தப்பட்ட கூட்டம்.  கூட்டத்தில் முக்கிய பேச்சாளிகளாக அசோகமித்திரனும், ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரான கே எஸ் சுப்பிரமணியனும் கலந்து கொள்வதாக அறிவிப்பு செய்திருந்தேன்.  இதைத் தவிர உமாபாலு என்பவரும், டாக்டர் ஜெ பாஸ்கரனும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.  இது விருட்சம் நடத்தும் 12வது கூட்டம்.     கூட்டத்தின் ஆரம்பத்தில், திரு பெ சு மணி பாரதியார் கவிதையை ராகமிட்டு அருமையாகப் ப...

தன் திசையில் வெகுதூரம்..

புத்தக விமர்சனம்    'காலங்களைக் கடந்து வருபவன்' சுஜாதா செல்வராஜின் கவிதைத் தொகுப்பு - ஒரு பார்வை   ராமலக்ஷ்மி க விதைகளின் நோக்கம் வாழ்வின் அழகியலை, தத்துவங்களை, உண்மைகளைத் தேடுவதாக மட்டுமே இருந்து விடுவதில்லை. இத் தேடல்கள் அனுபவங்கள் சார்ந்தவையாக, கவிஞரின் ஆழ்மனதில் எழும்பும் கேள்விகளை முன் வைப்பவையாக இருக்கின்றன. உண்மையோ கற்பனையோ, பொதுவான சம்பவங்களைச் சுற்றியவையோ அல்லது கேள்விப்படாத விசித்திரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருபவையோ, மனதை வருடுபவையோ அல்லது அதிர வைப்பவையோ..  எல்லா வகை அனுபவங்களையும் உள்ளடக்கியவை கவிதைகள்.  நம்மைச் சுற்றி நாம் வளர்த்துக் கொண்டிருக்கும் பாதுகாப்பான எச்சரிக்கை வளையங்களைத் துணிச்சலுடன் வெட்டியெறிந்து முற்றிலுமாக கவிஞரின் கோணத்தில் வாழ்க்கை அனுபவங்களைக் கடத்துகிறவை. கவிஞர் சுஜாதாவின் கவிதைகள் இதை அநாயாசமாகச் செய்திருக்கின்றன. பெண்ணின் பார்வையில் நகருகிற பெரும்பாலான கவிதைகள் ஆணினால், சமூகத்தினால் ஏற்படும் தீராத மன அழுத்தத்தை, அதிலிருந்து மீள இயலாத துயரத்தை, சந்திக்கும் துரோகத்தை, இதுதான் யதார்த்தம் ...

கசடதபற APRIL 1971 - 7வது இதழ்

வெப்பம் பாலகுமாரன் நீரோடு கோலம் காணா நிலைப் படியும் நெளிந்தாடு சேலையில்லாத துணிக்கொடியும் மலரவிட்டு தரை உதிர்க்கும் பூச் செடியும் வாளியும் கிணற்றடியும் துவைக்கும் கல்லும் வரளுகின்றன - என்னைப் போல் அவளில்லா வெறுமையில்.

கசடதபற MARCH 1971 - 6வது இதழ்

ஞானக்கூத்தன் அன்று வேறு கிழமை நிழலுக்காகப் பாடையின் கீழ் பதுங்கிப் போச்சு நாயொன்று பதுங்கிப் போன நாய் வயிற்றில் கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி காலால் உதைத்தான்.  நாய் நகர மேற்குக் கோடிப் பிணந்தூக்கி எட்டி உதைத்தான்.  அது நகர தெற்குக் கோடிப் பிணந்தூக்கி தானும் உதைத்தான்.  அது விலக வடக்குக் கோடிப் பிணந்தூக்கி முந்தி உதைத்தான்.  இடக்கால்கள் எட்டா நிலையில் மையத்தில் பதுங்கிப் போச்சு நாய் ஒடுங்கி. நான்கு பேரும் இடக்காலை நடுவில் நீட்டப் பெரும்பாடை நழுவித் தெருவில் விழுந்துவிட ஓட்டம் பிடித்து, அவர்கள் மீண்டும் பாடை தூக்கப் பாடையின் கீழ் பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்....