Skip to main content

Posts

Showing posts from January, 2015

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்

சிலை வீனஸ் முலையின் செழுமையை அர சிலைக்குக் கொடுத்தால் கலைப் பொருளாகாமல், குலைந்து  போய் விடும்டü விலைமகள் போலென, து கிலைச் சுற்றினானோ சிலையை வடித்த சிற்பி? காதல் குமரித்துறைவன் மந்தையில் ஈரத்திட்டை முகர்ந்த இளங்காளை சிலிர்த்து கனைத்து தலை உயர்த்தி சிரித்தது.

எதையாவது சொல்லட்டுமா......98

    அழகியசிங்கர்     புத்தகக் காட்சி என்பது நண்பர்களை, உறவினர்களை, எழுத்தாளர்களை சந்திப்பதற்காக அமைந்த இடம்.  இந்த முறை கூட்டம் அதிகம்.  கடைசி நாள் கூட கூட்டம் வந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு முறையும் புத்தகக் காட்சியின் போது, கால சுப்பிரமணியமை சந்திப்பது வழக்கம்.  என் கடையில் அவர் சிறிது நேரம் இல்லாமல் இருக்க மாட்டார்.  அவர் முகத்தைப் பார்க்கும்போது ஒரு நீண்ட மௌனம் தொங்கிக் கொண்டிருப்பதாக தோன்றும்.  சத்தமாகவே பேச மாட்டார்.  யாருடனும் அவர் சண்டைப் போட்டு நான் பார்த்ததில்லை.  ஆனால் தன்னுடைய அபிப்பிராயத்தில் அவர் உறுதியாக இருப்பார்.  பிரமிளைத் தவிர வேற யாரையாவது அவர் எழுத்தாளராகக் கருதுகிறாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருக்கும்.  ஆனால் நானோ வேற மாதிரி.  அவரை மாதிரி எழுத்தாளர்களை உதற மாட்டேன்.      ஒரு எழுத்து சரியில்லாத எழுத்து என்று சொல்வதை நான் கொஞ்சம் விட்டுவிட்டேன்.  அதனால் கையில் கிடைக்கும் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பேன்.  கவிதைகள் எழுதும் கவிஞர்கள் மீத...

தெரு

     1978 ஆம் வாக்கில் எங்கள் தெருவிற்கு வந்துவிட்டோம.  தெருவின் இரு பக்கங்களிலும் சாக்கடைகள் இருக்கும்.  அவ்வப்போது சாக்கடை அடைத்துக் கொள்ளும்.  என் அப்பாதான் தெருவிற்கு தலைவர்.  அவர்தான் வேறு வழியின்றி அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடை சகதியை அப்புறப்படுத்துவார்.      அதிமுக சார்பில் நின்ற ஒரு எம்எல்ஏ தெருவிற்கு தேர்தலுக்கு முன் வந்திருந்து ஒவ்வொருவரிடமும் தெருவைப் பற்றிய குறைகளை கேட்டார்.  எல்லோரும் சாக்கடையைப் பற்றியும், முனையில் கட்டியிருக்கும் மாடுகளைப் பற்றியும் சொன்னோம்.      ரொம்ப நாளைக்குப் பிறகு சாக்கடைப் பிரச்சினை தீர்ந்தது.  ஆனால் மாடுகள் பிரச்சினை தீரவில்லை.  தெருவின் இன்னொரு முனை வழியாக வேறு ஒரு பிரதான சாலைக்குச் சென்று விடலாம்.  ஒரு சந்து வழியாக போக வேண்டும்.  அந்தச் சந்தின் பெயர் மொட்டையம்மாள் சந்து என்று பெயர்.  அங்கு திருட்டுத்தனமாக சாராயம் விற்பார்கள்.  அங்கு சாராயம் விற்பவர் பெயர்தான் மொட்டையம்மாள்.  கெட்ட வார்த்தை சொல்லி திட்...

மாதொருபாகன் சில சிந்தனைகள்

அழகியசிங்கர் இந்து நாளிதழ் 14 01 2015ல் 'எழுத்தாளன் செத்துவிட்டான்' என்ற தலைப்பில் பெருமாள் முருகன் எழுதி கையெழுத்திட்ட அறிவிப்பைப் படிக்கும்போது சற்று வருத்தமாக இருந்தது.  பெருமாள் முருகன் ஏன் இப்படி எழுத வேண்டுமென்று தோன்றியது.  பெருமாள் முருகன் ஒரு திறமையான எழுத்தாளர்.  மிகச் சிறிய வயதிலேயே அவர் நாவல்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்.  முதன் முதலாக அவர் ஏறு வெயில் என்ற நாவலை எடுத்துக்கொண்டு இலக்கியச் சிந்தனை கூட்டத்தில் விற்பதற்கு வந்தார்.   அவரே அதைப் புத்தகமாக கொண்டு வந்ததைக் பார்த்தவுடன் ஆச்சரியமாக இருந்தது.  அவர் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தால்தான் அப்படி ஒரு செயலை அவர் செய்ய முடியும். இப்படி ஒரு திறமையான எழுத்தாளர், பத்திரிகைகளை நம்பாமல் தானே எழுதத் துவங்கியவர், இன்று மாதொருபாகன் என்ற நாவலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பால் எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று எழுதிவிட்டார்.  படிக்கும் பலருக்கு ஏன் இப்படி ஒரு அறிக்கையைக் கொடுத்தார் என்றுதான் தோன்றுகிறது.   அந்த நாவலில் அவர் தேவையில்லாதவற்றை எழுதியதால் இந்தப் பிரச்சினை...