அழகியசிங்கர் சி சு செல்லப்பா கூட்டம் ஒன்று ஜனவரி மாதம் நடந்தது. அதில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார். சி சு செல்லப்பாவின் நெருங்கிய நண்பர். செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் எழுதியவர். அவர் நடந்து வரும்போது யாரோ ஒருவர் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு வரும்படியாக இருந்தது. முறுக்கிய மீசையுடன் கம்பீரமாகக் காட்சி அளிப்பவர். பேசும்போது தயங்கி தயங்கி பேசுவதுபோல் இருந்தாலும், யாரும் அவரது பேச்சை ரசிப்பார்கள். கிட்டத்தட்ட 75 வயதாவது அவருக்கு இருக்கும். தமிழில் சிறந்த சிறுகதைகளை எழுதியவர். ஆனால் அவர் தன்னை சிறுகதை எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன். நாடகத்தில் தீவிரமாக கவனம் செலுத்துபவர். ஒவ்வொரு நடிகனும் வசனம் பேசும்போது எப்படி உச்சரிக்க வேண்டுமென்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் சி சு செல்லப்பாவை குறித்து தன் எண்ண ஓட்டத்தைத் தெளிவாகப் பேசினார். அவரின் கம்பீரமான குரலுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் அன்று அவர் துண...